உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்: திருமா

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.



உண்ணாவிரத்தில் பேசிய திருமாவளவன்,



இந்த போராட்டம் தி.மு.க.வுக்கு எதிராகவோ, தமிழக அரசுக்கு எதிராகவோ கிடையாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம், ரெயில்மறியல், மனித சங்கிலி என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்க வில்லை. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி பேச மாட்டார். சார்க் மாநாடு பற்றி பேசவே இலங்கை வருகிறார் என்று இலங்கை அமைச்சர் சொல்கிறார். இதை மத்திய அரசு மறுக்க வில்லை.



இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாவிரத்தை கைவிட மாட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதியுடன் கட்டுப்பாடு காக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றார்.



திருமாவளவனை அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, கி.வீரமணி, பழ.நெடுமாறன், வணிகர் பேரவை தலைவர் த.வெள்ளையன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

நன்றி :
மேலும் படங்களுடன் பார்க்க
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2064

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    எரிவது ஈழம் மட்டுமாக இருக்காது.
    தமிழகமும் எரியாமல் இருப்பது
    சோனியா அம்மையாரின் கைகளிலே.
    அவரது பழி வாங்கும் எண்ணத்தை மாற்றுங்கள்,அல்ல்து மாற்றப் படும் என்பதை உணரவையுங்கள்.

  2. Anonymous Says:

    மொத்தத் தமிழினம்,அதன் தலைவர்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து மிள்காய் அரைத்துள்ளான் மேனன்.
    அம்மாவின் உண்மைத் தொண்டன்.
    பழிவாங்கி இப்போது பரிசும் கொடுத்துள்ளான்.
    பொய்யே சொல்லி ஏமாற்றிய சோனியாவிற்கும், கைக்கூலிகளுக்கும் பாடங் கற்பிக்க வேண்டியது,ஒவ்வொரு தமிழனின் கடமையாகிறது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails