சிறிலங்காவின் பாகிஸ்தான் பயணம்: இந்தியா கவலை

பாகிஸ்தானுக்கான பயணத்தை தமது நாடு இரத்துச் செய்துவிட்ட நிலையில் சிறிலங்கா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்த கவலையை சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்புத் தகவல்கள் தெரிவிப்பதாவது:

சிறிலங்கா துடுப்பாட்டச் சபையைக் கலைத்த பின்னர் மகிந்த ராஜபக்சவை அமைச்சர் காமினி லொக்குகே சந்தித்துப் பேசினார்.

அர்ஜூன ரணதுங்க முடிவின் படி பாகிஸ்தான் செல்வது என்பது இந்தியாவுடனான இராஜதந்திர உறவைப் பாதிக்கும் என்று மகிந்தவிடம் காமினி லொக்குகே தெரிவித்தார். இது தொடர்பாக ரோகித போகல்லாகமவுக்கு மகிந்த தகவல் தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ரோகித போகல்லாகம, பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்தியத் தரப்பில் எதுவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்றார்.

இதனிடையே மகிந்த ராஜபக்சவை கலைக்கப்பபட்ட துடுப்பாட்டச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்கவும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இந்தியத் தரப்பினர், சிறிலங்காவின் பாகிஸ்தானின் பயணம் குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்ற தகவலும் சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மகிந்த ராஜபக்சவை காமினி லொக்குகே சந்தித்துப் பேச உள்ளார்.

thanks
http://www.puthinam.com/full.php?222IOAA3b3dQ6Dpa4d0bVoC4a0dO4Amb4d04ImU4203WMMRj2e2cL1e0ecceYcYcce

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails