இலங்கையில் போர் நிறுத்தம் : எம்.பிக்களிடம் பிரதமர் உறுதி

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் கடும் போர் நிலவி வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் போராட்டம் நடத்தினர்.


முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நீறைவேற்றப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சி குழு வரும் 4ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க இருக்கிறது.


இதற்கு முன்னதாக இன்று செவ்வாய்கிழமை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



இந்த சந்திப்பின்போது மனு ஒற்றையும் தமிழக எம்.பி.க்கள் கொடுத்தனர். இதன்பின்னர் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், மனு கொடுத்த எம்பிக்களிடம்,

’இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. இது பற்றி இலங்கை அரசிடம் நிச்சயம் பேசுவேன். போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்துவேன்’ என தெரிவித்துள்ளார். அவர் மேலும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் அனுப்பியிருக்கும் நிவாரணம் முறையாக அம்மக்களை சென்றடைய இலங்கை அரசை வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    உங்களுக்கும் பெப்பே!
    உங்கள் முதல்வருக்கும் பெப்பே!

    உங்களையெல்லாம் எப்படி ஏமாற்றுவது என்பதற்காகத்தான் எம்.கே.நாரவாயனை வைத்துள்ளேன்,இன்னுமா புரிய வில்லை!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails