மும்பையில் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரிப்பு
Posted On Wednesday, 12 November 2008 at at 05:38 by Mikeபுரட்சி பரவட்டும்,ஒரு இனத்தையே அழிக்க நினைக்கும் சிங்கள இனவாதத்தை முறியடிப்போம், தமிழ் இன விரோதிகளில் முதல்வன் தினமலரையும் ஒரு கை பார்ப்போம்.
திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் மகிந்த ராஜபக்ச உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் விபரம் வருமாறு,
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக மகிந்த ராஜபக்ச உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/view.php?223MQHH3b3dT9Eqb4d0cWnB4b0dR7Gsb4d0aOpD4202fBLIk2e2cC2h3ecce5j0ece
உங்கள் ஆதங்கம் வருத்தம் புரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி மகிந்தா ராஜபக்சேக்கு எதிராக ஒன்றும் செய்ய போவதாக இல்லை.
தமிழ்நாட்டில் நாங்கள் மறந்து விட்டோம், போன வாரம் தமிழ் ஈழம் பிரச்னை சுவாரஸ்யமாக இருந்தது.
இப்போது எங்களுக்கு சுட சுட செய்தி, வாரணம் ஆயிரம், தெனாவட்டு போட்டி.
குப்பன்_யாஹூ