அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி
Posted On Friday, 24 October 2008 at at 13:42 by Mikeஇவனுங்களுக்கெல்லாம் நம்ம சத்யராஜ் பதில்தான் சரி, என்னுடைய பதில்களையும் கேட்டுக்கொ.
1) கொக்க மக்கா, உலகமே தமிழன் அழியறான்னு கண்ணீர் விடுது, தமிழ் தெரியாதவன் எல்லாம் அய்யோ பாவம் அப்படின்னு புலம்பறான், நீ நல்லா பேசுவே, ஏன்னா தமிழனை ஏமாத்தாதவன் எவனும் கிடையாது, அதுல நீயி ஒன்னுடா.
நீ நடிக்கறது எந்த மொழி தமிழ், அதை பார்க்கறது தமிழன், யாருட்ட இருந்து உனக்கு இவ்வளவு கோடி, கோடியாய் பணம் கிடைக்கிறது புண்ணாக்கு, என்னா டைரக்டர் அவரோட வீட்டு தோட்டத்தில விளையற மரத்திலிருந்த்து பறிச்சி கொடுக்கறாரு நினைக்கறியா. இல்லடா எல்லாம் தமிழன் கொடுத்த காசு. உன்னை போயி தியேட்டர்-ல பார்க்றோம்ல அதனால வர்ற காசு. அதுவும் வெளி நாடுகளில் ஓட காரணம் ஈழ்த்தமிழர்களே. உன்னை வாழவைக்கிறவன் குலம் அங்கே அழியுது. நீ இப்படி கேள்வி கேட்க எப்படிடா மனசு வரது.
உனக்கு எல்லாம் தமிழ் உணர்வு இல்லாட்டியும், உண்ணா விரதத்துக்கு சும்மா வந்து உட்காந்துட்டாவது போகனும். இதுல நீ கேள்வி வேற கேட்கறியா. அல்லது தமிழர்களிடம் சம்பாதித்த பணத்தை கொடுத்துட்டு பொட்டி, படுக்கையோட கிளம்பு.
இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.
இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.
உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கோமாளிகளுக்கு ஈழத்தில் என்ன நடக்குதுனு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா
Idharku artham ipadiyum eduthu kollalam...
inga unna viradham irundhu ennapa use...atleast srilanka border ku poi dhilla irundha epadi irukkum
cauvery water ilana chennai la unna viradham irukkanga..
hoganakkal issue na chennai la irukkanga..
cauvery ya vidunga..adhukku karnataka border poganum...hoganakkal namma oorukulla dhana irukku..
pls explain
சரியான அடி, இவனுங்க திருந்தவே மாட்டானுங்க பாஸ்
http://www.nathiyosai.com/2008/10/blog-post_8617.html இதையும் பாருங்க