எது வீழ்ந்தாலும், எமது நம்பிக்கை வீழாது
Posted On Friday, 9 January 2009 at at 10:31 by Mikeகருணாநிதி, ஜெ, மகிந்த, மன்மோகன் அனைவருக்கும் நான் சொல்லி கொல்வது என்னவென்றால் நீங்கள் என்னதான் உங்களின் சுய நலத்திற்காக தமிழர்களை அழித்து, ஒழிக்க நினைத்தாலும், அது ஒரு நாளும் நடவாது. நாங்கள் ஒரு போதும் சோர்வடைய மாட்டோம். தமிழனின் வாழ்வில் விடிவு கிடைக்கும் வரை போராடுவோம்.
உலக மக்களிடம் நீதி கேட்போம், இன்று நீங்கள் நினைத்தது எல்லாம் நடப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனந்த கூத்தாடலாம், ஆனால் ஒரு நாள் உண்மை வெல்லும்.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்'
தங்கள் சொந்த மண்ணில் சிறீலங்கா அரசு கடந்த முப்பது வருடங்களாக எப்படி தமிழர்களை அடக்கி ஒடுக்கி படுகொலைகளை செய்து வருகிறதோ அதே போல அண்மைக்காலமாக உலக நாடுகளெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளிற்கான ஆதரவுக்கரத்தினையும் முறித்து ஈழத்தமிழர்களிற்கான உரிமைபோராட்டத்தின் ஆதரவு குரலையும் அடக்கிவிடும் நோக்கத்துடன் எலும்புத்துண்டுகளிற்காய் எச்சில் வடிய காத்திருக்கு சில விலைபோன தலைவர்களின் செய்கைகளை கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியை என்ன சொல்வது.
காங்கிரசின் ஹசன் அலியின் பித்தலாட்டங்கள் குறித்து ஏதும் கேள்வி கேட்க முடிந்ததா உங்களால், தமிழனுக்கு குரல் கொடுத்த ஒருவரை உள்ளே பிடித்து வைத்து நாடகம் ஆடும் உங்களை எப்படி தமிழின தலைவனாக ஏற்று கொள்ள முடியும் இனி.
இதையும் விட்டுட்டிங்களே மைக்
சிக்கிய இரகசிய கடிதங்கள்- சிங்கள அரசோடு கொஞ்சிக் குலாவும் தமிழக காங்கிரஸ்
http://thamilar.blogspot.com/2008/12/blog-post_4842.html
பொட்டு அம்மான் இலங்கை அரசிடம் சரணடைந்துள்ளதாக செய்திகள் கசிகின்றனவே..
உண்மையா?
புலிகள் நிழத்தை இழக்க, இழக்க அவர்களுக்கான ஆதரவு தமிழ் மக்களிடம் இருந்து பெருகுமே தவிர குறையாது.
http://muranthodai.blogspot.com/2009/01/blog-post_09.html