100 படையினர் பலி; 250 போ் காயம்; 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு

தமிழின துரோகி,சிங்கள அடிவருடி தினமலரே, இந்த உண்மையை நீ வெளியிடுவாயா, சும்மா சும்மா விடுதலை புலிகள் சாவு என்று கதை விடும் நீ, இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்வதேன்.

கிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர்.

இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120-க்கும் அதிகமானோரை காயப்படுத்தி படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://puthinam.com/full.php?22ImUcc3oV24dB1e302AOo4d3YcU0aK6D2e2RMC3b34Aee

Posted in |

13 comments:

  1. Anonymous Says:

    முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தை மீள திரும்ப விடுவதில்லை என்பதே தமிழீழ மக்களின் வைராக்கியம்: பா.நடேசன் கூறியது நினைவிற்கு வருகிறது.

  2. Jeyapalan Says:

    தினமலர் தினமணி போன்ற பத்திரிகைகளுக்கு மின்னஞ்சல் இல்லையா? எல்லோரும் முயற்சிக்கலாமே

  3. Anonymous Says:

    தினமலரில் 1 + 1 = 2 என்று வந்தால் கூட நாமாக கூட்டி பார்த்து தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அதன் நம்பகத்தண்மை குறைந்துள்ளது.

    சிங்கள இனவெறியாளர்களை ஒத்தகொள்கை கொண்டவர்கள் பசாகவினர். பசாகவின் ஒரே நோக்கமும் பேரினவாதம் தான். அதை தான் நெய்யையும், சர்க்கரையும் தடவி 'ஆடு நையுதேன்னு ஓனாய் ஒன்று அழுதது' என்று சொல்வார்களே அது போல இப்போது அழும் படலத்தில் துவங்கி இருக்கிறது. அவர்களுக்கு துதிபாடும் இந்த இதழ் எப்படி உரிமையை கேட்கும் மக்களின் குரலை வெளியிடும். அப்படி செய்தால் அது அவர்களது சிந்தாந்தகளுக்கு எதிராக அமையாதா.

    பனிமலர்.

  4. Anonymous Says:

    don't expect any neutrality from them.they are not going to change.
    as we say in Tamil ,a dog's tail can't be straighten or lifted.
    We have to avoid them.
    stop buying them.
    stop reading them.

  5. Mike Says:

    நண்பர்களின் கருத்துக்கு நன்றி. செயபால நீங்கள் நினைப்பது போல் அவர்களுக்கு இந்த மாதிரி செய்தி நாம் சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன, கண்டிப்பாக நம்க்கு முன்னரே அவர்களுக்கு தெர்யும், தமிழன் சாகனும் இதுதான் தினமலரோட நோக்கம், தமிழன் அடிபட்டு செத்தால் அதை கொண்டாடுவதே இவனின் சந்தோசம்.

  6. Jeyapalan Says:

    நான் நினைத்தது ஒரு எதிர்ப்பாக அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று தான். செய்தியை நாம் காட்டி அவர்கள் எங்கே போடப் போகிறார்கள். குமுதம் விகடன் கூடக் கொஞ்சக் காலம் இப்படி இருந்தவை தானே. இப்பொழுது எவ்வளவோ மேல். இந்த இணைய யுகத்தில் இந்த ஏமாற்றுக் காரர்கள் பல நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது.

  7. Mike Says:

    /*நான் நினைத்தது ஒரு எதிர்ப்பாக அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று தான். */

    முயற்சி செய்யலாம் அனைவரும், நான் பலமுறை செய்துள்ளேன் எந்த பயனும் இல்லை.

    /*செய்தியை நாம் காட்டி அவர்கள் எங்கே போடப் போகிறார்கள். */
    மன்னிக்கவும் என் புரிதலில் என் பிழை.


    /*குமுதம் விகடன் கூடக் கொஞ்சக் காலம் இப்படி இருந்தவை தானே. இப்பொழுது எவ்வளவோ மேல். */

    ஆச்சரியமான ஒன்று, நானும் சில சமயங்களில் நினைப்பதுண்டு, எப்படி மாறினார்கள் என்று.



    /* இந்த இணைய யுகத்தில் இந்த ஏமாற்றுக் காரர்கள் பல நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது */

    சரியாக சொன்னிர்கள்.

  8. Anonymous Says:

    செய்தியைக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது நன்பரே. இந்த செய்தியை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி..

