இதுதான் உள்ளே விட்டு ரவுண்டு கட்டுறதுன்னு சொல்வாங்களா?

பரந்தனில் முன்னேறிய படைக்கு என்ன நடந்தது? இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம்

பரந்தனில் 270 பேரை கொண்ட சிறிலங்கா இராணுவக் குழுவிற்கு என்ன ஆனது. அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பரந்தனில் 270 பேரை கொன்ட இராணுவக்குழு முன்னேறியபோது அவர்களை முன் நகரவிட்டு புலிகள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் , பரந்தனில் உள்ள சில இராணுவக் குழுக்களுடன் முற்றாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அத்துடன் படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.(இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை) ஒரு வாரத்திற்குள், மட்டும் குறைந்தது 927 படையினரை சிறிலங்கா இராணுவம் இழந்துள்ளது.

இதேவேளை, வன்னிப்பகுதி மோதல்களில் கொல்லப்பட்ட 200ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் கொழும்பு ஜெயவர்த்தன மலர்ச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் அமைப்பாளருமாகிய மங்கள சமரவீர தெரிவித்தார்.

இம்மோதல்களில் படுகாயமடைந்த 710 சிறிலங்காப் படையினர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் போது பலியாகும் படையினரது எண்ணிக்கையை வெளியிட ஊடகங்களுக்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைக் கொண்டு செல்ல பாதுகாப்புக் கண்காணிப்பகத்தை சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails