திருந்துமா தமிழனால் பிழைக்கும் ஜென்மங்கள்

தினமலரின் ஈன புத்தியை பாருங்கள், ஒரு போராட்டத்தினை எப்படி கொச்சை படுத்துகிறது என்று, ஈழதமிழருக்கான போராட்டம் என்பதையே மறைத்து எப்படி இருட்டடிப்பு செய்கிறது பாருங்கள். இதற்கு வைத்த தலைப்பை பாருங்கள்.

துவங்குவதற்கு முன்பே உடைந்தது புதிய கூட்டணி * இந்திய கம்யூனிஸ்ட் முயற்சிக்கு அ.தி.மு.க., வேட்டு

ஈழதமிழருக்காக நடந்த போராட்டத்தை மறைத்து எப்படி மக்களை திசைதிருப்ப முயல்கிறது.

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அ.தி.மு.க., திடீரென புறக்கணித்ததையடுத்து, புதிய கூட்டணியை உருவாக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி, துவங்கும் முன்னரே "டமார்' ஆகியுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் நேற்று தமிழகம் முழுவதும் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், சென்னையில் அ.தி.மு.க., அமைப்புச் செயலர் முத்துச்சாமி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. அவர் காலை 11 மணிக்கு பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க.,வினர் பலர் கொடிகளுடன் ஆஜராகி இருந்தனர். அவர் பங்கேற்பதை, உண்ணாவிரதம் துவங்கும் போது தா.பாண்டியன் "மைக்'கில் அறிவித்தார். ஆனால், கடைசி வரை வரவில்லை. உண்ணாவிரதம் நடந்த இடத்தில் கூடியிருந்த அ.தி.மு.க.,வினர், கட்சி அலுவலகம், மாவட்டச் செயலர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு போனில் தொடர்பு கொண்டு கேட்டனர்.


"அ.தி.மு.க., பங்கேற்கவில்லை; திரும்ப வந்து விடுங்கள்' என்ற பதில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அ.தி.மு.க.,வினர் கிளம்பி விட்டனர். இதேபோல, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் புறக்கணித்துள்ளனர். புறக்கணிப்பு முடிவு, காலை 10 மணிக்கு மேல் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வின் இந்த திடீர் முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், காலை 10 மணியளவில் தே.மு.தி.க., சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றார். அவருடன், 2,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கார், ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களில் பிரமாண்ட கொடிகளுடன் ஆஜராகி அமர்க்களப்படுத்தியதால் கோபமடைந்த அ.தி.மு.க., தலைமை, தனது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.


உண்ணாவிரத மேடையில் இடம் பெற்ற தலைவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது. விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதல் எதிர்த்து வரும் அ.தி.மு.க., இந்த போராட்டத்தில் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்பதற்காக, அக்கட்சி புறக்கணிப்பு முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரதத்தை அ.தி.மு.க.,வினர் புறக்கணித்தனர். பா.ம.க., சார்பில் மணி பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ம.க.,வினரும் வேன்களில் கொடிகளுடன் ஆஜராகி இருந்தனர். ஆனால், அந்தக் கட்சியும் கடைசி நேரத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது. அ.தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் அடங்கிய ஒரு புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது. இத்தகைய அணி உருவாக நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டம் விதை ஊன்றும் என்றும் கருத்துக்கள் வெளிவந்தன.


எனவே, எல்லா கட்சிகளின் ஒட்டுமொத்த பார்வையும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது குவிந்தது. இவ்வளவு பரபரப்புக்கு இடையே நடந்த இப்போராட்டத்தை அ.தி.மு.க., நேற்று திடீரென புறக்கணித்ததன் மூலம், புதிய அணிக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி, துவக்கத்திலேயே மூடு விழா கண்டுள்ளது.

Posted in |

5 comments:

 1. அத்திரி Says:

  எதுல தான் அரசியல் பண்ணனும்னு விவஸ்தை இல்லாமல் போயிற்று. என்றைக்கு அனைத்துக்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போராடுகின்றனவோ அன்றைக்குத்தான் இவர்கள் திருந்துவார்கள். ஆனால் நடக்குமா அது??????????????

 2. Anonymous Says:

  நரி கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை.

  இந்தத் தினமலத்தைத் தொடும் தமிழர்கள் உடனே டெட்டால் போட்டுக் கையைக் கழுவ வேண் டும்.
  தொடாமல் இருப்பதே மிகவும் சிறந்தது!

 3. அது சரி Says:

  தமிழனால் பிழைக்கும் ஜென்மங்கள் ... தினமலரின் ஈனபுத்தி...

  நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் தினமலராவது பத்திரிக்கை காகிதம் வாங்கி, ஆட்களுக்கு வேலை கொடுத்து, அச்சடிக்க செலவு செய்து அப்புறம் தான் லாபம் பார்க்கிறது..

  ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் அரசியல் கட்சிகள்? அதிமுகவின் ஈன புத்தி என்று உங்களுக்கு தோன்றவில்லையா?? தவிர கம்யூனிஸ்டுகள் இப்பொழுது போராட்டம் நடத்துவது ஏன்? மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்த போது இவர்கள் ஈழத்தமிழர்களுக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லையே??

  தினமலர் பெரிய தப்பு செய்ததாக சொல்ல முடியாது. அவர்கள் இன்றைக்கல்ல, பல வருடங்களாகவே எதிர்ப்பு நிலை தான்.

  ஆனால், கருணானிதி, ஜெ.., கம்யூனிஸ்டுகளுக்கு? இவர்களுக்கு பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றால் ஈழத்தமிழர்கள் நியாபகம் வருகிறார்கள். இலங்கைத்தமிழர்களின் உயிர் பிரச்சினை இவர்களுக்கு பத்திரிக்கையில் விளம்பரம் செய்வது போல் ஆகிவிட்டது...

  உண்மையில் கம்யூனிஸ்டுகளின் நோக்கம் என்ன? ஒரு புதிய அரசியல் அணியை சேர்ப்பது தானே?? அதற்கு இலங்கை தமிழர்களை பயன்படுத்திய கம்யூனிஸ்டுகளின் செய்கை ஈனத்தனமா இல்லை இதை தோலுரித்துக்காட்டிய தினமலர் செய்வது ஈனத்தனமா??

  எனக்கு தெரிந்த வரை, இந்த விஷயத்தில் வைகோ மட்டுமே நேர்மையாக இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இரு ந்தாலும், ஜெ. கூட்டணியில் இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்கான அவரது குரல் மட்டும் என்றும் நிலையானது. மற்றவர்கள் எல்லாம் பிழைப்புக்காக இலங்கை தமிழர்களை உபயோகப்படுத்தும் கயவர்கள்!

  வாழ்க வை.கோ!

 4. Anonymous Says:

  ஈன புத்தி தினமலரை புறக்கனித்து ஒதுக்குவதுத்தான் நல்லது............

 5. சுரேஷ் ஜீவானந்தம் Says:

  அது சரி:
  கம்யூனிஸ்டுகள் முன்னரும் இது பற்றி பேசியிருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாகவே ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியை வழமைக்கு மாறாக தங்களது மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்றும் ஞாபகம்.

  இப்படி ஒவ்வொருவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்த்தால் ஒருவரையும் நம்ப முடியாது.

  இன்று தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களில் இப்படிக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் போராடுவதற்கான பக்குவம் கம்யூனிஸ்டு தலைவர்களிடம் இருக்கிறது. ஜெ. புறக்கணிப்பை தா.பாண்டியன் எதிர்கொண்ட விதம் ( சன் நியூஸ் - நேற்று) இதற்கு சாட்சி.

  இத்தனை நாள் ஏன் செய்யவில்லை என்று கேட்பது தவறு. இத்தனை நாள் இத்தனைப் பதிவுகள் இப்பிரச்சினையில் வரவில்லையே, அது போலத்தான் இதுவும்.

  எப்படியோ இந்த உணர்வு தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டால் அதனால் இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்து தாக்குதல்களை நிறுத்தினால் மகிழ்ச்சி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails