"ராஜபக்சே நாசமா போவான்" சபிக்கும் தமிழகம் நக்கீரன்

இதுக்கு மேலே ஒரு அநியாயம் உலகத்திலேயே இருக்க முடியாதுங்க. எத்தனை குழந்தைங்களை குண்டு போட்டுக் கொல்லுறாங்க. எத்தனை பொம்பளைங்களை சீரழிக்கிறாங்க. வீட்டையும் இழந்து, காட்டிலும் இருக்க முடியாம செத்து மடியுது தமிழ் சனம். தினம் தினம் இதை டி.வி.யில பார்க்குறப்ப நமக்கே ரத்தமெல்லாம் கொதிக்குது. இந்தியாவை ஆட்சி பண்ணுறவங்க என்னத்த பண்ணிக்கிட்டிருக்காங்க?

-மக்கள் ஆய்வகத்தின் சார்பில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்திய கருத்தாய்வில் மக்கள் வெளிப்படுத்திய கருத்துகளின் சாராம்சம் இதுதான். சென்னை லயோலா கல்லூரியின் கீழ் இயங்கும் மக்கள் ஆய்வகம் நடத் திய இந்த ஆய் வில் இலங்கைத் தமிழர் பிரச் சினை தமிழக அரசியல் களத் திலும் தேர்தலி லும் எத்தகைய தாக்கத்தை ஏற் படுத்தும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

-ஒவ்வொரு கட்சி யும் தன்னிச்சையாகச் செயல்படாமல் முதல் வர் தலைமையில் ஒன்றிணைந்து செயல் படவேண்டுமென 86 சதவீதத்தினர் தெரிவித் துள்ளனர். தி.மு.க. தலைவர் துணிச்சலாக செயல்படவேண்டும் என 71 சதவீதம் பேர் தெரிவிப்பதுடன், இப்பிரச்சினையை முன்னிட்டு தி.மு.க. ஆட்சியை இழக்க நேரிட்டால் அடுத்து வரும் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரமுடியும் என 58.5 சதவீதத்தினர் தெரிவிக்கின்றனர். 20 சதவீதம்பேர் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்கின்றனர்.

-இலங்கைத் தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும், இதில் காங்கிரசுக்கு 39 சதவீத பாதிப்பும், மத்திய அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு 24.5 சதவீத பாதிப்பும் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு 21 சதவீத பாதிப்பும் ஏற்படுமென கள ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கள ஆய்வுகள் குறித்து நம்மிடம் பேசிய மக்கள் ஆய்வகத்தின் பேராசிரியரான டாக்டர் ராஜநாயகம், ""இலங்கைத் தமிழர் பிரச் சினை என்பது மிக முக்கியமான பிரச்சினை யாக இருப்பதால் இதுபற்றி தமிழக மக்க ளின் மனநிலையைத் தெரிந்துகொள் வதற்காக இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தினோம். ஜனவரி 13 முதல் 18-ந் தேதி வரை முதல் கட்ட ஆய்வு. ஜனவரி 25 முதல் 31 வரை இரண்டாவது கட்ட ஆய்வு.

இதை சர்வே என்று சொல்வதை விட கள ஆய்வு என்பதுதான் பொ ருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது எண் களின் அடிப்படையில் எடுக்கப்படாமல் எண்ணங் களின் அடிப்படையில் எடுக் கப்பட்டுள்ளது. முத்துக் குமார் தீக்குளிப்பின் போது களஆய்வின் கடைசி கட்டத்தில் இருந்தோம். அதனால் அதன் முழுமையான தாக்க மும், தி.மு.க. செயற்குழு தீர்மானங்கள், கடையடைப்பு ஆகியவையும் இதில் பிரதிபலித்திருக்காது. அவற்றையும் கணக்கில்கொண்டால் இந்த எண்ணங் கள் இன்னும் அதிக வீச்சுடன் இருக்கும்'' என்கிறார்.

மக்களின் எண்ணங்களை 14 மணி நேர வீடியோ வாக பதிவு செய்துள் ளார்கள் கள ஆய் வில் ஈடுபட்ட மாண வர்கள். அவர்கள் தங்களின் அனுபவங் களை நம்முடன் பகிர்ந்துகொண்ட போது, இதற்கு முன் பல சர்வேக்களுக் காக மக்களைச் சந் தித்திருந்தாலும் இது எங்களுக்கு புது அனுபவமாக இருந்தது. மக்களிடம் இந்தளவுக்கு தமிழின உணர்வு இருக் கும் என்பது சென்னைவாசிகளான எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந் தது. வடமாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஏறத்தாழ 100 சதவீதம் மக்களும் இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் இதே உணர்ச்சி யலையைப் பார்க்க முடிகிறது.

பொதுவாக, அரசியல் கட்சிகள் அனைத்துமே இப்பிரச்சினையில் உண்மையான அக்கறை செலுத்த வில்லை என்று சொல்லும் மக்கள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்பிரச்சினை இப்படியே நீடித்தால் நிச்சயம் எம்.பி.தேர்தலில் விளைவுகள் தெரியும் என்ற மாணவர்கள், மக்களின் எண்ணங் களை பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளைப் போட்டுக் காட்டினர்.

""கொழந்தைங்களெல்லாம் பாலுக்கு ஏங்கி ஏங்கியே மூச்சு திணறி செத்துப் போகிற கொடுமை வேற எங்கேயாவது உண்டா?''

""பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாம ஆடு, மாடு மாதிரி பசங்களெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கிறதைப் பார்த்தா நெஞ்சு பதறுது''.

""வயசானவங்களெல்லாம் குண்டுவீச்சுக்கு தப்பிக்க முடியாம, செத்தே போயிடலாம்னு குண்டு விழுகிற இடமா பார்த்து உட்காருகிற நிலைமை இருக்கே! இதை யார்கிட்டே போய் சொல்றது?''.

""தமிழன் அடிபட்டா கேட்க நாதியே இல்லையா?''

""அங்கே நடக்குற கொடுமைகளை டி.வி.யில பார்க்கும்போது சோறு தண்ணி இறங்க மாட்டேங்கு துங்க''.

""நம்ம தொப்புள்கொடி உறவு களை குண்டு போட்டுக் கொல் லும் ராஜபக்சே நாசமா போவான்''.

-உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படுகின்றன மக்களின் எண்ணங்கள்.

-சகா

Posted in |

4 comments:

 1. Tharuthalai Says:

  எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
  கயவன் கருணானிதி - துரோகி
  வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி

  இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற

  ------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

 2. Anonymous Says:

  தமிழகத்தில் ஆட்சி மூலமாகச் செயல் பட விரும்புவர்கள்:
  1.இலங்கைத் தூதரை வெளியே அனுப்ப வேண்டும்.
  2.போர் நிறுத்தும் வரை இலங்கையுடன் எந்தத் தொடர்பும் கிடையாது
  3.தமிழகத் தலைவர் குழு வடக்கே,கிழக்கே எந்த தடையும் இல்லாமல் சென்று பார்த்து வர வேண்டும்.
  4.ஐ.நா. சபையில் அவரசரக் கூட்டம் வேண்டும் என்று போராட வைக்க வேண்டும்.

  ஆட்சியை எதிர்த்து போராட்டம் செய்பவர்கள்:
  அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் மூட வைக்க வேண்டும். ஆங்காங்கே மருத்துவம்னை குண்டு வீச்சு,வெடிப்பு,பச்சைக் குழந்தை பாதகச் செயல் போன்ற படங்களைத் தமிழகம் முழுதும் வைக்க வேண்டும்.

 3. Mike Says:

  உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

 4. நான் கடவுள் Says:

  ராஜபக்சே எதிரி தான். அதுல எந்த மாற்று கருத்தும் இல்ல.
  அவன பிரபாகரன் பாத்துக்குவாரு.
  ஆனால் தமிழ்நாட்ல இருக்குற துரோகிகள(காங்கிரஸ்காரனுங்க) என்ன பண்றது.
  தமிழ்நாட்டு மக்கள்(வீரர்கள்) ஈழபிரச்சனைக்காக தங்கள அழிச்சிக்காம, ஆளுக்கு இரண்டு துரோகிகள அழிச்சா நல்லா இருக்கும். வீரர்கள் உயிர் போராட்டத்துக்கு தேவை. துரோகிகள் இருந்தாலும் மண் இறந்தாலும் மண். துரோகிகள துரத்திட்டோம்னா பாதி பிரச்சனை தீர்ந்துடும். அதுக்கு அப்புறம் தான் நம்ம உதவிகளும் உணர்வுகளும் முழுமையா ஈழ தமிழர்களுக்கு போய் சேரும்.

  மீதி இருந்க்குற பொய்யான அரசியல்வதிகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் வர்ற தேர்தல்ல கண்டிப்பா புத்தி புகட்டுவாங்க. அந்த அளவுக்கு தமிழ்நாட்ல இப்ப புரட்சி வெடிச்சிகிட்டு இருக்கு.

  வாழ்க பிரபாகரன்..... வளர்க புரட்சி.......வெல்க ஈழம்....

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails