ராஜபக்ஷ யின் மூக்கை உடைத்தார், கருணாநிதி

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டே அங்கேயுள்ள தமிழர்களையும் அழிக்கத் திட்டமிடுகிறார், அதற்காகவே இந்திய அரசிடம் கெடு கேட்கிறார், இதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும், அவரிடம் ஏமாந்துவிடக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

நேற்று இலங்கை அதிபர் புதுடில்லியில் இந்தியப் பிரதமருடன் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தக் கருத்துக்கள் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒருமித்து போர் நிறுத்தம் கோரிக்கொண்டிருக்கையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து பல கட்சித்தலைவர்களும் பேசினர்.

அ இ அ தி முகவின் ஓ.பன்னீர்செல்வமோ, மஹிந்தாவின்கூற்றுக்கள் தமிழகக் கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு எதிராக அமைந்துள்ளன, எனவே ஏற்கனவே அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவெடுத்தபடி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்துப்பேசும்போதுதான் முதல்வர் கருணாநிதி ராஜபக்ஷவிடம் மத்திய அரசு ஏமாந்துவிடக்கூடாது என்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in |

5 comments:

  1. Anonymous Says:

    ஈழப்பிரச்சனையை இவ்வளவு காமெடியாக்கி, நெடி வர வைத்திருக்கும், கலைஞருக்கு இன்னும் நீங்கள் சப்பைக் கட்டு கட்டுவது வேதனை அளிக்கிறது. தயவு செய்து இனிமேல் செய்யாதீர்கள்.
    தமிழன்.

  2. Mike Says:

    நன்றி அனானி அவர்களே உங்கள் கருத்துக்கு, நிச்சயமாக நான் யாருக்கும் சப்பை கொட்டுவதில்லை. ஒரு நடுநிலைவாதியாக நீங்கள் இருந்து பார்ப்பிர்கள் ஆனால் உங்களுக்கு உண்மை தெரியிம், பார்ப்பானாகவோ, அ.தி.மு.க வோவாகவோ நான் எழுதியதை படித்தால் உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றும். வேறி வழியில்லை கலைஞரை விட்டால் இன்று ஈழத்தமிழர்களுக்கு. உங்கள் தலைவியையோ, சோ-வையோ உண்மை பேச சொல்லுங்கள், ஈழத்துக்கு எதிராக நடக்குன் இன அழிப்பை தடுக்க சொல்லுங்கள். நான் யாருக்கு சப்பை கொட்டுவேன் என்று பாருங்கள். (ஈழ)தமிழர் காக்கப்படவேண்டும் என்பதே என் ஆசை.

  3. Anonymous Says:

    சோ, இந்து ராம், பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்த ஆள்காட்டி. சு.சுவாமி நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. அவர்களைப் புறக்கணித்தாலே போதும்.
    நீங்க என்னைப் பார்ப்பானாக, ஜெ யின் தொண்டனாகப் பார்த்தது உங்களுடைய தவறான புரிந்துணர்வைக் காட்டுகிறது. தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுதுங்கள். கலைஞர் செய்வது என்ன எண்டு உங்களுக்குத் தெரியவில்லையா?
    இல்லை தெரியாதது போல் நடந்து கொள்கிறீர்களா? தற்போதுள்ள பிரச்சனை ஈழத்தமிழரின் மீது தாக்குதலை நிறுத்த வகை செய்ய வேண்டும். அனைத்து கட்சி தீர்மானத்தில் ஒண்டு கூட நிறை வேறாத நிலையில், கலைஞர் செய்தது என்ன? சிந்தியுங்கள் அய்யா! தமிழகத்தை ஆள யாரும் பிறந்து வரவில்லை. இந்தியாவின் பிரதமர்கள் எல்லாம் திடீர் என்று வந்தவர்கள் தான். புரிந்து கொள்ளவும். நன்றி!

  4. Mike Says:

    உங்களின் வருத்தம் எனக்கு புரிகிறது. ஆனால் கலைஞரால் அவ்ளவுதான் பண்ண முடிகிறது. அதற்க்காக அவர் சில நல்லது பண்ணுவதையும் குறை சொன்னால் அடுத்து ஈழத்தமிழர்களுக்கு பாடுபட யார் இருக்கிறார்கள். சிலரை தட்டி கொடுத்தும் வேலை வாங்கலாம் என்று சிந்தியுங்களேன்.

  5. Anonymous Says:

    கலைஞர் என்ன செய்து விட்டதாக நினைக்கிறீர்கள்! தட்டி கொடுத்து வேலை வாங்குகிற அளவுக்கு உங்களுக்கு நெருக்கமாக இருந்தால் அவருடைய படத்தை உங்கள் வலைப்பக்கத்தில் போட்டு, ஒரு ர்ரூபாய் அரிசி, இலவச காஸ், இலவச நிலம், சத்துணவு முட்டை போன்ற வற்றை பிரச்சாரம் செய்யலாமே. ஏன் ஈழப்பிரச்சனையை வைத்து அவரைக் கொச்சைப் படுத்துகிறீர்கள் அல்லது ஈழ மக்களை அவரை வைத்துக் கொச்சைப் படுத்துகிறீர்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails