இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை-ஆளுநர், ஜெ???
Posted On Wednesday, 21 January 2009 at at 09:12 by Mikeஇலங்கைத் தமிழர்களை காப்பாற்றவும், அங்கு அமைதி ஏற்படுத்தவும், மத்திய அரசு, காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றினார். அப்போது, இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைத்ததாக கூறினார். இலங்கைத் தமிழர்கள், தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் துயரப்படுவதாகவும், அங்கு நடைபெறும் போரால் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். எனவே, இலங்கையில், பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளை காலம்தாழ்த்தாமல் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார். மேலும், அவர்களைப் பாதுகாக்கவேண்டுமென்று அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பர்னாலா வலியுறுத்தினார்.