இனவெறி ராணுவத்திற்கு பெரும் சேதம், கொழும்பு நகருக்கு தகவல் தொடர்பு துண்டிப்பு
Posted On Sunday, 25 January 2009 at at 07:51 by Mikeபுலிகளின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு அங்கு தகவல் தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன.
'தங்கள் உடைமைகளையே அழித்துவிட்டுப் பின்வாங்கி, நேரம் வரும்போது தாக்குவது' என்று ஒரு யுத்த தந்திரம் உண்டு. இந்த தந்திரத்தைப் பயன்படுத்தியே ரஷ்யப் படைகள் 1812-ல் நெப்போலியனையும், 1941-ல் ஹிட்லரின் நாஜிப் படைகளையும் (மொத்தம் 15 லட்சம் வீரர்கள் இறந்த சோக வரலாறு அது) தோற்கடித்தனர்.
ஈழப் போர்முனைகளிலிருந்து வரும் செய்திகள் கிட்டத்தட்ட இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
வன்னியிலுள்ள ஒரு செய்தியாளர், ராணுவத்தின் இழப்பு கணக்கெடுக்க முடியாத அளவுக்கு உள்ளதாகவும், வெள்ளம் பூரணாக வடிந்தபிறகே அறுதியிட்டுக் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் எண்ணிக்கை குறித்து புலிகள் தரப்பு மவுனம் காப்பதில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்கிறார்கள்.
தங்களிடம் அகப்பட்டுள்ள ராணுவத்தினரிடம் ஆயுதங்களைப் பறித்துவிட்டு புலிகள் துரத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொழும்பு நகருக்கு தகவல் தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புலிகளின் தாக்குதல் குறித்த முழு தகவலும் உலகுக்குத் தெரிய வரும்பட்சத்தில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்.
பெரிய நாடுகளின் ஆதரவு மற்றும் படை பலத்துடன் புலிகளை எதிர்த்துப் போரிட்டும், முன்னெப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் கட்டத்துக்கு ராணுவம் வந்துள்ளதால், இலங்கை அரசும், ராணுவமும் பெரும் சிக்கலில் உள்ளன.
நன்றி http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2035:2009-01-25-13-53-14&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54
Are all these true? If it is true, we all are happy...............
But, there is no news in any web site, tamilnet, puthinam, sankathi,pathivu...etc.
better to keep quiet for sometime, then only finish the GOSL is possible.
well done, yes keep quiet
I don't know what is really goiing on!
yesterday many websites reported about srilankan army casualties in thousands.
are they all rumours?
Then, today at 9pm (srilankan time )sinhala army chief is saying that they have captured Mullaitivu.
It was reported in BBC and other media outlets.
usually among English websites tamilnet and among tamil websites puthinam are the most reliable.They only report after verifying the news.
These 2 websites have not reported anything about srilankan army casualties.
other thing ,if army captured Mullaitivu,where is leader Prabakaran?
where are commanders and cadres?
where are 3 lakhs people? where are the arms and heavy weapons?
surly they can't all be in the jungle!
If army has captured all tiger territory,why didn't president Rajapakse say it on the TV?
Why did he leave it to Fonseka?
He would have made enough political capital about the capture of last tiger bastion.
no wonder lot of tamil people are pulling their hairs like me.
மைக்,
தயவு செய்து இத்தகைய ஆதாரமற்ற செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாம்.
இவை பல தமிழர்களுக்கு போராட்டம் பற்றிய போலியான் ஒரு தோற்றப் பாட்டையே ஏற்படுத்தும்.பொய்யாகும் இத்தகைய வதந்திகளால் எமது போராட்டம் மேலும் நலிவடையும்.இத்தகைய வதந்திகளை சிறிலங்காப் புலானாய்வுப் பிரிவிடன் தொடர்புடைய சக்திகளே பரப்புகின்றன.ஆகவே தயவு செய்து இத்தகைய செய்திகளைப் பரப்பி உலகத் தமிழ் மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க வேண்டாம் என்று உங்களைத் தாழ்மைழையாகக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இராணுவ வெற்றி,தோல்விகளுக்கு அப்பால்
போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது.
சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும் பயங்கரவாதம் என்பதையோ தெளிவுபடுத்துவதில் தமிழர்தரப்புக்கு ஏற்பட்ட குழப்பங்களும் பின்னடைவுகளுமே தோல்வி என்ற வரையறைக்குள் இட்டுச் செல்கின்றது. சிங்களத்திற்கு வெற்றி என்றாகின்றது.
சிங்களத்தின் வெற்றிகளில் அதன் நீண்டகால இலக்கும் திட்டமிடல்களும் எப்போதும் தோற்றதில்லை. இதை தமிழர்கள் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியமானது. சிங்களம் ஒரு தோல்வியை சந்திக்கும் போது அது சிறிது காலத்தில் மீள தன்னை தயார் படுத்திக்கொள்ளும். தமிழ்மக்களும் அவ்வாறு செய்தனர் என்பது வரலாறு. ஆனால் இந்த வெற்றி தோல்விகள் மீள தயார்படுத்தல்கள் என்பதற்கு ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையே சிங்களத்தின் நீண்டகால இலக்கு என்றாகின்றது. இந்த எல்லையை தமிழர்கள் விரைவாக எட்டிவிடுவார்கள் என்பது தான் சிங்களம் போடும் கணக்கு.
இந்த கணக்கு சரிவருமா? பிழைக்கும் என்பதற்குரிய காரணிகள் சாதகமாக இல்லை. இதுவே யதார்த்தம். மீள தயார்படுத்தல் என்பதற்கு ஆளணி எண்ணிக்கை என்பது பிரதானமானது. சிங்களம் தமிழ்மக்களை பிரித்து இந்த தயார்படுத்தலுக்கு உள்ளாகாத வாறு வைத்துள்ளது.(படையினர் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள்) தமிழ் மக்களது பலவீனங்களும் சிங்களத்துக்கு சாதகமாக தயார்படுத்தலில் இருந்து விலகி ஏராளமான மக்களை தள்ளி வைத்தது. (நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்) இதே நேரம் சிங்களம் தனது அடிமட்ட மக்கள் வரை சிங்கள தேசியத்தை விரிவாக்கம் செய்துள்ளது. படை நடவடிக்கையால் பொருளாதார சிதைவு தொடர்ந்து வறுமை வறுமையில் இருந்து விலக வீட்டுக்கொருவர் படையில் சேருதல் என்ற வலைப்பின்னலை தனது எண்ணங்களுக்கேற்ப செயற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் சிங்களம் வெலியோயா திட்டத்தின் மூலம் தமிழர் தாயகத்தை துண்டாடியதில் தொடங்கிய இந்த நீண்டகால திட்டம் பின்னர் எல்லா இடங்களுக்கும் பரவியது. தமிழ் முஸ்லீம் மக்கள் பிரிக்கப்பட்டனர். கணிசமான மக்கள் அகதிகளாக அயல் நாட்டுக்கும் படையினர் பிரதேசங்களுக்கும் நகர்ந்தனர். வசதிவாய்ப்பின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளுக்கு சென்றனர். தற்போதும் சிங்களம் தனது நீண்ட கால திட்ட அடிப்படையில் முதலில் வன்னி யாழுக்கான தொடர்பை துண்டித்தது. கிழக்கல் உளவியல் ரீதியாக பிரதேசவாதத்தை (கருணாவை மையமாக வைத்து) தூண்டியதில் இருந்து இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை துண்டாடியது. பின்னர் போரை அது விரைவுபடுத்தியது. அதன் இறுதி இலக்கு வன்னியில் எஞ்சியுள்ள மக்களை தனது வசமாக்குவது. அதன் நகர்வுப்போக்கில் மீளத் தயார்படுத்தல் என்ற எல்லையை தமிழர்தரப்பு விரைவில் எட்டிவிடுவர் என்ற கணக்கு அதற்கு சாதகமாகவே உள்ளது.
இந்த இரண்டு தரப்பின் நிகழ்வுப்போக்கில் மீள தயார்படுத்தல் என்றதன் எல்லையை தமிழர் தரப்பு விரைவில் தொட்டுவிடும் என்பது வெளிப்படையான உண்மை. அது என்னும் சில வெற்றிகள் தோல்விகளுக்கு பிற்பாடு கூட நடக்கலாம் ஆனால் தமிழர் தரப்பு விரைவில் தொட்டுவிடும் என்ற சிங்களத்தின் நீண்டகால திட்டம் அதற்கு சாதகமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
நியாயத்தின் அடிப்படையில் தமிழர் தரப்புக்கு சாதகமான விடயம் என்னவெனில் அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். சிங்களத்துக்கு பாதகமான விடயம் அவர்கள் ஒடுக்குமுறையை செய்கின்றனர். தமிழர் தரப்புக்கு பலமான விடயம் உலகமெங்கும் பரந்து வாழ்கின்றனர், சிங்களத்திற்கு அப்படி இல்லை. ஆனால் நியாயங்கள் பேசுதலில் தமிழர் தரப்பு களமுனையை விட படுதோல்வியை சந்தித்து வருகின்றது. சிங்களம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாக உலகின் வாயை மூடியுள்ளது.
ஆயிரம், இரண்டாயிரம் புலிகளை தோற்கடிக்கப் போகின்றறோம் என்று நாலு லட்சம் மக்களை ஒரு வருடமாக ஓட ஓட விரட்டும் சிங்களம் இன்று உலகின் தலைசிறந்த தந்திரி.(வெள்ளைவான், கடத்தல், காணமல் போதல், ஊடகங்கள் மீதான வன்முறை என்ற சங்கதிகள் வேறு)வன்னியின் அங்குலமங்குலமாக மக்களை விரட்டி அவர்கள் வாழ்வாதரங்களை பறித்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வியை மக்களின் சுகாதரத்தை எல்லாவற்றையும் பூண்டோடு துடைத்தெறியும் சிங்களம் சாதராணமாக புலிகள் முகாமை கைப்பற்றி விட்டதாக உலகத்திற்கு படம் காட்டுகின்றது. நாலாயிரம் முவாயிரம் இரண்டாயிரம் ஆயிரம் என்ற நிலையில் புலிகளை அது கணக்கு காட்டுகின்றது.
சிங்களம் தனது பாதுகாப்புத் தளத்தில் காட்டும் இராணுவ நடவடிக்கை குறித்த வரைபடங்கள் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு நகர்வுக்குமான அம்புக்குறி அசைவுகளில் ஆயிரமாயிரம் மக்கள் அவலப்படுகின்றனர். மக்களது அடிப்படை உரிமைகள் அடியோடு மீறப்படுகின்றது. சர்வதேச போர் விதிகளின் எல்லைகளை தாண்டிய அக்கிரமம் அரங்கேறுகின்றது. ஆனால் இதை நேர்த்தியாக சொல்ல தமிழர் தரப்புக்கு வக்கில்லையே. ஆகக் குறைந்தது அவன் காட்டும் படங்களை அவன் பாணியிலேயே விமர்சிக்க உண்மையை எடுத்துக் கூற முடியவில்லையே. ஓட ஓட மக்களை விரட்டும் சிங்களம் இன்று மக்களை புலிகள் பிடித்து வைத்துள்ளதாக சாதராணமாக சொல்கின்றது. இங்கே மோட்டு சிங்களவன் என்ற மமதைக் கோவணம் அக்குவேறு ஆணிவேறாக கிழிந்து தொங்குகின்றது.
துப்பாகி முனைகளால் இந்தப் போர் தனது இறுதி இலக்கை அடிய முடியாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதற்கு பல சந்தர்ப்பங்கள் இனி வழங்கப்பட வாய்புகள் இல்லை. இது மீள தயார்படுத்தல் என்ற உண்மையின் ஊடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை களமுனையில் திருப்பங்கள் ஏற்படலாம் அது நேற்றய ஓயாத அலைகள் போல் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது வெற்றிச் செய்தி மட்டுமே தவிர வெற்றியாக முடியாது. நேற்றய ஓயாத அலையும் ஆனையிறவு பூநகரி வெற்றிகளும் இன்று எப்படி அர்த்தமற்றனவோ அவ்வாறே அதற்கும் நாளை மறுநாள் நிகழலாம். எனவே ஒரு வெற்றி என்பதை இறுதியாக பெறுவது குறித்து சிந்திப்போம்.
இந்தப் போரின் வெற்றியும் தோல்வியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கைகளிலேயே உள்ளது தவிர துப்பாக்கி முனைகளில் இல்லை. அவற்றை நீண்ட காலலத்திற்கு தூக்கிப்பிடிக்க முடியாது. தூக்கிப் பிடிக்க ஆட்கள் இல்லை என்ற அடிப்படையை புரிந்து கொள்வோமாக. எமது நியாங்களை உலக முற்றத்தில் முழங்குவோம். சிங்களத்தின் அக்கிரமங்களை எடுத்துரைப்போம். இதற்கொரு தீர்ப்பை சர்வதேசம் சொல்லும் வரை தொடர்வோம் அது ஒன்றே தமிழனுக்குள்ள கடைசி சந்தர்ப்பம். கடைசி ஆயுதம். இதை வைத்து போராடி எமக்கொரு தாயகம் அமைப்போம். தற்காலிக வெற்றி தோல்விகளில் மக்களின் நம்பிக்கையை சிறைவைக்க யாரும் முயல வேண்டாம். நிரந்தரமானதொரு விடிவிற்கு முடிந்ததை செய்வோம்.
நன்றி:சுகன், யாழ்.கொம் செய்திக் குழுமம்.
உறுதிப் படுத்தப் பட்ட செய்திகளையே நம்ப வேண்டும்.
முடிந்த அள்விற்கு உடனுக்குடன் செய்திகள் தெரிவிக்கிறார்கள்.
இன உணர்வாளர்கள் செய்ய வேண்டியது உண்மைச் செய்திகளை மனித நேய அமைப்புக்களுக்குப் படங்களுடன் அனுப்புவது.
இந்தியாவில் தமிழ் தவிர மற்ற மொழிக் காரர்களுக்கும்,அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்,செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவதும்.
இன்னும் 24 மணி நேர இந்திய உளவு விமானச் சேவை,குங்குமப்பொட்டுடன் இந்திய
படைத்தளபதி மற்ற இந்தியப் படை ஆலோசகர்கள் போர்க்களத்திலே அறிவுரை,இந்தியக் கப்பல் படையின் முழு ஆதரவு என்று இந்தியாதான் முழு ஆதரவு தருகிறது என்ற உண்மை சோனியாவின் பழி வாங்குதல் என்பதைத்தான் காட்டுகிறது.எத்தனைத் தமிழர்கள் செத்தால் அவருக்கென்ன?
இதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
ஆக்க பூர்வமாகச் செய்ய வேண்டியதைச் செய்வோம்.
இன்னொரு விஷயம் தெரியுமா...எனது நண்பன் ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக உள்ளான். அவன் சொன்னது....
" குமுதம் ரிப்போர்ட்டர், ஜு.வி இரண்டிலும் ஈழம் பற்றி தொடர் எழுதும் எழுத்தாளர்களிடம் சிங்கள அரசு சார்பில் பேசுகிறோம் என்று ஒரு தொலைபேசி. எவ்வளவு வேண்டும்? புது வீடு வேண்டுமா? தொடரை நிறுத்துங்கள் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். பிறகு தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.
கல்மடு குளம் உடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எவளவு என்று தெரியவில்லை. அதை மறைபதற்கே சிங்கள அரசு பத்திரிகைகளையும் வளைத்துள்ளது. இலங்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பணத்தை காட்டி கெஞ்சியும் புலி ஆதரவு அல்லது ஈழ தமிழர் ஆதரவு செய்திகளை போடக் கூடாது என்று கெஞ்சி உள்ளார்கள். தினமும் இலங்கை தூதரகத்தில் பத்திரிக்கை, அரசியல் வாதிகளுக்கு பார்ட்டி நடக்கிறது.
மேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாகவோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //
அதனால் தான் இன்று எல்லா பத்திரிகையும் தமிழோசை தவிர அந்த செய்திகளை தவிர்த்துள்ளன.