இனவெறி படையினருக்கு பலத்த இழப்புக்கள்: கொழும்பு ஊடகம்

ஆனையிறவை கைப்பற்ற கடந்த வாரம் முகமாலை-கிளாலி களமுனைகளில் இருந்து சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முயற்சியின் போது படைத்தரப்பு பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கிளாலி-முகமாலை கடந்த செவ்வாய்கிழமை காலை களமுனைகளில் இருந்து 53 மற்றும் 55 ஆவது படையணிகள் நகர்வுகளை தொடங்கியுள்ளனர்.

முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் மற்றும் 122 மி.மீ. பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

படையினர் பல்குழல் உந்துகணை செலுத்திகளையும், பீரங்கிகளையுயும், டாங்கிகளையும் அதிகளவில் பயன்படுத்தியிருந்தனர்.

இருந்த போதும் விடுதலைப் புலிகளின் எறிகணைகள், பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் போன்றவற்றில் சிக்கி 17 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 135 பேர் காயமடைந்துள்ளதாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த நடவடிக்கையின் போது 5 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி லெப். கேணல் நலிந்த குமரசிங்கவும் (பின்னர் கேணலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்) மேலும் இரு அதிகாரிகளும் பொறிவெடியில் சிக்கி கொல்லப்பட்டுள்ளதுடன் கவசத்தாக்குதல் படையணியைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் பிறிதொரு சம்பவத்தில் பொறிவெடிகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி புதினம்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails