கருணாநிதி கோபம்- மகிந்தவின் உறுதிமொழியை நம்பி பிரதமர் ஏமாந்து விடக்கூடாது

மகிந்த ராஜபக்சவின் உறுதி மொழிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமருக்கு எச்சரித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவி்த்தார். அவர் அங்கு பதிலளிக்கும் போது:-

தமிழர்கள் மீதான வான் தாக்குதலை நிறுத்த வேண்டும். தமிழர்களின் குடிமனைகள், ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த மகிந்த ராஜபக்ச தயாரில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களைக் காக்கும் பொறுப்பை நான் தட்டிக்காக்க மாட்டேன் என மகிந்த ராஜபக்ச சுவைபடத் தெரிவித்திருப்பது, தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற எண்ணத்திலேயே அவர் கூறியிருக்கிறார். எனவேதான், மகிந்த ராஜபக்சவின் கூற்றை இந்திய மத்திய அரசு சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என கூறிக்கொண்டு, மறுபுறத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தி இலங்கை இனப் பிரச்சினையை இரு வேறு பிரிவாக மகிந்த ராஜபக்ச பார்க்கிறார். விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினாலும், தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசினாலும் அது விடுதலைப் புலிகள் மீது நிட்சயமாக குண்டு வீழும். எனவே யுத்த்தின் மூலம் இரு பிரிவினரையும் அழிக்க மகிந்த ராஜபக்ச யுத்தத்தை மேற்கொள்கின்றார்.

மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட காலக்கெடு தன்மை விளங்குகின்றது. இவற்றையெல்லாம் நம்பி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாந்து விடக்கூடாது எனத் தெரிவித்தார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails