தி.மு.க., 39,266 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுரை: திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க., 39,266 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் திமுக 79,422 ஓட்டுகள் பெற்றது. திமுக வேட்பாளர், லதா அதியமான், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தைவிட 39,266 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். அதிமுக : 40,156. தேமுதிக: 13,136; சமக: 831; திருமங்கலம் தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று நடைபெற்றது. திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க., சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க., சார்பில் தனபாண்டியன், ச.ம.க., சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,55,647 பேர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள்: 1, 38, 191. ஓட்டுப்பதிவு ஜன., 9ம் தேதி நடந்தது. ஓட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், ஓட்டு எண்ணப்படும் இடமான மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது. 250 துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள இந்த கல்லூரி வளாகத்திற்கு வெளியே 50 உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    வெற்றி,வெற்றி, இது பணநாயகத்தின் வெற்றி!

  2. Thamizhan Says:

    சென்ற தேர்தலில் பார்ப்பனீய பத்திரிக்கை பல்ம் வெறும் வெத்து வேட்டு என்பதைக் கலைஞர் கண்டார்.
    திருமங்கலத்தில் பார்ப்பனீய அடிவருடிகளும்,தேர்தல் அதிகார அய்யங்கார் கூட்டமும் வெற்று வேட்டுகள் என்பது தெரிகிறது.
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழின உணர்வாளர்களை ஒன்றினைத்து அடிமைக் காங்கிரசையும் தமிழ்நாட்டில் அடியோடு ஒழிக்க வேண்டியது தான்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails