நாள் 7 - ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம்
Posted On Thursday, 23 October 2008 at at 11:57 by Mikeநண்பர்களே இன்று நாம் நமது போராட்டத்தின் கடைசி நாளில் இருக்கிறோம். ஈழ மக்கள் படும் துன்பங்கள் இன்னும் குறைந்த பாடில்லை, ராசபக்சே-யின் போர்வெறி இன்னும் அடங்கவில்லை. அதனால் இந்த போராட்டம் ஒரு மாத போரட்டமாக மற்றப்படுகிறது. மக்களுக்கு இன்னும் நாம் எடுத்து சொல்ல வேண்டும் ஈழ மக்கள் படும் துயரங்களை. விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து ஈழ மக்கள் படும் துயரங்கல் இங்கே பதிவிடுவோம், ஈழ மக்கள்ல்ன் வாழ்வின் ஒளி ஏற்றுவதில் நாமும் ஒரு முக்கிய பங்காற்றிடுவோம்.
ஆறாம் நாள் - பதிவு
இன்று ஆறாவது நாள், உங்களின் பதிவளிப்புகளுக்கு மிக்க நன்றி. இத்தனை மக்கள் ஈழமக்களிடம் பாசம், நேசம் வைத்திருப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது, கண்டிப்பாக நல்ல வழி கூடிய விரைவில் பிறக்கும். 2% படைப்புகள் இப்போதைய அரசியல் ஆதரவை சந்தேகத்துடன் எழுதியுள்ளன. அது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை இப்போது. நல்லது செய்வார்கள் என்று நம்புவோம் எதிர்காலத்திலும். இல்ல எதிர்காலத்தில் பண்ணமாட்டார்களோ என்று இப்பவே அவர்களை பழித்து பேசுவது அழகல்ல. நம் துரோகிகள்தான் இதை பண்ணுவார்கள் அப்பதான் அரசுக்கோ, ஆதரவாளர்களுக்கோ ஒரு அழுத்தத்தை கொடுத்து அவர்களுக்கு இவர்களுக்கு என்ன பன்னாலும் இப்படிதான் சொல்ல போறாங்க ஒரு நினைப்பு ஏற்படுத்தி விடும்.
இப்ப உள்ள ஆதரவை தொடர்ந்து தக்க வைப்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.
ஐந்தாம் நாள் - பதிவு
இன்று ஐந்தாவது நாள், உங்களின் பதிவளிப்புகளுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக யாரும் எதற்கு போராடுகிறிர்கள் என்று கேட்டால் இந்த இணைபுகளை நாம் பாருங்கள் சொல்லலாம், துரோகிகள் நன்றாகவே புரிந்திருப்பார்கள் எத்தனை மக்கள் தமிழுக்காக வாழ்கிறார்கள் என்று.
வரும் வெள்ளி வரை இந்த போராட்டம் தொடரும், உங்கள் ஆதரவினை அன்புடன் எதிர்பார்க்கும் ஒரு தமிழன். நண்பர் ஒருவர் இலங்கை பதிவர்கள் பதிய முடியாத நிலையை விளக்கியுள்ளார். என்ன ஒரு அடக்கு முறை.
அனைத்து படைப்புகளுமே ஈழதமிழரின் இன்றைய நிலைமைகளை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றது. ஈழமககளின் போராட்டத்திற்கு வலைப்பதிவர்களின் பங்களிப்பு என்ன என்று இனி யாரும் கேட்க முடியாது. இரு நாட்களில் தமிழ்மணத்தை நிரப்பி விட்டீர்கள். அனைத்து பெரும்பாலான சூடான பதிவுகளும் ஈழதமிழர்கள் பற்றியதே.
கண்டிப்பாக புதியவர்களுக்கு ஈழதமிழர் படும் துன்பங்களை மிக அழகாக விளக்கியிருக்கிறிர்கள். ஆனால் தமிழ் மணத்துடன் நம்து பணி முடிவடைந்து போவதில்லை. இதுதான் ஆரம்பம்.
அடுத்த கட்டமாக அனைத்து இடுகைகளையும் நாம் ஆங்கில மொழியாக்கம் செய்ய வேண்டும். அதற்கு தமிழ் ஆங்கில புலமை மிக்கவர்களின் உதவி தேவை. தமிழின உணர்வாளராக, உண்மையானவராக இருந்தால் இன்னும் நன்று. சற்று கடினமான வேலைதான் ஆனால் முயன்றால் முடியாதது இல்லை.
வலைப்பதிவர்களின் பங்களிப்புகளை இங்கு காணலாம்.
http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html
இந்த வாரம் உங்களால் முடிந்த அளவு ஈழதமிழர்கள் படும் கொடுமைகள் பற்றி எழுதுங்கள் அல்லது ஒரு சிறிய கண்டனமாவது தெரிவித்த்தால் குட போதுமானது. நாமெல்லாம் ஈழதமிழர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம் என்று மத்திய அரசுக்கும், சிங்களத்துக்கும் என்றும் நினைவில் இருக்க வேண்டும்.
வலைபதிவு இல்லாதவர்கள், பதிவுகள் இட நேரமில்லாதவர்கள் உங்கள் கண்டனத்தை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்.
ஈழதமிழர்களுக்காக போராடுவதில் பெருமை படுவோம்.
உண்மை வெல்லும்.
நன்றி...
பி.கு நாம் நமது போராட்ட நாட்களை இந்திய நேரப்படியே ஆரம்பிப்போம். ஏதும் உங்கள் இடுகைகள் விடுபட்டால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இங்கே
http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html