பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இந்தியாவை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்: மகிந்தவுக்கு ரணில் அறிவுரை

என்னே அறிவு, என்னமா பேசறானுங்க. நீங்களாம் திருந்தவே மாட்டிங்களா. இப்படியே வெள்ளை வானிலே எப்பவும் போல கடத்தலாம். செஞ்சோலை மாதிரி எல்லாரையும் கொல்லலாம். கிளஸ்ரர் குண்டு தமிழினததை அப்படியே காலி பண்ணிடலாம், நடத்துங்கடா, நடத்துங்க. எங்களுக்கும் ஒரு காலம் வரும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியாவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

இந்திய அரசாங்கம் ஒருபோதும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்பதால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவை ஒருபோதும் பகைக்கக்கூடாது. ஏனெனில் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உதவியை பெற்றுத்தான் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு வருவது விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிவதற்காக அல்ல. எமது நாட்டுக்கு உதவியளிப்பதற்காகவே. அவருடைய வருகைக்கு அரசாங்கமும் அதற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பது பிழையான நடவடிக்கை.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா இதுவரை நீக்கவில்லை. ஆகவே, இந்தியாவை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

கிளிநொச்சியை கைப்பற்றுவோம் என்று அரசாங்கம் மார் தட்டியது, ஆனால் நடந்தது என்ன?

தற்போது முல்லைத்தீவை கைப்பற்றப் போகின்றோம் என கூறுகின்றார்கள், அப்படியானால் கிளிநொச்சியை கைப்பற்றமாட்டீர்களா? அதனை கைப்பற்றும் முயற்சிக்கு என்ன நடந்தது? போர் எதற்காக நடத்தப்படுகின்றது என்பது குறித்து படைத்தரப்புக்கும் மக்களுக்கும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜெயசூர்ய பேசியதாவது:

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. ஆனால் அதேபோன்று பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் சிறந்த பொருளாதார கொள்கை உண்டு. அந்த கொள்கை மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியும். பொருத்தமான பொருளாதார கொள்கை மகிந்த அரசாங்கத்திடம் இல்லை என்றார்.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    ஈழத்தமிழனை அழித்தொழிக்க வேண்டும் என்ற பெருமுனைப்போடு இரு பேரினவாதக்கட்சிகளும் கைகுலுக்குகின்றன. இந்தியா சாமரம் வீசுகின்றது.

  2. Anonymous Says:

    when it comes to destroying Tamils and denying tamil people's rights both sinhala ruling party and the opposition parties are talking in one voice.It is regrettable Tamil leaders don't have the same unity.
    unity is strength which we Tamils don't have and it is one of the reason for the downfall of the great tamil race.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails