ஈழத் தமிழருக்கு ஆதரவாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்கள் உண்ணாவிரதம்

நன்றி, நன்றி, நன்றி.

நடிகர் ரஜினிகாந்தின் வேண்டு கோளை ஏற்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி அவரது வேண்டுகோளை ஏற்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொள்ள மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ரபீக், பாண்டியன், பால தம்புராஜ், சோலைராஜா ஆகியோர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈழத்தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டிருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை நாங்கள் முழுவதுமாக ஏற்கிறோம்.

அதனை செயல்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணாவிரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட ரஜினி மன்ற நிர்வாகிகளாகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails