வாருங்கள் பாராட்டுவோம், தெரிந்து கொள்வோம் ஏமாற்றுகாரர்களை
Posted On Tuesday, 4 November 2008 at at 14:09 by Mikeவாருங்கள் பாராட்டுவோம். ஒரு இந்தியன் தமிழனுக்கு உணவளிக்கிறான், ஆனால் தமிழன் என்று சொல்பவரோ தமிழர் திரட்டும் நிதியை தடுக்க பார்க்கிறார். மக்களே புரிந்து கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். அதற்கு ஒரு நொண்டி சாக்கும் சொல்கிறார். இன்னுமா நம்புகிறீர்கள்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் பல்லா யிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட நிவாரண நிதி வழங்கிடுமாறு முதல்வர் கலைஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கியுள்ளார். முதல்வர் கலைஞருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.