இலங்கையின் ஈழத்தமிழர்களும், அறிந்து கொள்ளவேண்டிய அரிய செய்திகள்

முதல் வரியில் சொல்லப்பட்ட செய்தி ஆச்சரியமளிக்கிறது, அது இதுதான்

(ஈழத் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று விரும்பும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் - இணையதளத்தில் கிடைத்தது) பாராட்டுகுறியது, எத்தனை பத்திருக்கைகளுக்கு இந்த பெருந்தன்மை வரும்.

சரி இனி செய்தியை தெரிந்து கொள்வோம் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது இது.

அய்ரோப்பியக் காலனியர்கள் கால்வைத்த காலத்தில், இப்பொழுது சிறீலங்கா என்றும், அப்பொழுது சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவில், மூன்று முடியரசுகள் இருந்தன; ஒவ்வொன்றும் முழு அதிகாரம் பெற்ற தனியரசாகவும், தனித்தனி நில எல்லையைக் கொண்டதாகவும் இருந்தது. அந்த மூன்று அரசுகளையும் 1833இல் பிரிட்டிஷ் அரசு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்தது. 1948இல் விடுதலை அளித்த பொழுது, தீவு முழுமைக்குமான ஆட்சியை, பெரும்பான்மை தேசியமான சிங்களரின் கீழ் பிரிட்டன் ஒப்படைத்தது.

நீதியும் தன்மதிப்பும் உடையவர்களாய், சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் உரிமைப்போர் நடத்து கிறார்கள். நாடு விடுதலையடைந்த காலத்தில் இருந்து, அரசியல், பொருளாதாரத் துறைகளில், பெரும்பான்மை சிங்களத் தேசியம் மேலாதிக்கம் செலுத்துகிறது; இராணுவத்தைக் கொண்டு தமிழர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது; அவர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படுகிறது; அவர்களுடைய மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

1956ஆம் ஆண்டுவரை, ஓர் ஒற்றை ஆட்சியில் இருக்கத் தமிழர்கள் ஒத்துக் கொண்டனர்; 1956ஆம் ஆண்டுக்குப் பின்பு, கூட்டாட்சி அரசமைப்பில், சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழத் தயாராக இருந்தனர். ஆனால், தொடர்ந்து மோசமாக நடத்தப் பட்டதால், 1976 முதல், அதாவது விடுதலையடைந்து 28 ஆண்டுகளுக்குப் பின்பு, சிங்களப் பகுதியில் இருந்து தமிழர் தம் தாயகத்தைப் பிரித்து, விடுதலையுடன் வாழ முடிவு செய்தனர்.

தமிழர்கள், தங்களுக்கு எனத் தனி மொழியையும், நிலப்ப குதியையும் உடையவர்கள்; அவர்களுடைய நாகரிக வரலாறு 5,000 ஆண்டுப் பழமையானது, அவர்களுக்கெனத் தனித்த சமயக் கொள்கையும் பண்பாடும் உண்டு; தனித்த தேசியம் ஒன்றிற்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் தமிழர்களுக்கு உண்டு.

இலங்கைத் தீவில், சிங்களம், மற்றும் தமிழ்த் தேசியம், ஆகிய இரண்டும் போரிட்டுக் கொள்ளாமல் தனித் தனியாக அமைதியாக வாழ்வதுதானே சிறந்தது?
போர்ச்சுக்கீசியர், 1505 ஆம் ஆண்டு சிலோனுக்கு வந்த, முதல் அய்ரோப்பியக் காலனியர் ஆவர். சிங்களப் பகுதியை வென்று 100 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழ்ப் பகுதிகளைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீசியரை அடுத்து, ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் ஆட்சி, சிலோன் எனப்பட்ட இலங்கையில் ஏற்பட்டது. டச்சுக்காரர்களிடமிருந்து, ஆங்கிலேயர் ஆட்சியைக் கைப்பற்றினர். பிரிட்டனின் காலனியச் செயலாளர் ஒருவர் 1799 இல் முதன் முதலில் சிலோனுக்கு வந்து கிளகோன் குறிப்பு (ஊடநபாடிச ஆரேவந) என ஒன்றை அளித்தார். சிலோனில் அப்பொழுது வாழ்ந்த மக்களைப் பற்றியும், அவர்களின் நில எல்லை களைப் பற்றியும் அது கூறுகிறது.

சிங்கள இனத்தை நிறுவியவன் எனப் புராணப்படி, விஜயன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். விஜயன் சிலோனுக்கு வந்த பொழுது, அங்கு ஏற்கனவே தமிழர்கள் இருந்தனர் என்பதைச் சிங்கள வரலாற்று ஆசிரியர் பால் ஈ.போரிஸ் என்பவர் எழுதியுள்ளார். விஜயன் சிலோனில் இறங்கிய பொழுது, அந்தத் தீவில் வெவ்வேறு பகுதிகளில் அய்ந்து தொன்மையான வழிபாட்டு இடங்கள் (ஈஸ்வரங்கள்) தமிழர்களால் நிறுவப்பட்டிருந்தன.

சிங்களப் பகுதியில் உள்ள கண்டி முடியரசை 1815இல் பிரிட்டன் கைப்பற்றியது. போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டானியர் ஆகிய மூன்று காலனிய ஆட்சியரும், ஒருவரை அடுத்து ஒருவர், இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்தனர். 1833இல் பிரிட்டிஷ் ஆட்சி, மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தது.

சிங்களரும் தமிழரும் தனித்தனி மக்கள், வேறுபட்ட தேசியங்கள்; தேசியத்திற்கு உரிய அனைத்து இயற்கூறுகளும் (ஹவவசரெவநள) அவை ஒவ்வொன்றிற்கும் உண்டு. அய்க்கிய நாடுகள் அவையின் சட்ட திட்டங்களின்படி (ஊடிஎநயேவேள) அவற்றிற்கு சுய நிர்ணய உரிமை உண்டு.

காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை சிலோனுக்கு 1948இல் பிரிட்டன் விடுதலையளித்தது. அப்பொழுது, செனட் எனும் இரண்டாவது அவையைக் கொண்ட ஓர் ஒற்றை ஆட்சிமுறை அரசமைப்பு (ருவையசல ஊடிளேவவைரவடி) நடைமுறைக்கு வந்தது; அந்த அரசமைப்பின் 29ஆம் பிரிவின்படி, சிறுபான்மையருக்குச் சிறிய பாதுகாப்புத் தரப்பட்டது. சிலோன் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, பிரிட்டனின் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி யளிக்கப்பட்டது. வெஸ்ட் மின்ஸ்டர் முறை எனும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையின்கீழ், சிலோனில் 74 விழுக்காடு மக்களாக உள்ள சிங்களவர், அந்நாட்டில் எப்பொழுதும், தங்களுடைய பெரும் பான்மைத் தேசியத்தின் ஆட்சியை நிறுவ முடிந்தது.

சிலோன் விடுதலை அடைந்த பின்பு முதலில் இயற்றப்பட்ட சட்டங்களில் ஒன்று, குடியுரிமைச் சட்டமாகும். அதன்படி, இந்திய வம்சாவழித் தமிழர்களில் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) மக்கள் குடியுரிமை யிழந்தனர். இதனால், இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் உறுப்பினர் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்தது.

(குறிப்பு: இலங்கையில் உள்ள தமிழர்களில் இருவகையினர் உண்டு. ஒரு வகையினர், ஈழத் தமிழர் எனப்படுகிறவர்கள். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, சிங்களவர்களுக்கு முன்பு இருந்தே அத்தீவில் வாழ்கிறவர்கள். இன்னொருவகையினர், இந்திய வம்சாவழித் தமிழர்கள். இவர்கள் 1800களில், தமிழ் நாட்டில் இருந்து, ரப்பர், காஃபி, தேயிலை முதலிய மலைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.)

அரசின் ஏற்பாட்டின்படி சிங்களவர் குடியமர்த்தம் அடுத்தடுத்து வந்த சிங்கள அரசுகள், திட்டமிட்டபடி, தமிழரின் தாயகப் பகுதிகளில் சிங்களரைக் குடியமர்த்தியது; இத்தகைய தவறான நடிவடிக்கைகளைத் தடுக்கத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை. புதிதாக நீர்ப்பாசனம் பெற்ற தமிழ்ப் பகுதிகளில், அரசு உதவி யுடன் சிங்களர் குடியமர்த்தப்பட்டனர்; தமிழர்களையும் இஸ்லாமியர் களையும் விரட்டிவிட்டு அப்பகுதிகளிலும் சிங்களரைக் குடியேற்றினர்.

இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக வாழ்வதைக் குலைக்கும் வகையில், அவர்களின் தாயகப் பகுதியைப் பிரிக்கும் பொருட்டுத் திட்டமிட்டு புதிய சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இடங்கள், மற்றும் தெருக்களுக்குச் சிங்கள மொழிப் பெயர்கள் வைக்கப்பட்டன; இன்னும் அது தொடர்கிறது; பவுத்தக் கோயில்களும் சிலைகளும் புதிதாகப் பாரம்பரியத் தமிழ்ப் பகுதிகளில் நிறுவப்படுகின்றன. தமிழ்ப் பகுதிகளில் இவ்வாறு திட்டமிட்டுச் சிங்களர்களைப் பெரும்பான்மை ஆக்குவதால், நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர் எண்ணிக்கை குறைகிறது.

வடகிழக்கில் பெரும்பரப்புள்ள நிலங்கள் உயர் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன; யாழ்ப்பாணத் தீபகற் பத்தில் மூன்றில் ஒரு பகுதி விளைநிலங்கள் இவ்வாறு அறிவிக்கப் பட்டிருக்கின்றன. தங்களுடைய உணவில் புரதத் சத்திற்கு மீனைப் பெரும்பாலும் சார்ந்திருப்பவர்கள் தமிழர்கள்; அவர்களுடைய தாயகப் பகுதியின் கடற்கரை முழுதும் கிட்டத்தட்ட உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும், வேளாண்மைத் தொழில் செய்யவும், மீன் பிடிக்கவும், வர்த்தகத்தை மேற்கொள்ளவும் தடைகள் உண்டாக்கப் பட்டிருக்கின்றன; அந்த இடங்களில் உள்ள சிங்களப் படை வீரர்களின் ஊழல், மற்றும் போர் ஆகியன வடகிழக்குப் பகுதியின் பொருளா தாரத்தை அடிமட்ட நிலைக்குத் தள்ளிவிட்டன. வெளிநாட்டில் உள்ள குடும்பத்தார் அனுப்பும் பணத்தைக் கொண்டு அங்குள்ளவர்கள் காலந்தள்ள வேண்டியிருக்கிறது.
தமிழன் அழிப்பு (யீடிபசடிஅள):

1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் பெரிய அளவில் கொல்லப்பட்டனர்; தாக்குதலுக்கு உள்ளாகி இடம் பெயர்ந்தனர்; 1983இல் தமிழ் இனப்படுகொலை எனச் சொல்லும் அளவிற்குச் சிங்களர் தமிழர்களைத் தாக்கினர்; 4000 தமிழர் மாண்டனர்; தமிழரின் தொழில்களின் சொத்துகள் 95 விழுக்காடு அழிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குச் சந்திரிகா குமாரதுங்கா போட்டியிட்டபொழுது தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பட்டியலிட்டார்; கிட்டத்தட்ட எட்டு லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டுச் சென்று விட்டனர்; அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். 10 லட்சம் பேருக்கு மேலான தமிழர்கள் உள்நாட்டிலேயே பல முறை இடம்பெயர்ந்து ஏதிலிகளாய் (அகதிகளாய்) வாழ்கிறார்கள். இலங்கையில் உள்ள 30 லட்சம் தமிழர்களில் இவ்வாறு அல்லல்படு வோரின் தொகை மிக அதிக விகிதமாகும்.

சந்திரிகா இவ்வாறு உரைத்ததற்குப் பின்பு, அதைப் போன்றே அதிக அளவில் தமிழர்களுக்கு இடர்கள் ஏற்பட்டுள்ளன. ஆள் கடத்தல், சித்திரவதை, வன்புணர்ச்சி, கொலைகள், காணாமல் போதல், குண்டுப் பொழிவுக்கு இலக்காதல், கடற்பகுதிகளில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - போன்றவை, தமிழர்களின் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டன. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறை யினர், துணைக் காவல் துறையினர், துணைப் படையினர் ஆகியோர், கேள்வி கேட்பாடு இன்றித் தமிழர்களை ஏதேனும் ஒரு வகையில் வதைக்கிறார்கள்.

தமிழர் விழைவு பூடான் நாட்டின் தலைநகர் திம்புவில், 1985இல் இந்தியா பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தது. எல்லா இலங்கைத் தமிழ்ப் போராளிகளும், அரசியல்வாதிகளும் தங்களுடைய கோரிக்கையைச் கூட்டாக, ஒன்று சேர்ந்து, வேறுபாடு இன்றித் தெரிவித்தன; வெளிப்படையாகக் கூறின. தீர்வு ஒன்று காணப்படவேண்டுமானால் அக்கோரிக்கைகள் முற்றாக ஏற்கப்படவேண்டும்.

திம்புவில் வெளியிடப்பட்ட கொள்கைகள்:
அ) தமிழர்களை ஒரு தேசியமாக ஏற்க வேண்டும்.
ஆ) தமிழரின் தாயகம் எனும் கருத்தை ஏற்க வேண்டும்.
இ) தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவேண்டும்.
13வது அரசமைப்புத் திருத்தம்

இந்தியா - சிறீலங்கா ஒப்பந்தம் 1987இல் கையொப்பம் இடப்பட்டது. அதற்குப் பின்பு இலங்கை அரசமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தத்தின்படி இலங்கையில் உள்ள தமிழரின் தாயகம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, அதன்படி மாநிலங்களுக்கு ஓரளவு தன்னாட்சி அளிக்கப்படவேண்டும்; அதுவும் நிறைவேற்றப்படவில்லை. வடக்கு மாநிலத்தையும், கிழக்கு மாநிலத்தையும் இணைத்துத் தமிழர் தாயகத்தை ஒன்றாக்குவது அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது; ஆட்சியில் உள்ளவர்கள் எடுக்கும் நிலைக்குத்தக்கவாறு தீர்ப்புத் தரப்பட்டிருக்கிறது. தமிழ் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பினும் நடைமுறைக்கு அது வரவில்லை.
பயங்கரவாதமா? விடுதலைப் போரா?

தமிழ் இளைஞர்கள் 1970களின் பிற்பகுதியில் ஆயுதம் ஏந்தத் தொடங்கினர்;
அ) மக்கள் வாக்கெடுப்பில் வெளிப்படுத்தியபடி தங்கள் தாயகத்தை விடுவிக்கவும்,
ஆ) அரசு பயங்கரவாதத்தை முறியடிக்கவும், அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள்.

இந்தப் போரில் ஈடுபட்டிருப்பவர்களைப் பயங்கரவாதிகள் எனக் கூறுவது சரியன்று. இராணுவம் அல்லாத பொதுவான குடிமக்களில் இதுவரை இறந்தவர்களில் 95 விழுக்காட்டினர் தமிழர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று; அவர்கள் சிங்களப் படையினராலும், துணைப் படையினராலும் கொல்லப்பட்டனர்.

சிங்கள இன ஆதிக்கம்

சிறீலங்கா விடுதலை அடைந்தவுடன், சிங்களர் தங்களுடைய மேலாதிக்கப் போக்கைத் தொடங்கிவிட்டனர். வேலை வாய்ப்பு, கல்வி, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் தமிழருக்கு எதிராக வேறுபாடு காட்டி ஆட்சி செய்தனர். அரசின் உதவியுடன் திட்டமிட்டுச் சிங்களரைத் தமிழ்ப் பகுதிகளில் குடியமர்த்தினர். தமிழருக்கு எதிராக வேறுபாடு காட்டுவதும், அவர்களுக்கு மரபுவழியில் உரிய நிலப்பகுதியில் அவர்களுடைய எண்ணிக்கையின் விகிதத்தைக் குறைப்பதுமான சிங்களரின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 1924இல், கிழக்கு மாநிலத்தில் சிங்கள மக்கள் தொகை 4 விழுக்காட்டிற்குச் சற்று அதிகமாக இருந்தது; இப் பொழுது அது 30 விழுக்காட்டைத் தாண்டிவிட்டதாக மதிப்பிடப் படுகிறது; மேற்கொண்டும் சிங்களரைக் கொண்டு நிரப்புகிறார்கள்.

ஈழத் தமிழர்கள் சிறீலங்காவில் 12 விழுக்காட்டினர், ஆனால், அரசு உத்தியோகத்தில் 5 விழுக்காடு மட்டுமே உள்ளனர்.
விடுதலைக்குப் பின்பு தங்களுக்கு நேரிட்ட கேடுகளைக் களைய, மக்களாட்சி வகையில் நாடாளுமன்ற முறையில், வன்முறையற்ற காந்திய சத்தியாகிரக வழியில் தமிழர்கள் கிளர்ச்சி செய்தனர். சிறீலங்கா ராணுவத்தில் 99 விழுக்காடும், காவல்துறையில் 95 விழுக்காடும் சிங்களவர் உள்ளனர். சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கும், அவர்களுடைய உடைமைகளுக்கும், எதிராக வன்முறையில் ஈடுபடும்பொழுது, ராணுவமும் காவல்துறையும் கண்டுகொள்வது இல்லை.

1952-1956-1976 சிங்களருடன் முதலில் தமிழர்கள் ஒற்றையரசு (ருவையசல ளுவயவந) முறையில் வாழவிரும்பினர். 1952ஆம் ஆண்டுத் தேர்தலில், தமிழர்கள், கூட்டரசுக் கட்சியை எதிர்த்து, ஒற்றையரசு முறையை ஆதரித்த தமிழ் காங்கிரசுக்கு பெரிய அளவில் வாக்களித்தனர்.

தங்களுக்கு எதிராக வேற்றுமை காட்டியதாலும், அடக்கு முறை ஏவப்பட்டதாலும் 1956 தேர்தலில், கூட்டரசுக் கட்சிக்கு வாக் களித்தனர். அந்தத் தேர்தலில், தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் எனக்கூறிப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர். இதிலிருந்து, 1956இல், விடுதலையை விடக் கூட்டாட்சி முறையையே ஈழத் தமிழர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது.

தமிழரின் எதிர்ப்புக்கு இடையே, 1956இல், சிங்களத்தை மட்டும் அலுவல் மொழியாக்கும் சட்டத்தை சிறீலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதையடுத்துத் தீவு முழுவதும், தமிழர்கள் பெரும் அளவில், 1956, 1958ஆம் ஆண்டுகளில் தாக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டனர்.

1960ஆம் ஆண்டிற்குப் பின்பு, வடகிழக்குப் பகுதியில் ராணுவம் நிலையாக நிறுத்தப்பட்டது. இதைக் கையகப்படுத்தும் ராணுவம் (யசஅல டிக டிஉஉரயீயவடி) எனப் பிரதமர் வருணித்தார். சிறீலங்காவின் தேசியக் கொடியில், சிங்களவரின் சின்னமாகிய சிங்கம் பெரிய அளவில் இடம் பெற்றது. அந்நாட்டின், நாட்டுப் பண் சிங்கள மொழியில் அமைந்ததாகும்.

தமிழர்களின் கூட்டரசக் கட்சிக்கும், ஆட்சியில் இருந்த சிங்களக் கட்சி அரசுகளுக்கும் இடையில் இரண்டு முறை, தமிழர்களுக்குத் தன்னாட்சி தருவதற்கான ஒப்பந்தங்கள்செய்யப்பட்டன. ஒவ்வொரு முறையும் சிங்கள எதிர்க்கட்சி ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்தால், 1957, மற்றும் 1965 ஒப்பந்தங்களை சிறீலங்கா அரசு தானே பின்வாங்கிக் கொண்டது.
தமிழர்கள் பங்கு பெறாமலேயே, 1972இல் சிறீலங்கா புதிய அரசமைப்பை உருவாக்கியது. அதன்படி நாடு குடியரசு ஆயிற்று, பவுத்தம் அரசு மதம் ஆயிற்று, செனெட் சபை ஒழிக்கப்பட்டது, பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்வது நீக்கப்பட்டது, சிறுபான்மை யருக்குச் சிறிது அளவு பாதுகாப்புத் தந்த 29ஆம் அரசமைப்புச் சட்டப் பிரிவும் இடம்பெறாமல் போயிற்று.

தங்களுடைய இடர்களுக்கு எவ்வகை நிவாரணமும் கிடைக்கப் பெறாததாலும், தொடர்ந்து அடிக்கடி பெருந்தாக்குதலுக்கு ஆட்பட்டதாலும் 1976இல் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்தன. தமிழ் முடிமன்னர்கள்ஆண்டுவந்த, தமிழர்களின் மரபுவழித் தாயகத்திற்கு விடுதலை பெற முயலுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு, அக்கட்சிகள் ஒருங்குகூடித் தீர்மானம் நிறைவேற்றின. தங்களுடைய பிரதிநிதிகளுக்கு, தமிழ் மக்கள் அளித்த ஒப்பளிப்பு (ஆயனேயவந) இதுவாகும்.

1977ஆம் ஆண்டுத் தேர்தலிலும், அதற்குப் பின்பு நடந்த தேர்தல்களிலும், இலங்கைத் தமிழர்கள், விடுதலையைக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துக்கொண்டு இருக்கிறார்கள்; அதில் மாற்றம் இல்லை.
செயல் அதிகாரம் (நஒநஉரவஎந) படைத்த குடியரசுத் தலைவர் ஆட்சி முறையைக் கொண்ட, புதிய அரசமைப்பு 1978இல் நிறை வேற்றப்பட்டது. இதை வரைவதிலும் தமிழரின் பகராளர்கள் (பிரதிநிதிகள்) கலந்துகொள்ளவில்லை. ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களையும் தான் பெற்றிருப்பதாக, ஜெயவர்த்தனே, இந்த அரசமைப்பைப் பற்றிக் கூறினார். தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அக்கறை செலுத்தவில்லை; ஆனால், என்னுடைய சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என, ஜெயவர்த்தனே இங்கிலாந்து நாட்டின் டெய்லி டெலகிராஃப் (னுயடைல கூநடநபசயயீ) இதழுக்குப் பேட்டி கொடுத்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் ஜெயவர்த்தனே கொண்டுவந்தார். இனஒதுக்கல் கொள்கையைப் பின்பற்றிய தென் ஆஃபிரிக்காவில்கூடக் காணப்படாத, உலகிலேயே மிக மிக மோசமான அடக்கு முறைச் சட்டம் என, பன்னாட்டு சட்ட வல்லுநர், பால் சீகர்ட் (ஞயரட ளுநபையசவ) கருத்தறிவித்தார்.
1983 பிரிவினையைப் பற்றிப் பேசுவது குற்றம் என, 1983இல் இயற்றப் பெற்ற அரசமைப்புத் திருத்தம் விதித்தது. இதைத் தொடர்ந்து, சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ் உறுப்பினர்கள், இந்தியாவிற்கு வெளியேறிவிட்டனர்.

1983ஆம் ஆண்டிற்குப் பின்பு ஈழத்தமிழர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இன்றிப் போய்விட்டது; ஏன் என்று கேட்பார் இன்றி, சிங்களப் படையினர் தமிழருக்கு எதிராக எதையும் செய்யலாம் எனும் நிலை உருவாகிவிட்டது. தமிழர்களுடைய வாழ்வு சகிக்கமுடியாத ஒன்றாக ஆகிவிட்டது. பெரும்பாலான காலங்களில் தமிழர் பகுதிகள் நெருக்கடி ஆட்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. படைவீரர்கள் தமிழர் களை அச்சுறுத்தியும், அடக்கியும் வருகின்றனர்.
ஈழத்தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்; மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்; அடிக்கடி அவர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகள் மிக மிக ஏழ்மைப் பகுதிகளாக உள்ளன; படைவீரர்களின் துணையைக்கொண்டு, சிங்கள ராணுவத்தில் இருந்தவர்கள், அல்லது இருக்கின்றவர்கள் ஆளுநர் களாக இருந்து அப்பகுதிகளை ஆள்கிறார்கள்.

விடுதலைக்காகப் போரிடும் தமிழ்ப்போராளிகளுக்கு, பயங்கர வாதிகள் என்ற முத்திரையக் குத்தி, சிறீலங்காவின் சிங்கள அரசு உலகச்சமுதாயத்தை ஏமாற்றி வருகிறது. சாவா, உரிமை வாழ்வா - என்ற உணர்வில் தமிழ்ப் போராளிகள், சிறீலங்கா ராணுவத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். அமெரிக்கா நாட்டின் வெர்ஜினிய மாநிலத்தைச் சேர்ந்த பேட்ரிக் ஹென்றி, எனக்கு உரிமையைக் கொடுங்கள், அல்லது சாவைக் கொடுங்கள் என முதல் முழக்கம் செய்தவர் ஆவார்.

விடுதலைக்குப் போராடும் ஈழத்தமிழ்ப்போராளிகள், பயங்கரவாதிகள் அல்லர்: தங்களுடைய தாயகத்திற்கு வெளியில் ஓர் அங்குல நிலத்தையும் தமிழ்ப்போராளிகள் விரும்பவில்லை. பன்னாட்டு நலன் எதற்கும் எதிராகத் தமிழ்ப் போராளிகள் இல்லை.

தங்களுடைய மரபுவழித் தாயகத்தில், சிறீலங்காவின் வடகிழக்கில் தாயகத்தில் அரசியல் உரிமையோடு வாழவிரும்புகிறார்கள்.
மக்கள் நாயகமா? பெரும்பான்மை ஆட்சியா?
ஒரு மக்கள் (ஒரு தேசிய இனம்), கிட்டத்தட்ட ஒரு மனதுடன், விடுதலையுடன் வாழவேண்டும், காலனி ஆதிக்கத்தில இருந்த தங்கள் மரபுவழித் தாயகத்தை ஆளவேண்டும் எனவும் முடிவு செய்வது மக்கள் நாயக முடிவு அல்லவா?
தாங்கள் மக்களாட்சி முறையில் அமைந்த அரசு என உலகத்திற்குப் காட்டுவதற்கு சிறீலங்கா அரசு முயல்கிறது; ஆனால் அந்நாட்டின் நாடாளுமன்றம் எப்பொழுதும் நிலையாகச் சிங்களப் பெரும்பான்மை உடையதாகவே இருக்கும். இலங்கைத் தீவு முழுவதும் ஒரே வகையான மக்கள் வாழக்கூடிய இடமாக இருப்பதாயின், ஆட்சியில் உள்ள ஒரு கட்சி, அடுத்த தேர்தலில் பெரும்பான்மையை இழந்து பதவியில் இருந்து விலகலாம்; எதிர்க் கட்சி ஆட்சிக்கு வரலாம். ஆனால், சிறீலங்கா ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தினர் வாழும் நாடு. அங்கு சிங்கள தேசியத்தார், அவர்களுடைய பகராளர் (பிரதிநிதி) களையும், தமிழ்த் தேசியத்தார் தங்களுடைய பகராளர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். இரு தேசியத்தார்களின் எண்ணிக்கை பலத்தின் காரணமாக, சிறுபான்மையராக இருக்கும் தமிழர்கள், என்றைக்குமே, குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ, படைத் தலைவராகவோ வர இயலாது.

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிக்குழு

இன மோதலுக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்று (ஹ ஹடட ஞயசவல சுநயீசநளநவேயவஎந ஊடிஅஅவைவநந - ஹஞசுஊ) அமைக்கப்பட்டிருக்கிறது. அது பெயரளவிற்குத்தான் அனைத்துக் கட்சிக் குழுவாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரைக் கொண்ட முக்கியத் தமிழர் கட்சி அதற்கு அழைக்கப்படக்கூட இல்லை. சிறீலங்காவின் தென்பகுதிக்கட்சிகளின் குழுவாகவே அக்குழு இருக்கிறது. இக்குழுவின் அறிக்கை வெளியாவது பலமுறை ஒத்திப் போடப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வு என்ற பெயரால், இராணுவத்தீர்வு காண்பதற்கு, அந்தக் குழு ஒரு கண்துடைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா 2008இல் அழுத்தம் கொடுத்தன் காரணமாக, சிறீலங்காவின் குடியரசுத் தலைவர் மற்றொரு அனைத்துக் கட்சி அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிலும்
தமிழரின் முக்கியக் கட்சி விலக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அமைதிப்பேச்சுகள்

வெளிப்பூச்சுக்கான பேச்சுகளாக அல்லாமல், உண்மையான சமாதானப் பேச்சுகள், தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டுமானால், எந்த அடிப்படையில் அவை இருக்கவேண்டும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டும்.
2002ஆம் ஆண்டுப் போர்நிறுத்த ஒப்பந்தம், அதற்கு முந்திய ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டனவற்றை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

விடுதலை வீரர்கள், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரியம் (ஐவேநசஅ ளுநடக-ழுடிஎநசபே ஹரவாடிசவைல) என ஒரு யோசனையைத் தெரிவித்தனர்; இதற்கு முந்திய (ரனில் விக்ரமசிங்கே) அரசு அதற்கு மாறான ஒரு யோசனையைக் கூறியது. அந்த யோசனைகளின் அடிப்படையில் பேச்சுகள் நடக்குமா? அல்லது இப்பொழுது உள்ள ராஜபக்சே அரசு, பேச்சு வார்த்தைக்கான வேறு

யோசனைகளைக் கூறுமா?


ஈழத்தமிழ் மக்களை வலிவிழக்கச் செய்தபின்பு, சிறீலங்கா அரசு சுமத்துகிற தீர்வுக்கான பேச்சுகள் என்றால், அவற்றில் முன்னேற்றம் ஏற்படாது. பன்னாட்டு அமைப்பு ஒன்றின்கீழ், அல்லது முடிவு எடுப்பதை உறுதியளிக்கும் வல்லமை வாய்ந்த முக்கிய நாடு ஒன்றின் ஆதரவில் பேச்சுகள் நடக்கவேண்டும். தமிழர்கள் நியாயம் வேண்டுகிறார்கள், ஒவ்வொரு துறையிலும் சமத்துவத்தைச் கோருகிறார்கள்; மரியாதையான வாழ்வை விரும்புகிறார்கள்.
இவற்றை அவர்கள் பெறவில்லை எனில், முழு உரிமையுள்ள, இறையாண்மை கொண்ட தனிநாட்டை அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.

போரிட்டுக்கொள்ளும் ஓர் அரசுக்கு மாற்றாக அமைதியாக வாழும் இரு அரசுகள்:
கடந்த சில பத்தாண்டுகளில், பல புதிய நாடுகள் நிறுவப்பட்டுள்ளன - கிழக்குத் தைமூர், கசோவா, ஜெக் குடியரசு, ஸ்லோவாக் குடியரசு, எரித்ரியா, வங்காள தேசம், மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியாகச் சென்றவை ஆகிய அத்தகைய நாடுகள் ஆகும்.

அமைய வேண்டும் எனக் கூறும் ஈழத்தைவிடக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட 70 நாடுகளும், குறைந்த நிலப்பரப்புக்கொண்ட 60 நாடுகளும் சுதந்திரமாக வாழ்கின்றன.

நன்றி : விடுதலை

http://files.periyar.org.in/viduthalai/20090111/news01.html

Posted in |

2 comments:

 1. Anonymous Says:

  Thanks for your Report.

 2. Thamizhan Says:

  தூங்குபவர்களை விழித்துக் கொள்ளச் செய்யவும்,
  தூங்குவது போல நடித்து நியாயம் பேசுபவர்களுக்கும் விவரமாக எழுதப் பட்டுள்ளது.
  மனச்சாட்சியும்,மனித நேயமும் பதில் சொல்லட்டும்.
  மற்ற மொழிகளில் இந்தச் செய்தியை எடுத்துச் சொல்ல முடிந்தவர்கள் உடன் செய்வது மிக்க தேவையான செயல்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails