டிச.1 ல் செ‌ன்னை‌யி‌ல் த‌மி‌ழீழ அ‌ங்‌கீகார மாநாடு: திருமாவளவ‌ன் அ‌றி‌வி‌ப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் மதுரை‌யி‌ல் நடைபெறுவதாக இரு‌ந்த த‌மி‌ழீழ அ‌ங்‌கீகார மாநாடு ரத்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு சென்னையில் டிச‌‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பிரிவான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை' என்னும் புதியதோர் அமைப்பின் தொடக்க விழா, தமிழீழ அங்கீகார மாநாடு ஆகிய 2 நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 26ஆ‌ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்வுகள் டிசம்பர் 1ஆ‌ம் தேதியன்று சென்னை தீவுத்திட‌லி‌ல் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.

ஆகவே, இயக்கத் தோழர்களும், முன்னணி செயல்வீரர்களும், பொதுமக்களும் சென்னை‌க்கு அணி திரண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளம்பரங்கள், துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றில் "டிச.௧ சென்னை" என திருத்தம் செய்து பிரசாரம் செய்ய வேண்டும் எனவும், இந்திய அரசின் போக்கையே மனமாற்றம் செய்யும் அளவில் அம்மாநாட்டுக்கு பெருந்திரளாய் மக்களைத் திரட்ட வேண்டும் எ‌ன்றும் ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails