தமிழக தலைவர்களை சிறிலங்கா இராணுவத் தளபதி விமர்சித்திருப்பது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: கருணாநிதி

தமிழக தலைவர்களை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விமர்சித்திருப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கலைஞர் மு.கருணாநிதி அளித்த பதில்கள்:

ஊடகவியலாளர்: சிறிலங்கா தளபதி ஒருவர் நேற்று கூறும்போது தமிழ்நாட்டின் தலைவர்கள் கோமாளிகள் என்று அருவறுக்கத் தக்க வகையில் விமர்சனம் செய்திருக்கிறாரே?

கருணாநிதி: அந்தத் தளபதி அப்படி சொல்லியிருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விமர்சித்துக் கொள்வது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழகத் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படி விமர்சித்திருந்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஊடகவியலாளர்: மருத்துவர் இராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் சிறிலங்கா தளபதியின் செய்கை குறித்து தாங்கள் பிரதமரின் கவனத்திற்குச் கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: மருத்துவர் இராமதாஸ் போன்றவர்கள் அது பற்றி கூறியுள்ளதே இந்நேரம் பிரதமரின் கவனத்திற்குச் சென்றிருக்கும்.

ஊடகவியலாளர்: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்காவுக்கு போகப் போவதாகச் சொல்லப்பட்டதே, நாள் உறுதியாகி விட்டதா?

கருணாநிதி: இன்னும் நாள் குறிப்பிடவில்லை. விரைவில் செல்வார்.

ஊடகவியலாளர்: சிறிலங்கா தளபதி மேலும் கூறும்போது போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய அரசு வைக்காது என்று சொல்லியிருப்பதைப் பற்றி?

கருணாநிதி: இதைப்பற்றியெல்லாம் நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் பிரதமரைச் சந்தித்த போது விரிவாகப் பேசி, அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு தான் சிறிலங்காவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சென்று நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தவும் - போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தவும் - அந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ளச் செய்யவும் - நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றார் கருணாநிதி.

http://puthinam.com/full.php?201VoA20eIcYy2eacA4o3bdC6DX4dc71e2cc4YmI3d43mOA3a03QMR3e

Posted in |

3 comments:

  1. Anonymous Says:

    புது டெல்லி ஏகாதிபத்தியத்தின் தமிழின எதிர்ப்பு தில்லா லங்கடி வேலைகள் அனைத்தும் நாம் அறிந்தவையே
    முல்லைபெரியாறு பிரச்சனையில் தாம் மலையாளிகள் பக்கம் என தமது ‘இந்தி’ய கடற்படையை அனுப்பி ‘தமிழ்’நாட்டு காவல்துறையை தடுத்து நிறுத்தி நிபுணர்களை அணையை அளவேடுக்க

    விடாமல் தடுத்து நிறுத்தி விட்டது..

    ஒரு லட்சத்தி அறுபதுநாயிரம் கோடியை தனது பாதுகாப்புக்கு ஒதுக்குகிற ஒரு தேசம் தனது தேசத்தின் பிள்ளைகளை(தமிழர்கள்) சுட்டு கொன்ற சிங்கள ராணுவத்தை நோக்கி ஒரு முறையாவது

    சுட்டுள்ளதா? ஒரு செய்தியை நீங்கள் படித்ததுண்டா?பாகிச்சானோடு சீனாவோடு சீறும் ‘இந்தி’ய தோட்டாக்கள் சிங்கள கடற்படையை நோக்கி சீறவில்லையே ஏன்? ஆரியன் சிங்களவனின்

    பங்காளி!

    தமிழர்களுக்கு எதிரான மும்பை கலவரத்தில் ராணுவத்தை அனுப்பவில்லை ஆனால் இந்தியை தமிழர்கள் எதிர்கிறார்கள் என்றவுடன் ராணுவத்தை அனுப்பி தமிழனை வேட்டையாடியது

    எதற்காக?தமிழர் நிலமான நெய்வேலியில் நிலக்கரியை சுரண்டி தமிழ்நாடே இருளில் மூழ்கி கிடக்கும் போது அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் என்ற பெயரில் அனுப்புவது யார்?நெய்வேலியில்

    ‘இந்தி’ அரசு சுரண்டிய தமிழக விவசாயிகளின் நிலங்களுக்கு ஏன் இதுவரை நிவாரணம் அளிக்கவில்லை?அவர்கள் தமிழர்கள் என்பதால் தானே?நரிமணத்தில் இருந்து தமிழர்களுக்கு வரி பணம்

    எதுவும் கொடுக்காமல் இயற்கை எரிவாயுவை திருடி செல்வது யார்? அசாம் மாநிலத்தில் இதே இயற்கை எரிவாயுக்காக வரி பணத்தை ஏன் ‘இந்தி’ அரசு கொடுக்கிறது?

    எல்லா மாநிலங்களிலும் அணுமின்சார நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இத்தனைக்கும் கன்னடர்கள் அனல் மின் சார நிலையத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்க கன்னட அரசு

    கன்னட மக்களுக்காக சட்டீஷ்கரில் அனல் மின்சார நிலையம் அமைக்க இருக்கிறது! இந்த ‘இந்தி’ய அரசு தமிழ்நாட்டில் அணு உலைகளுக்கு மேல் அணு உலைகளை கட்டிகொண்டு போவதன்

    காரணமென்ன? எப்படியும் மூன்றாம் உலக போர் மூண்டால் சாக போகின்றவர்கள் தமிழர்கள் என்பதாலா?

    சரந்தீபு சிங்கின் மரண தண்டனைக்கு தாம் தூம் என குதிக்கும் இந்தி அரசு மலேசிய தமிழர்கள் பிரச்சனை குவைத்து தமிழர்கள் பிரச்சனை என வந்தால் கவலையாளிக்கிறது.. வருத்தமளிக்கிறது

    என பம்முவது எதற்காக?

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான்

    செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!ஆனால் எவ்வளவோ பேருக்கு நாடாளுமன்றதில் சிலையிருக்க ஒரு தமிழனின் சிலையும் காண

    முடியவிலலையே!ஒரு தமிழ்தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய செய்தியை கேட்டதுண்டா?

    அதே போல் காவிரி பிரச்சனையில் கன்னடருக்கு ஒத்துழைப்பதையும் நாம் நன்றாக அறிவோம் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை(1991) ராணுவத்தை அணுப்பாமல் தூரநின்று

    கைகொட்டி சிரித்தது.. ஒக்கேனக்கல் பிரச்சனையில் தாம் தலையிட மாட்டோம் நீங்களே பேசி தீருங்கள் என தூர நின்று வேடிக்கை பார்பதையும் அறிவோம்.. காவிரி நடுவர் மன்ற இடைக்கால

    தீர்ப்பை கன்னடர்கள் தூக்கி கடாசிய போது தூர நின்று ரசித்த ‘இந்தி’ அரசு தமிழருக்கு நன்மை
    பயக்கும் திட்டமான சேது சமுத்திரத்திட்டதினை நிறுத்த ஞாயிற்று கிழமையும் உச்ச நீதி மன்றத்தினை திறந்து வைத்து விசாரித்தது அதே போல தான் கொல்டிக்களின் பாலாற்று பிரச்சனையிலும்

    தனது தமிழன விரோத போக்கை காட்டி வருகிறது..

    தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்! இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம்

    இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறது

    தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள் எனவே தமிழீழம் சாத்தியமில்லை என்கிறார் மார் கசிய கம்னுசுட் கட்சியின் அவாள் திரு வரதராசன் அதாவது சாக்கடை பிராணியான சிங்களவனும்

    பண்பாட்டில் சிறந்த தமிழர்களும் ஒன்று என்கிறார் சுருக்கமாக சொன்னால் சிங்களவனுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்கிறார்..

    போர் நிறுத்தத்தை மிறீயது யார் என்று தெரியாமலே அறிக்கை விட்டு திரிகிறார் இந்திய கம்னுச்டு கட்சியின் தலைவர் பாண்டியன்..தமிழின எதிரியான இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது

    இருபத்திநாலு மணி நேரமும் கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான பாப்பாத்தி

    செயலலிதாவும்,இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் மாமாவும் ரா-மு ரா-பி (ராசிவ் காந்திக்கு முன் ராசிவ் காந்திக்கு பின்) என ஈழ

    விடுதலையை பிரித்து பார்க்குமாறு புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு வேண்டு கோள் விடுக்கும் கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள்

    என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

    இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை

    ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி

    கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை

    உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.
    அது ஈழ தமிழர்களுக்கும் சரி தமிழக தமிழர்களுக்கும் சரி!

    தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!

    ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழீழ விடுதலையை வென்றெடுக்கத் தளபதி பிரபாகரன் அவர்களின் கரங்களை வலுப் படுத்துவதே சரியான வழி!விடுதலைப்

    புலிகளுக்கு ஆதரவு தரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!

  2. Pulliraaja Says:

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் கோமாளியாக்கியது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுதான். எம். கே நாரயணன் சொல்வதை கலைஞர் தலையாடி ஏற்கின்றார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவருக்கு அதிகாரி உத்தரவிடும் கொடுமை தமிழகத்தில்தான் உண்டு.

    1) ஒரு மாநிலத் தலைவர்களைப் பகிரங்கமாகக் கிண்டல் செய்தும் தமிழகத்தில் எத்தனை தலைவர்களுக்கு கோபம் வந்திருக்கின்றது? 2).
    மத்தியில் உள்ள தலைவர்கள் யாரேனும் இலங்கையிடம் கண்டனங்களைக் கூற முன்வந்தார்களா?

    கோமாளிகளாக்கியதே மத்திய அரசுதான். ஆரம்பித்து வைத்திருக்கின்றார் பொன்சேகா
    காலப்போக்கில் இந்தியாவின் மற்ற மாநிலக்காரகளும் இதே சொல்லைத் தமிழகத்திற்கு எதிராக விரைவில் பயன்படுத்துவார்கள்.

    புள்ளிராஜா

  3. Anonymous Says:

    I am afraid we Tamils are partly responsible for this arrogant remark by the sinhala military man.
    we have no unity among ourselves.
    The sinhala politicians might come from different political parties,but when it comes to anything against tamils they will form a united front and support the government whichever party rules.they always support sinhala race.this is true of other nations of India,whether it is malayalis,kannadas.gujarathis or bengalis.
    Tamil people are affected by caveri issue.okanekkal issue,Mullai Periyaru issue and eelam tamil issue.unfortunately tamil nadu politicians never speak with one voice.until this happens nobody will take us seriously and we will never succeed.because of lack of unity ,other people are ridiculing us and Indian central government is treating Tamil nadu politicians with contempt.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails