உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் : பிரான்ஸ்
Posted On Friday, 6 February 2009 at at 10:31 by Mikeவிசேட செய்தி இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பல தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத் தீர்வினை எட்ட முடியும் என பிரான்ஸ் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து நாட்டின் அனைத்து குடிமக்களது உரிமைகளையும் பேணும் வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யுத்தம் காரணமாக பெருந்தொகையாக சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரான்ஸ் அரசாங்கம் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
thanks http://www.nerudal.com/nerudal.412.html