தமிழக பத்திரிக்கைகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்

தினமும் எண்ணிலடங்கா தமிழ் உயிர்களை பழி வாங்கும் இலங்கை இனவெறி அரசிடமிருந்து இந்திய அரசு அவர்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளோம் நாம். தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு உலக நாடுகளின் உதவியும், தமிழ் மக்களின் எழுச்சியுமே நமக்கு இப்போது தேவை.

இந்த அறவழி போராட்டத்திற்கு தமிழ் பத்திரிக்கைகளும், மனிதாபிமான உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அளவு சிறு உதவியாக இதை பண்ணலாமே.

உங்களின் இந்த உதவியை ஒரு நாளும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

1) இலங்கைத் தமிழர் இன்னலைத் தீர்க்க அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் கடிதம்:

இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம் தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன் - இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.

கையெழுத்திடும் இணைப்பு:

http://www.tamilsforobama.com/sign/usersign.html

2) நமது நண்பர்கள் புதிய இணைய தளம் ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் இந்த தமிழ் இன படுகொலையை உலகுக்கு எடுத்து சொல்வதற்காக.

இந்த முகவரியினையும் உங்கள் முதல் பக்கத்தில இட்டால், மேலும் பல மக்களுக்கு இந்த செய்தியினை எடுத்து செல்லும்.

http://stop-the-vanni-genocide.blogspot.com/
தமிழர் நலன்களில் அக்கறை கொண்ட குமுதம், ஆனந்த விகடன், விடுதலை, நக்கீரன் மற்றும் அனைத்து பத்திரிக்கைகளையும் ஒரு தமிழன் என்ற உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் இந்த சிறு உதவியினை செய்து தருமாறு.

நன்றியுடன்
தமிழர்கள்

பி.கு தமிழ் மணம் தனது முதல் பக்கத்தில் இணைத்து கொண்டது போல், நீங்களும் இணைத்து கொண்டது போல் இணைத்து கொண்டால் நன்றாக இருக்கும்.

Posted in |

1 comments:

  1. மதி Says:

    http://thamilar.blogspot.com/2009/01/blog-post_1413.html,

    please everyone forward the above link to newspapers.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails