திருமா-வின் போராட்ட பிண்ணனி என்ன- நக்கீரன்

ஒட்டுமொத்தமாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படணும்ங்கிறதுதான் தமிழகத்தின் உறுதியான குரல். இதற்கு மத்திய அரசிட மிருந்து இதுவரை சாதகமான நடவடிக்கைகள் இல்லை. மீண்டும் இதுபற்றி பிர தமரிடம் வலியுறுத்தணும்னு முதல்வரிடம் ராமதாஸ், கி.வீரமணி, திருமாவளவன் மூவரும் 12ந் தேதி நேரில் சந்தித்துக் கேட்டுக்கிட்டாங்க. இந்த நிலையில், 15ந் தேதியன்னைக்கு திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய தால் தமிழக அரசியல் களம் சூடாகிவிட்டதே!''

பெரியார் திடலுக்கு அதிகமா வராத ராமதாஸ், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழகத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றி ணைந்து நிற்கணும்ங்கிற அக்கறை யுடன் பெரியார் திடலுக்கு திருமாவோடு வந்து, வீரமணியை சந்தித்துப் பேசியதோடு, மூவரும் முதல்வரை சந்தித்தும் பேசி னாங்க. அப்ப, இலங்கைத் தமிழர் களின் பிரச்சினை தீரணும்ங்கிறதில் கலைஞர் இவ்வளவு தீவிரமா இருப்பாருங்கிறதை ராமதாசும் திருமாவும் எதிர்பார்க்கலையாம். அவர்களிடம் முதல்வர், இப்ப நான் என்ன பண்ணனும்? பிரச்சினை தீரும்னா ஆட்சியை இழக்கவும் நான் தயார். எப்படி செயல்பட ணும்னு சொல்லுங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்.''

அவங்க என்ன சொன்னாங் களாம்?''

எங்களுக்கும் என்ன செய்வதுன்னு தெரியலை. மத்திய அரசிடம் நேரில் சென்று வலியுறுத்தினீங்க. மீண்டும் அதை நீங்க வலியுறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளணும்னு சொல்லியிருக்காங்க. அதற்கு கலைஞர், அண்ணா சமாதி முன்னால் உண்ணாவிரதம் இருக்கட்டுமான்னு கேட்டிருக் கிறார். அதற்கு வீரமணி, உங்க உடல்நிலையைக் கருதி இதை யெல்லாம் செய்ய வேண்டாம். மத்திய அரசை வலியுறுத்துங் கன்னு சொல்லியிருக்காங்க. சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும், எல்லோரும் சேர்ந்து உண்ணா விரதம் இருக்கலாம்ங்கிற ஐடியாவை முன்வைத்த ராமதாஸ், ஒரு 2 மணிநேரம் மட்டும் முதல்வர் கலந்துகொண்டால் போதும்னும் சொல்லியிருக்கிறார். தமிழகத் தின் முக்கிய தலைவர்கள் அனை வரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒரே மேடையில் குரல் கொடுக்கணும்ங்கிறதுதான் ராமதாசின் விருப்பம்.''

மற்ற தலைவர்களிடமும் பேசினாரா?

அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக வைகோ, நெடுமாறன் ஆகியோரைத் தொடர்புகொண்டபோது, எங்ககிட்டே சொல்லாமல் நீங்கள் ஏன் கலைஞரைப் போய்ப் பார்த்தீங்க? அவர் என்ன செய்யப் போறார்னு கேட்டு, ஆலோசனை கூட்டத்துக்கு வரமறுத்துட்டாங்களாம். இதையடுத்து, ஆலோசனை கூட்டமும் நடக்கலை. எல்லோரும் சேர்ந்து உண்ணா விரதமிருப்பதுங்கிற திட்டமும் கைவிடப் பட்டது. இந்த நிலையில், இதையடுத்துதான், திருமாவளவன் தனியா உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 15ந் தேதி உட்கார்ந்துவிட்டார். இது அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கிடக்கூடாதுங்கிறதால, தொடர்ந்து சமாதான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் இப்படியொரு சூழல் நிலவுகிற நிலையில், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார்னு முதல்வர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களிடம் உறுதியளிக்கப்பட்டதற்கு மாறாக, வெளி யுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனனை அனுப்பி வைத்ததே இந்திய அரசு?

ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுட னான சந்திப்புக்குப் பிறகு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, பிரணாப் முகர்ஜி ஆகி யோரை நேரில் பார்க்கச் சொன்னார் கலைஞர். பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தியபிறகுதான் மேனனை கொழும்புக்கு அனுப்பியது மத்திய அரசு. அதுவும், சார்க் மாநாடு பற்றிப் பேசுவது தான் மேனன் பயணத்தின் முக்கிய நோக்கம். இலங்கையில் போரை நிறுத்துச் சொல்வது சம்பந்தமா எந்த அஜண்டாவுமில்லை. இலங்கைத் தமிழர் விஷயத்தில் மத்திய அரசு எதுவும் செய்யலைங்கிற வருத்தம் தி.மு.க. தரப்புக்கு இருக்கு.

நன்றி : நக்கீரன்

Posted in |

5 comments:

 1. அது சரி Says:

  //
  இலங்கைத் தமிழர் விஷயத்தில் மத்திய அரசு எதுவும் செய்யலைங்கிற வருத்தம் தி.மு.க. தரப்புக்கு இருக்கு.
  //

  தி.மு.க மட்டுமில்ல...எல்லாருக்கும் இருக்கு..

  பாலஸ்தீன பிரச்சினைல அறிக்கை விட்ற இந்திய அரசுக்கு இலங்கை தமிழர் பிரச்சினைல வாய் திறக்க விருப்பம் இல்ல...

  அவரு போறாரு, இவரு போறாருன்னு சும்மா படம் காட்டறானுங்க...ஏன் அங்க போயி சொல்றத இங்க இருந்து சொல்ல முடியாதா??

  இந்தியா நினைச்சா இதை ஐ.நா சபைக்கு கொண்டு போயி அங்க நடக்கிற படுகொலைகளை நிறுத்த முடியாதா??

  செய்றதுக்கு மனசு இல்ல...ஆனா ஜனநாயக நாடு, புண்ணாக்குன்னு படம் மட்டும் ரொம்ப பெரிசா போடுவானுங்க..

 2. சுவாதி சுவாமி. Says:

  இலங்கை தன்னைப் பார்த்து பயப்பட வேண்டுமென்று தான் இந்தியா இத்தனை காலமும் எதிர்பார்த்தது; அதனாலேயே சிங்கள அரசுகளை அச்சுறுத்த ஈழத் தமிழர் பிரச்சினையில் தீர்வு காணல் என்ற நாடகத்தை நடத்தி ஈழத் தமிழரை நம்பிக்கை மோசம் செய்தது; சிங்கள அரசை மிரட்டி வந்தது. வந்தான் பார் ராஜப்க்சே. கைகுலுக்கினான் பார் இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தானுடனும், சீனாவுடனு. இப்ப இந்தியா இலங்கையைப் பார்த்து பயப்பிடுதோ..என்னமோ? அங்க வாலும் இங்க தலையும் காட்டுற விலாங்கு மாதிரி இப்ப தனது சொந்த தேச மக்களின் குரலைக் கூட செவிமடுக்காமல் அவர்களிடமே பொய் சொல்லுது...

 3. Anonymous Says:

  ஒரே பதில் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் காங்கிரசின்,அதன் தலைவியின் பழி வாங்கும் எண்ணத்தில் காரித்துப்பி மக்களைச் சந்திக்க வேண்டியது தான்.
  தமிழினத்தின் அமோக ஆதரவு இருக்கும் என்பதில் அய்யப்படவேண்டியதில்லை.
  காங்கிரசுக்குச் சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
  தமிழக 40 இல்லாமல் யாராலும் ஆள முடியாது.

 4. வெத்து வேட்டு Says:

  if all(or majority) general Tamil Nadu Public is against Central's decision why any political parties are not talking???
  the situation is very clear general public doesn't give a damn hoot about Eelam and their "umblical" relationship...that is why all parties are not talking about bringing down Central....hehehhee
  bye bye Eelam...bye bye Brave Bravados...
  let's wait for what Rajapakshe and Indian Central Govt feel about giving rights to Tamils hehehe

 5. uuuuuuuuuuuuuuuuuu Says:

  இவர்கள் (கருணாநிதி, ராமதாஸ், திருமாவளவன் வகையறா) அடிப்பதெல்லாம் வெறும் அரசியல் Stunt.

  சென்ற பொதுத்தேர்தலின் போது மத்தியிலும் மாநிலத்திலும் நாங்களே ஆண்டால் கிழிப்போம், முறிப்போம் வெட்டுவோம் என்று ஏன் வேற்று அலம்பல் செய்தார்கள். சொகுசாக சம்பாரிக்கத்தானே.

  நிஜமாகவே ஈழத்தமிழர் விஷயத்தில் மத்திய அரசை பணிய வைக்க கெடு வைத்து ஆதரவு வாபஸ் என்று கூற யோக்கியதை உண்டா.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails