ராஜபக்சே என்ற சிங்களப் பேரினவாதத்தின் நவீன இட்லர்!

தமிழக தலைவர்களே,ஈழதமிழர்களுக்க்காக போராடுங்கள். தினமலர், தினமணி எல்லாம் திருந்த வையுங்கள். அங்கே தமிழர் இறந்தால் கொண்டாடும் இவர்களை என்ன சொல்வது. இவர்கள்தான் தமிழக மக்களுக்கு தமிழீழம் பிடிக்காத மாதிரி ஒரு மாயையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆப்பு வையுங்கள்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தத்தம் தளங்களில் போராட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க திருப்பம் என்றும், இதில் அரசியல் மாச்சரியக் கருத்துகளுக்கு இடம் கொடுக்காமல் சுருதி பேதம் இல்லாமல் ஒரே கருத்தை ஒலிக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:-

நமது பக்கத்து நாடான இலங்கையில் வாழும் தமிழர்கள் நாளும் சொல்லொணாக் கொடுமைகளுக்கும், வருணிக்கப்பட முடியாத வாழ்வின் சோகங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்!

கொழும்பில் வாழும் தமிழர்களைக்கூட விட்டு வைக்கவில்லை - ராஜபக்சே என்ற சிங்களப் பேரினவாதத்தின் நவீன இட்லர்! இரண்டு நாள்களுக்குமுன் வெளிப்படையாகவே அறிவிக்கிறார் - இது சிங்கள நாடு என்று சீறிப் பாய்ந்து முழங்குகிறார்; தமிழர்களின் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சியதால் வாழும் சிங்கள ஆதிக்கம், ஹிட்லரின் மொழியைப் பேசுகிறது; அங்குள்ள தமிழர்கள் சொந்த நாட்டிலேயே நாயினும் கீழாய் நடத்தப்பட்டு, காடு மலை வனாந்திரங்களுக்கு விரட்டி அடிக்கப்படும் கொடுமை உச்சக்கட்டத்தை அடைகிறது!
மற்ற நாடுகளுக்கு உள்ள அக்கறை
இந்தியாவுக்கு இல்லையே!

நார்வே, ஜப்பான், தாய்லாந்து போன்ற பல நாடுகள் காட்டும் மனித நேயத்தைக்கூட, நமக்கு உறவும், உரிமையும் உள்ள மத்திய அரசு காட்டாமல் நடந்துகொள்ளும் வேதனைமிக்க போக்கு வெட்கப்பட வேண்டியதாகும்!

அதோடு, ராடார் கருவிகளை அங்குள்ள இராணுவத்திற்கு இந்தியா உதவுவதும், இராணுவப் பயிற்சிகளை இரகசியமாய் நடத்துவதும் வெந்த புண்ணில் வேலைச் செருகும் கொடுமை போன்றதல்லவா? தமிழ் இன உணர்வு - குறுகிய நோக்கமுடையது அல்ல!
தமிழ்நாடு ஏதோ அமைதியாகி விட்டது என்று மத்திய அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது; பிரதமருக்கு அருகில் உள்ள ஆலோசகர்களும், அதிகாரிகளும் தமிழர்களின் இன உணர்வைத் தவறாக ஏதோ ஒரு குறுகிய உணர்வு (கூயஅடை ஊயரஎளைஅ) என்றெல்லாம் கூறுவது, தங்களது ஆட்சியின் கீழிறக்கத்திற்குக் கொண்டு செலுத்தும் தவறான வழிகாட்டுதலாக அமையும் - அமைந்தும் வருகிறது!

ஈழத் தமிழர்கள் ஏதோ நாதியற்றவர்கள் என்ற நினைப்பு, சிங்கள அரசுக்கோ, மத்திய அரசில் உள்ள சில பார்ப்பனிய அதிகார வர்க்கத்திற்கோ இருக்கக் கூடாது!
திராவிடர் கழகம் நடத்திய மறியலும் - நமது வேண்டுகோளும்!
திராவிடர் கழகம் கடந்த 23.9.2008 அன்று தொடங்கிய (விடுதலை சிறுத்தைகளும் அதில் கலந்துகொண்டனர்) ரயில் மறியல் போராட்டம் எத்தகைய உணர்ச்சி எரிமலையைக் கொட்டியது என்பதை மறக்கலாமா! மறைக்கலாமா?

அதிலேயே நாம் ஒரு கருத்தை விளக்கினோம்; எல்லாக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு வந்துதான் இப்பிரச்சினையில் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் குரல் கொடுக்க வேண்டும் என்பது இன்றைய அரசியல் நடைமுறைக்குச் சாத்தியப் படாது என்ற போதிலும், அவரவர்கள் தங்கள் தளத்தில் தமிழர் களைக் காப்பாற்ற மத்திய அரசை வற்புறுத்துவதோடு, சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்க முன்வருவார்கள் என நம்புகிறோம் என்று கூறினோம்.

