மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு

அய்யா அவரு விடாகண்டன், கொடாகண்டன், இந்தியாவுக்கு வந்தே பட்டை நாமம் போட்டவர் 100 கோடி இந்தியர்களுக்கு. பிடிச்சு வைச்சு ஒரு பதிலை கேளுங்கய்யா அல்லது இந்த ஆளு தீர்வு சொல்ற தேவையே இல்லாத அளவுக்கு தமிழர்கள் அழிக்கப்படுவார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும் எனவும் மகிந்தவிடம் மன்மோகன் சிங்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் அழைப்பதாக இந்தியப் பிரதமரிடம் மகிந்த தெரிவித்தார்.

எனினும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களை வெளியேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் ஒன்றினை நடத்துமாறு ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று அரசில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails