காங்கிரசுக் கட்சியின் தமிழினத் துரோகம்

தமிழ் நாட்டுப் காங்கிரசுக் கட்சி கொத்தடிமைகளின் கூடாரம், அரிமாத் தமிழன் செண்பகராமன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான் செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!

ஆனால் இன்றைய காங்கிரசுக் கட்சியோ உத்தரப் பிரதேசத்துக் கொத்தடிமைகளின் கூடாரமாகிவிட்டது.

தமிழ்நாட்டுப் காங்கிரசுக் கட்சிக்காரன் எவனுக்குமே தாய்மொழியாகிய தமிழ்மொழி மீதோ, தமிழ்நாட்டின் மீதோ, தமிழினத்தின் மீதோ பற்றுதலே இல்லை! காங்கிரசுக் கட்சிப் பேடித் தலைவர்களின் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் தான் நாம் நமது வளமான நிலங்கள் பலவற்றைத் தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், மலையாளிகளிடமும் இழந்தோம்!

உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் மொழி கொலுவீற்றிருக்கவேண்டிய இடத்தில் சவமொழி கோலோச்சுவதற்குப் காங்கிரசுக் கட்சிகாரர்களே மூல முதல்வர்கள். இலங்கையின் மலையகத் தமிழர்கள் 15 இலக்கம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப் பட்டதற்கு நேரு முதல் இந்திரா வரையிலான காங்கிரசுக் கட்சிக்காரர்களே பொறுப்பாளிகள்.

உலகின் முதலாவது கடலோடி இனமான தமிழினம் கச்சத் தீவின் கடற் பரப்பிலே சுட்டுக் கொல்லப்படுவதற்கும் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியாளர்களே பொறுப்பாளிகள்!

பாலக்காட்டானான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி போன்றவர்களின் தவறான ஏவல்களால்தான். இந்தியாவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் சிங்களவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தமிழர்களை இனப் படுகொலை செய்யப் பவுத்த சிங்கள வெறியர்களுக்குப் படைப்பயிற்சி தரப்படுவதற்கும் இவர்களே ஆலோசகர்கள். அரசியல் ஓர் இழவும் தெரியாத வானூர்திவலவனான ராசீவ் காந்திக்குத் தவறான வழிகளைக் காட்டி அமைதிப்படை என்னும் பெயரிலே அடாவடிப் பீடைகளை அனுப்பிவைத்த ஆரியப் பார்ப்பனக் கும்பல்தான் இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றது.

அந்தக் கும்பலின் ஆலோசகர் சிங்களர்களால் லங்காரத்னா என்று போற்றப்படும் இந்துராம் என்கிற ஆரியப் பார்ப்பன ஜயங்காரே! இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது இருபத்திநாலு மணி நேரமும் ஊரை கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான செயலலிதாவும், இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் தரகு மாமாவும் என்ன சொல்லுவார்களோ என்கிற அச்சத்தால் தாறுமாறான வெளியுறவு முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் பஞ்சத்து இந்தியனும், பரம்பரைத் திரிவடுகனுமான கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.


ராசீவிக்காக தரையில் விழுந்து உருண்டு புரண்டு நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளான காங்கிரசுக்கட்சிப் பதடிகளே!....

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது உங்களில் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?

(2) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

(3) ராசிவு கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுரத்தில் இருந்த சுப்பிரமணியம் சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?

(4) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே pooparsu ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?

5) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் காங்கிரசுக் கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

(6) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே பாலஸ்தீன யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலியான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(7) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

(8) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(9) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(10) சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் சாகடித்தது எதற்காக?

(11) புலனாய்வு செய்த புடலங்காய்களிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(12) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் உசாவவில்லை.

(13) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

-மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள காங்கிரசுக்க்கட்சி முண்டங்களே விடை கூறுங்கள்...

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!

ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், பாட்டாளிகளாலும்,படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!

நன்றி : பின்னூட்டம் இட்டவருக்கு

Posted in |

2 comments:

  1. சிக்கிமுக்கி Says:

    பதின்மூன்று வினாக்கள்!

    ஒன்றுக்குக்கூட விடையளிக்கும் தெளிவோ நேர்மையோ அக்கட்சியைச் சேர்ந்த எவரிடமும் அறவே கிடையாது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

    உண்மையை அறிந்து கொள்ளவும் ஒப்புக்கொள்ளவுமான தகுதி அவர்களில் எவருக்கும் இருப்பதாகவே தெரியவில்லை.

  2. Anonymous Says:

    தமிழ்நாட்டில் காங்கிரசிற்குச் சமாதி கட்டிவிட முழு முயற்சியுடன் கடுமையாக உழைக்கும் இளங்கோவனுக்கு நன்றிகள்.
    அவரைக் கட்டுப் படுத்த முடியாத தங்கபாலுவுக்கு அனுதாபங்கள்.
    டில்லிக்குக் காவடியெடுங்கள்,அங்கே உங்களுக்கு நன்றாக மொட்டையடித்து அனுப்புவார்கள்.கரும்புள்ளி,செம்புள்ளி யடித்துக் கழுதை மேலே தமிழகம் ஏற்றி வைத்து அழகு பார்க்கும்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails