சாகும் வரை உண்ணாவிரதம், இன்னும் தொடர்கிறார்
Posted On Thursday, 15 January 2009 at at 15:13 by Mikeதிருமாளவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், அன்று ஒரு தீலிபன் இன்று ஒரு திருமா. வேண்டாம், தமிழருக்கு ஆதரவு குரல் கொடுக்க நீங்கள் என்றும் வேண்டும் ஐயா. இந்த துரோகிகள் தீலிபனை கொன்ன மாதிரி உம்மையும் சாக அனுமதிக்க மாட்டோம்.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை அருகில் உள்ள மறைமலை நகரில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
திருமாவளவனின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூ. மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், பழ. நெடுமாறன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் இன்குலாப், இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து பேசினர்.
மாலை 6 மணியளவில் உண்ணாவிரதப் போராட்ட மேடைக்கு வந்த தி.க. தலைவர் வீரமணி உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனிடம் தனியே கேட்டுக்கொண்டார். தன்னுடைய பேச்சிலும் திருமாவளவன் உண்ணாவிரதம் மேற்கொள்வது பெரியார் கொள்கைக்கு ஏற்றதல்ல என்றும் திருமாவளவன் உயிரிழப்பதால் எதிரிகள் வேண்டுமானால் மகிழ்ச்சி அடைவார்கள். போர்க்களத்தில் போர் வாளாக இருக்க வேண்டிய தலைவர்கள் இதைப்போன்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதில் வேறு வகையான அறப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் வீரமணி பேசி முடித்ததும் மைக் முன் வந்த விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சிந்தனைச்செல்வன், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும் சூழலில் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவித்தார்.
இரண்டாம் நாள் உண்ணாவிரதத்தில் மேலும் ஆயிரக்கணக்கான கட்சியினர் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத்தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்திய அரசு திலீபனைப்போன்று திருமா அண்ணனை அனியாயமாக சவடிக்க போகுது.
:(
பழிவாங்கும்,ஏமாற்றும்,பொய் சொல்லும்,இனவாதத்திற்கு உதவும் அரசும்.காந்தி பெயர் கொண்டிருந்தாலும் உண்ணாவிரத்ப் போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஏமாற்றாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும் முறையிலே போராட்டத்தை எடுத்துச் செல்வது தான் வீரம் நிறைந்த விவேகமாகும்.
மத்திய அரசின் அத்துனை நிருவனங்களின் முன்னும் தொடர் போராட்டம் நடத்தி முடக்க வேண்டும்.