தற்காலிக போர்நிறுத்தம் செய்யவேண்டும்-அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்தல் : குமுதம்
Posted On Wednesday, 4 February 2009 at at 05:46 by Mikeவாஷிங்டன்: இலங்கையில், அரசியல் தீர்வு காண்பதே சிறந்தது என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் கூறியுள்ளன.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியை, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இலங்கையில் நடைபெறும் போரால், அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். எனவே, இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் தற்காலிக போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். போர் பகுதியில், பொதுமக்களையும், படுகாயம் அடைந்தவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், போர் வளையத்துக்குள் பரிதவிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு, செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளுக்கு, தடையின்றி அனுமதி அளிக்கவேண்டும் என்றும், அங்கு அரசியல் தீர்வு காண இருதரப்பும் முயற்சிக்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.