எல்லாக் குரலும் மத்திய அரசை வலியுறுத்தவே!
நாளை இடதுசாரி தோழர்களும், ம.தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க. வும் கலந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் என்பதையும், பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இலங்கை தூதுவரகத்தின்முன் ஆர்ப்பாட்டம் எனவும், ம.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் எனவும், ஆளும் தி.மு.க. அதன் பொதுச்செய லாளர் இனமானப் பேராசிரியர் தலைமையில் தி.மு.க. தலைவர் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மயிலாப்பூர் - மாங்கொல்லை யில் இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள்! என்ற தலைப்பில் 6.10.2008, அன்று பேசவிருப்பதும் வரவேற்கத்தக்க சிறப்புக்குரியதாகும்.

முதல்வர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, ஈழத் தமிழர் களுக்காக எத்தனையோ பெரும் இழப்புகளை (ஆட்சி உள்பட) ஏற்று, என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் தி.மு.க. குரல் கொடுக்கவேண்டிய தக்க தருணத்தில் குரல் கொடுக்க முன்வந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கு மிகவும் ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கக் கூடியதாகும்.
பல்வேறு நிகழ்ச்சிகள், அறப்போர் முறைகள் என்றாலும், அவைமூலம் எழுதப்படும் சுவரெழுத்தினை சிங்கள அரசு உணரவேண்டும். மத்திய அரசு அதைப் பார்த்து தமிழர்கள் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் குரல் கொடுக்கத் தவறமாட்டார்கள் என்ற பாடத்தைப் புரிந்துகொள்ளவேண்டாமா?

எல்லா குரல்களும் டில்லியை - மத்திய அரசை வற்புறுத்தவே என்பதை உணர வேண்டாமா?
இது ஒரு நல்ல திருப்பமே!
இது ஒரு நல்ல திருப்பம். இதன் பின்னால் உள்ள உணர்வு எத்தகையது என்பதை உணரவேண்டியவர்கள் உணரவேண்டும்!
இதேநேரத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு களங் களில் தளங்கள் அமைத்து, ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாது காக்க குரல் கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்ற நிலை யில், அவர்களுக்கு நமது அன்பான வேண்டுகோள் ஒன்று உண்டு.
அரசியல் மாச்சரியங்களுக்கு இடம் கொடுக்கவேண்டாம்!

அருள்கூர்ந்து இத்தகைய தருணத்தில், நாம் ஒருவருக் கொருவர் கொண்டுள்ள அரசியல் மாச்சரியங்களை, அணுகுமுறை கருத்துகளைப்பற்றி விமர்சிக்க அந்தத் தளங்களைப் பயன்படுத் தினால், எது பொது லட்சியமோ, எது பொதுநோக்கோ அது மறைந்து ஓடிவிடக் கூடும்.

அனைத்துக் கட்சிகளுக்கும் ஓர் வேண்டுகோள்!
எல்லாக் குரல்களும் சுருதி பேதமின்றி, இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்திடவே - அவர்களுக்கு சுயமரியாதையுடன் வாழ்வுரிமை கிடைத்திடவேண் டும் - சிங்கள அரசின் கோரத்தாண்டவத்தை தடுத்து நிறுத்திடுவதே முக்கியம் என்ற பாணியில் டில்லி மத்திய அரசை வற்புறுத்தும் வகையில் நம் அனைவரது குரலும் ஒலித்தால் நல்லது.

நமது மாற்று, வேற்றுக் கருத்துகளை அங்கே வெளிப்படுத்தாமல், இருப்பது முக்கியம்! முக்கியம்!!அனைத்துக் கட்சியினருக்கும் நமது வரவேற்பு!

Posted in |

3 comments:

  1. Anonymous Says:

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
    இந்து,பொய்மலர்,பொய்மணி ,சோமாரி
    மரியாதையாக்ச் சிங்கள ஆதரவை மாற்றிக் கொள்ளுங்கள்.
    தமிழர்களுக்கு எதிராக யாரும் நடந்து கொண்டால் இருக்குமிடம் இல்லாமல் போய் விடுவீர்கள்.
    பறக்கட்டும் மடல்கள் சோனியா அம்மையாருக்கு.தமிழீழம் ஒன்றே வழி என்பதைத் தரணியே உணரட்டும்.

  2. தேவன் Says:

    அனைத்துக் கட்சிகளும் சொந்த அரசியல் இலாப நட்டக் கணக்குகளை மறந்து கரங்களை இணைப்பது, ஈழத்தின் துயரைத் துடைக்கின்ற விடிவை விரைவு படுத்தும்!
    அந்த பொன்னாளை காத்துக் கிடக்கின்றது ஈழத்தின் விழிகள் அனைத்தும்.

  3. Anonymous Says:

    http://www.hindu.com/2008/10/02/stories/2008100256071300.htm

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails