ஈழத்தமிழர் விடியல் எப்பொழுது
Posted On Friday, 24 October 2008 at at 14:14 by Mikeவிடியல் விடியும் நேரம்
ஆனால்
ஈழத்தமிழர்களின் வாழ்வு
முடியும் நேரம்
தமிழர்களை காலை எழுப்புவது
கோழி கூவும் சத்தமல்ல
வெடிகுண்டு சத்தங்களே
வெடிகுண்டுகளின் சத்தங்கள்
அதை தொடர்ந்து
வரும் மரண ஓலங்கள்
வாழ்வு முடிந்தது சிலமணித்துளிக்குள்
இன்னும்
விடிவே இல்லை
இந்த மக்களுக்கு
இதில் இனவெறிக்கு தூபம்
போடும் தமிழின சில
தலைவர்களின் அறிக்கைகள்
அய்யோ கடவுளே நீ
இருப்பது உண்மையானால்
இவர்களை காப்பாற்று
இப்போது உடனே.
எனக்கும் என் முதல் கவிதை வரும்
என் ஈழமக்கள் படும்
துன்பங்களை பார்க்கும் போது.