  9. Anonymous Says:

    தின்மலத்தைத் தொடக் கூடாது,தப்பித்தவறித் தொட்டு விட்டால் ஜலத்தால் அலம்பிவிட வேண்டும்(டெட்டால் போட்டு).
    இந்து ராம்,துக்ளக் கோமாளி இதெல்லாம் தமிழ்நாட்டின் அசிங்கங்கள்.தொடாதீர்கள்.

  10. Anonymous Says:

    சிங்கள ரத்னா யாருக்கு? கடும் போட்டி - கள நிலவரம்

    - பவானந்தி்

    சோர்ஸ்: உண்மைஆன்லைன்

    வழக்கம் போல் இந்த ஆண்டுக்கான சிங்களரத்னா விருதுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. சிங்கள அரசுக்கு சிறந்த சேவை செய்வோருக்குக் கொடுக்கப்படும் இவ்விருதில் தமிழ்நாட்டுப் பத்திரிக்-கைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கென சிறப்புப் பிரிவு இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    அந்த அடிப்படையில்விருதுக்குத் தகுதியானோர் பட்டியலில் எண்ணற்றோர் இடம்பெற்று இருந்தாலும், இறுதிப் பட்டியலில் மிக முக்கியமானவர்-களுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது.

    பிரபாகரன் சுற்றிவளைப்பு என்றெல்லாம் அட்டைப் படத்தில் செய்திபோட்டு, போட்டிக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டாலும் இந்தியா எஸ்டர்டே பத்திரிகையால் இறுதிப் பட்டியலுக்குள் நுழைய முடியவில்லை என்று எமது கொழும்(ப்)பு நிருபர் தெரிவிக்கிறார். இதே போல் சில்கி, சீனியர் பகடன் உள்ளிட்ட பத்திரிகைகளும் தொடக்கப் பட்டியலில் இருந்தாலும், போட்டியின் கடுமையினால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை.

    தினமலம்: நீண்ட காலமாகவே இப்பணியைத் திறம்பட ஆற்றிவரும் இப்பத்திரிக்கை தனித்தன்மை வாய்ந்தது. பிரபாகரன் இறந்து விட்டார்; இதோ கருமாதி; இன்று காரியம் என்று செய்தி வெளியிட்டு தனது உணர்வைக் காட்டிய பெருமை இப்பத்திரிகைக்கு உண்டு. ஒருமுறை மட்டுமல்ல; இறந்துவிட்டார் என்று தான் வெளியிட்ட செய்திக்கு மறுப்போ, மன்னிப்போ தெரிவிக்காமல், தன்னால் சாகடிக்கப்பட்ட பின்பு மீண்டும் ஒருமுறை பிரபாகரன் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்ட சிறப்புக்குரியது. தொடர்ந்து தமிழ் இளிச்சவாயர்களிடம் சந்துமணி, பொந்துமணி என்ற பெயர்களில் தமிழின எதிர்ப்புணர்வை ஊட்டி அரிய செயல் செய்துவரும் பாரம்பரியமிக்க பத்திரிகை ஆகும். சிங்கள ஆதரவு என்றில்லாமல் இருப்பினும், தமிழ் எதிர்ப்பு என்ற உணர்வில் ஒன்றியுள்ள இப்பத்திரிகை இவ்விருதுப்பட்டியலில் கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திணபிணி: ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்தக் குழுமத்தின் பத்திரிகைகள் வெளியிடும் கருத்துக்கணிப்பில் சில சமயம் உண்மை வெளிப்பட்டு சிங்கள அரசுக்கு சங்கடம் ஏற்பட்டாலும், இதன் உள்ளக் கருத்தை கட்டுரைகளிலும், தலையங்கங்களிலும் காணலாம்.

    திக்முக் மற்றும் திருவாளர் சீ: தன்னியல்பாகவே திக்முக்கில் வெளிவரும் செய்திகள் சிங்கள அரசுக்கு ஆதரவாக உள்ளதோ இல்லையோ தமிழருக்கு எதிராகவே இருக்கும். நடுச்சென்டர் பத்திரிகை என்று பெயரெடுத்திருக்கும் இதன் ஆசிரியர் திருவாளர் சீ அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் விருதுதர நிறைய பரிந்துரைகள் வந்திருக்கின்றன. இதுபற்றி அவரிடம் கருத்துக் கேட்டபோது, தொண்டையைச் செருமி மைக்-கின் சென்சிட்டிவிட்டியைப் பதம் பார்த்த அவர் தெரிவித்ததாவது: எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு எழுதுவதாக யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஏனெனில் எந்த விருதுக்கும், பதவிக்கும் நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது. நான் அவ்வாறு எழுதுவதாலேயே எனக்கு விருது கிடைக்கும் என்று யாரும் எண்ணிவிட முடியாது. நான் எவ்வாறு எழுதினாலும் அவ்வாறு எழுதுவதை மாற்றமுடியாது. எந்த விருது கிடைத்தாலும், அதற்காக நான் அவ்வாறு எழுத முடியாது. உண்மையில் நான் எனக்குத் தோன்றிய உண்மைகளையே எழுதுகிறேன். எனக்குத் தோன்றியவையெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்ற போதும் அவை உண்மை என்பதை மக்கள் நம்புகிறார்கள். எனவே அந்த உண்மைகளை நான் எவ்வாறு எழுதினாலும், அவ்வாறு அதை எழுது-வதற்கு யாரும்...... இவ்வாறு அவர் மண்டையைத் தடவியபடி பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியில் மைக்கைப் பிடுங்கிக் கொண்டு வந்து விட்ட நிருபர் இச்செய்தியை எவ்வாறு எழுதுவது என்ற குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே எண்ணற்ற அமைச்சர்கள் வைத்திருக்கும் சிங்கள அதிபர், திருவாளர் சீ அவர்களின் இந்தக் கருத்தைப் புரிந்து-கொண்டு பரிந்துரைக்க புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம் என்ற கருத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

    தனிநபர் விருதுகள்: தனிநபருக்கான விருதுப்-பட்டியலில் நீண்டகாலமாக க்யூவில் நிற்கும் ஊரோடு, உளறுவாயன்; தகரபாலு ஆகியோரை முந்திக்-கொண்டு பூனசேகரன் தனது நாவன்மையால் முன்னணியில் நிற்கிறார். கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா என்று ஒரு கருத்து சிங்கள அரசிடம் நிலவினாலும் புதுக்கத்தி வேகமாய்ச் ..... செயலாற்றும் என்ற கருத்தையொட்டி இவருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவருக்கும் போட்டியாக இப்பட்டியலில் வழியை அடைத்து நிற்கும் ஆர்ப்பாட்ட தி.மு.க.வின் தலைமை, தனக்கு விருது கிடைக்காவிட்டால் சிங்கள அரசை எதிர்த்து விருது நகரில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்-பதாக வந்த செய்தியினாலும், தனிநபர் உளவாளி-யான பணந்தா கட்சியின் தலைவரும், ஒரே தொண்டருமாகிய சூனாசாமி தனக்கு விருது கிடைக்காவிட்டால், வேகா மண்டல வெளிகிரகவா-சிகளுக்கும் ராஜபக்க்ஷேவுக்கும் உள்ள ராஜீய உறவு-களை வெளிப்படுத்தும் ஆதாரம் கிடைத்துள்ளதாக அளிக்கவுள்ள அதிரடி அறிக்கையாலும் நெருக்கடி எழுந்துள்ளது.

    தினமுரண்: பத்திரிகைகள் பிரிவில் புதிதாக சிங்கள ஆதரவு நிலை எடுத்திருந்தாலும், பத்திரிகை, தொலைக்காட்சி எனப் பல தளங்களிலும் சிங்கள அரசுச் செய்திகளை ரூபவாஹிணிக்கு நிகராக வெளியிட்டு வருவதாலும் தினமுரண் குழுமத்துக்கு வாய்ப்புகள் சூரிய பிரகாசமாக உள்ளன. ஆனாலும், இந்த ஆதரவுக்குரல் விரைவில் சிங்களத்தில் ஒரு சேனல் ஆரம்பிக்க போடப்படும் அடித்தளமோ என்ற அச்சம் உள்ளூர நிலவுவதாகத் தெரிகிறது. ஆனாலும் முன்னாள் சிங்கள ரத்னாவான கிண்டுபாம் அவர்களின் பரிந்துரை இவர்களுக்கு விருது கிடைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

  11. Anonymous Says:

    SLA death toll hits 170 in Vanni, hundreds wounded, 36 bodies recovered - LTTE

  12. Jeyapalan Says:

    பவானந்தி இதை ஒரு தனிப் பதிவாகவே செய்திருக்கலாம். நன்றாக உள்ளது.

  13. Anonymous Says:

    இந்து ராமுக்குச் சரியான வயிற்றுப் போக்காம்!
    கொஞ்சம் சிங்கள வாந்தி பேதி மருந்து அனுப்பி வைத்துள்ளார்களாம்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails