கலங்கும் விஜய்! சின்னப்பிள்ளைங்க என்ன பாவம் பண்ணுச்சு?

இலங்கை தமிழர்களுக்கு ஆதர வாக கடந்த 16-ந் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங் களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் நடத்திய உண்ணா விரத போராட்டம் "விசிலடிச்சான் குஞ்சுகள்தான் ரசி கர்கள்' என்கிற இமேஜை மாற்றியதோடு "அரசியலில் விஜய்' என்கிற புது வடிவத்தையும் கொடுத்திருக்கிறது! சென்னையில் விஜய், மனைவி சங்கீதா, அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன், அம்மா ஷோபா உட்பட ஆயிரக்கணக் கான ரசிகர்களும் சிங்கள அரசை கண்டிக்கும் விதமாக கருப்பு உடையணிந்து கலந்து கொண்டனர். அமைதி யாக தலைவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த விஜய்யிடம் சில கேள்விகளை வைத்தோம்.

நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட நீங்கள் ரசிகர்களுடன் தனி போராட்டம் நடத்த தனி காரணம் ஏதேனும் உள்ளதா?

விஜய் : ‘'தமிழ் உணர்வுங் கிறது என் ரத்தத்தோட, உயிரோட கலந்தது! என்னோட தமிழ் உணர்வு வெறித்தனமானது! நான் நடிச்ச மூணாவது படம் "ரசிகன்'. இதுதான் என் முதல் வெற்றிப்படம். இந்த வெற்றியைப் பார்த்துட்டு தெலுங்கில் நடிக்க கேட்டாங்க! நான் மறுத்துட்டேன்! சிவாஜி சாரோட ‘"ஒன்ஸ்மோர்' படத்துல நடிச்சேன்! இந்த கதையை தெலுங்கில் நாகேஸ்வரராவ் சாருடனும், ஹிந்தியில் திலீப்குமார் சாருடனும் நடிக்கக் கூப்பிட் டாங்க! இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள்கூட நான் நடிக்க மறுத்தேன்! என் அப்பாகூட "நல்ல வாய்ப்பு! சம்மதி'னு சொன்னார். ஆனா பிடிவாதமா மறுத்துட் டேன்! தமிழ் மொழி தர்ற அந்தஸ்தும், சோறும் போதும்ங்கிற என்னோட தமிழ் உணர்வுதான் இதுக்கு காரணம்!

எனக்கு நல்லா இங்கிலீஷ் பேசவரும். என் மனைவி லண்டன்ல வளந்தவங்க! ரொம்ப ஸ்டைலிஷா இங்கிலீஷ் பேசுவாங்க! ஆனா என் பிள்ளைங்க சுத்த தமிழ் குழந் தைங்களா வளரணும்கிறதால் வீட்டில் முழுக்க தமிழ்தான் ஆட்சிமொழி! எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் பேசும் தமிழர்கள் நம்ம உடன்பிறப்புதான்! அதனால்தான் இலங்கை தமிழர்களுக்காக திரையுலகின் பல்வேறு அமைப்பு களும் நடத்திய போராட்டத்தில் கலந்துக் கிட்டேன்! பப்ளிசிட்டியே இல்லாம அனைத்து கட்சிகள் நடத்திய மனிதசங்கிலி போராட்டத்திலும் கலந்துக் கிட்டேன்!

தமிழன் தாக்கப்படும்போது எதிர்ப்பை பதிவு செய்யாதவன் தமிழனே அல்ல! எனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வெறும் ரசி கர்கள் மட்டுமல்ல! சமூக அக்கறை உள்ளவர்கள்! என்னோட விருப்பத்தின்படியும், இயக்கத்தினர் விருப் பத்தின்படியும் நாங்கள் தனியே இந்த போராட்டத்தை நடத்துகிறோம்! இலங்கை தமிழர்கள் படும் துயரங் களை கேள்விப்பட்டு, அதனால் மனம் பொறுக்காமல் எங்களின் எதிர்ப்பையும், தமிழர்களுக்கான ஆதரவை யும் பதிவு செய்யவே இந்த போராட்டம்!

இலங்கை தமிழர் நிலை எவ்வளவு தூரம் உங்களை பாதிப்படைய வைத்திருக் கிறது?

விஜய் : சொந்த மண்ணில் வாழமுடியாமல் இதுவரை ஒருலட்சம் ஈழத்தமிழர்கள் அகதி களாக இந்தியாவுக் குள் வந்திருப்ப தாக கேள்விப் பட்டேன்! அந்த மண்ணிலேயே வீடுவாசலை விட்டு காடுகளுக்குள் சாப்பிடக் கூட எதுவுமில்லாமல் லட்சக் கணக்கான மக்கள் கதறிக்கொண்டி ருப்பது கண்ணீரை வரவழைக்கிறது! எத்தனையோ தமிழ்ச் சகோதரிகளை கொடூரமாக கற்பழித்து சிதைத்துக் கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் கொதிப் படைய வைக்கிறது! ஸ்கூலுக்குப்போற சின்னப்பிள்ளைங்க என்ன பாவம் பண்ணுச்சு? பள்ளிக் கூடத்துமேல குண்டு போட்டதில் பூ மாதிரி குழந்தைங்கள்லாம் கரிக்கட்டையா கொண்டுவரப்படுறத சி.டி.யில் பாத்தப்போ நெஞ்சு வெடிச்சுப் போச்சுங்க! எனக்கு குழந்தை ரசிகர்கள் நிறைய இருக்காங்க! அதனாலதான் அந்த குழந்தைங்க தீயில பொசுங்கி கிடக்கிறத சகிச்சுக்க முடியல!

உங்க போராட்டத்தின்போது அரசியல் கட்சியினர் நேரில் வந்து வாழ்த்தியிருக்காங்களே?

‘விஜய் : இது விஜய் நற்பணி இயக்கத் தினர் மட்டுமே நடத்திய போராட்டம்! அத னாலதான் நாங்க சினிமா இண்டஸ்ட்ரியில்கூட யாரையும் இன்வைட் பண்ணல! ஆனா தலைவர் கள் விரும்பிவந்து வாழ்த்தினதை எனக்கும், என் இயக்கத்துக்கும் கிடைச்ச அங்கீகாரமா நினைக்கிறேன்! மாநிலம் முழுக்க 37 இடங்கள்ல எங்க இயக்கம் போ ராட்டம் நடத்தியது! சேலம், திருச்சி, குறிப்பா தஞ்சாவூர்ல அனைத்துக்கட்சியினரும் வந்து வாழ்த்தியிருக்காங்க! சேலத்தில் 3000 ரசிகர்கள் பிரமாண்டமான போராட்டமா நடத்தியிருக்காங்க!

ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் அரசியல் பிரவேச கோரிக்கை வைப்பதுபோல உங்க ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறாங்களா? அதனால்தான் அரசியல் இயக்கம்போல உங்க மன்ற செயல்பாடுகள் இருக்கா?

‘விஜய் : இயக்கத்தின் பல மாவட்டசெயலாளர்களும் "நீங்க அரசியலுக்கு வரணும் தலைவா'னு தொடர்ந்து கோரிக்கை வச்சுக்கிட்டுதான் இருக்காங்க! நடிகனாகணும்னு முடிவெடுத்த துமே என்னை வெளிநாட்டுக்கு அனுப்பி நடிப்பு பயிற்சி எடுத் துக்கவச்சார் எங்க அப்பா! சினிமாவை கத்துக்கிட்டதாலதான் சினிமாவில் ஜெயிக்க முடியுது! வீடு-வீதி-ஊர்-நாடு! இதை நேசி என்கிற சமூக பிரக்ஞையோடதான் இப்போ நாங்க செயல் படுறோம்! அரசியல் கத்துக்கிற பக்குவம் இன்னும் வரல!‘'

இப்போ கொடிகட்டி, கட்-அவுட் வைக்கிற ரசிகனை இன்னும் பத்துவருஷம் கழிச்சு அதே நிலைமையில் வச்சிருக்க மாட்டோம்! சமூக அந்தஸ்து பெற்றுத்தருவோம்னு உங்க அப்பா நக்கீரனிடம் சொல்லீருக்காரே?

விஜய் : அப்பாவோட விருப்பம் அதுவா இருக்கலாம்! அரசியலுக்கான பக்குவம் இப்போ எனக்கு இல்ல!

நாளை...?

Posted in |

2 comments:

 1. Anonymous Says:

  வாழ்த்துகின்றோம். மனிதாபிமானம், இரக்கம் ஆகிய குணாதிசயங்கள் இருப்பதை உணர முடிகின்றது.

  வளர்க!!

  ஈழத்துத் தமிழன்

 2. Anonymous Says:

  தமிழன் என்ற உணர்வு உள்ளேயிருந்து வரவேண்டும்.மக்களை ஏமாற்றுவதற்கும்,அரசியல் வெற்றிக்காகவும் நடிப்பவர்கள் நடிகர்கள் தான் தமிழர்கள் அல்ல.
  தமிழால் பிழைக்கிறோம் என்ற நன்றியாவது இருப்பவர்களையாவது பாராட்டலாம்,நடித்து ஏமாற்றப் பார்ப்பவர்களை மக்கள் கட்டாயம் ஏமாற்றுவார்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails