ஜெ அவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள், அறிவுரை

கருணாநிதி பண்ணாலும் தப்பு பண்ணாட்டியும் தப்பு. உண்மையாக தமிழர்கள் மேல் பாசமிருந்த்தால் நீங்கள் சண்டை போட வேண்டியது சிங்கள பேரினவாதத்தோடுதான், கருணாநிதியோடு அல்ல, பதவி மேல் ஆசை இருந்தால் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஆட்சிக்கு வர நினைப்பதே நேர்மையான முறை, அதை விட்டு கருணாநிதியை குறை சொல்வதால் மட்டுமே ஆட்சி பிடிக்க நினைப்பவரை எந்த மக்களும் விரும்பமாட்டார்கள்.

முதலில் தமிழின உணர்வொடு நடந்து கொள்ள வேண்டும். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த போராடுங்கள். நீங்கள் போராடுபவர்களைதான் தடுத்து நிறுத்துகிறிர்கள், இப்போது உங்கள் தமிழகமே உங்களுக்கு எதிராக திரும்பியிள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக தமிழ் இன உணர்வாளர்கள் மேல் பழி போடுவது என்பது எந்த மடையனும் பண்ண மாட்டான். வீணாப்போன தினமலரின் பேச்சை கேட்டு வம்பாக போகாதிர்கள். போராடதான் தெரியவில்லை, போராடுவர்களை போற்றுங்கள்.

கருணாநிதி மனிதசங்கிலி, அனைத்து கட்சி கூட்டம், நிதி திரட்டுதல் மூலம் தமிழ் மக்கள் மனதில் எங்கோ சென்று விட்டார். இதை கொச்சை படுத்துவது இன்னும் உங்களை கீழேயே செல்ல வழி வகுக்கும். ஒரு ஆரோக்யமான போட்டியை வளருங்கள் தமிழரை காப்பாற்றுவதில்.

கமல் சொன்ன மாதிரி தமிழன் என்று உலகில் யாராய் இருந்தாலும் அவனுக்கு மதிப்பு கொடுத்து பழகுங்கள்.

சென்னை :"முதல்வர் கருணாநிதியால் வசூலிக்கப்படும் பணம் எங்கே போகும்?' என, ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதிநவீன சாதனங்களை இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? அப்பாவி இலங்கைத் தமிழர்களை இரக்கமற்ற முறையில் சுட்டுத் தள்ள இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்கியபோது மவுனம் சாதித்த கருணாநிதிக்கு, தானும், தனது கட்சியும் தமிழ் மக்களை அழிப்பதற்கு துணை போயிருப்பது தெரியாதா? தமிழக மக்கள் மீது கருணாநிதி எப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறாரோ, அதேபோல் இலங்கைத் தமிழர்கள் மீதும் கருணாநிதிக்கு அக்கறை இல்லை.


விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்னைகளில் தி.மு.க., அரசின் கையாலாகாத்தனம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த நேரத்தில், வரப்பிரசாதமாக வந்த இலங்கைத் தமிழர் பிரச்னையை பொதுமக்களின் கவனத்தை திசைத் திருப்பும் வகையில் கருணாநிதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது கருணாநிதி, தனக்குப் பிடித்தமான பொழுது போக்காகிய பண வசூலிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.


இலங்கைத் தமிழர்களின் அவல நிலையைக் காரணம் காட்டி, வசூல் வேட்டையை துவக்கியிருக்கிறார். இடைவிடாது பண மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.வசூலித்த பணத்தை கருணாநிதி என்ன செய்யப்போகிறார்? அந்தப் பணத்தை இலங்கைத் தமிழர்களை உயர்த்துவதற்கு பயன்படுத்தச் சொல்லி இலங்கை அரசை கேட்டுக் கொள்ளப் போகிறாரா? வசூலித்த பணத்தை விடுதலைப் புலிகளிடம் கொடுக்கப் போகிறாரா? தமிழர்களுக்குத் தேவையானவற்றை வாங்க மேற்படி நிதியை பயன்படுத்த அதை இலங்கைக்கு அனுப்பப் போகிறாரா? இவ்வாறு ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails