இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் தமிழனின் பிணம் விழுகிறது: கருணாநிதி
Posted On Saturday, 27 December 2008 at at 11:51 by Mikeஇந்திய மத்திய அரசாங்கத்தின் தாமதத்தால் இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை நமக்குள்ளது. இலங்கை தமிழர்கள் பச்சைக் குழந்தைகளோடு பரிதாபமான நிலையில் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர்.
அதற்காக வன்முறை வழியில், பலாத்கார வழியில், நாட்டுக்கு விரோதமான வழியில், தேசத்துக்கு பகையான வழியில் செல்ல நாம் விரும்பவில்லை.
மேலும் படிக்க
http://www.tamilseythi.com/tamilnaadu/karunanidhi-2008-12-27.html