தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லையாம் தமிழன்.

ஆமாப்பா, இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழன் அடிமைபட்டு கிடக்க வேண்டும், அவனுக்குன்னு எந்த உணர்ச்சிகளும், தன்மானமும், பகுத்தறிவும் இருக்ககூடாது. நீங்க முன்னேற தமிழன் நாயா உழைக்கனும். எந்த இன உணர்வும் இருக்கக்குடாது. ஹிந்தி கற்றால்தான் அறிவு வளரும். என்னப்பா இது. ஹிந்தி கத்துகிடறது தப்பு இல்ல, ஆனா அது கத்துகிட்டாதான் எல்லாம் கிடைக்கும் என்று மிரட்ட, பயமுறுத்த எந்த உரிமையும் எவனுக்கும் கிடையாது.

தமிழனை அழித்து விட்டு வந்த ராணுவத்தை கருணாநிதி வரவேற்கவில்லையாம், அதனால் இந்தியாவுக்கு இழுக்கு வந்துவிட்டது அதனால் தமிழர்கள் மதிக்கப்டுவதில்லை என்று சொல்வது மடத்தனம் . தினமலர், சோ, சாமிதான் இந்த வேலை பண்ணுவானுங்க. அடுத்தவன் காலை பிடிக்கிறது காரியம் நடக்கனும்னா. நிஜமாவே இதுதாண்டா தமிழ் உணர்வு, தமிழ் பால் குடித்து வளர்ந்தவனுக்குதான் அது எல்லாம் தெரியும். உனக்கு அந்த மாதிரி உணர்வு எல்லாம் வரவே வராது. அதனால என்னோட கோபம், உணர்வு எல்லாம் புரிஞ்சுக்க முடியாது.

ஹிட்லர் இது மாதிரி தட்டி கேட்க ஆள் இல்லாமல்தான் அவர் சீரழிஞ்சு போனார். இந்திய ஜனநாயக நாடு கருணாநிதிக்கும் உரிமை இருக்கிறது, உனக்கும் இருக்கிறது, எனக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகம். ஆனால் இதன் பெயரால் தமிழனை கொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுதான் அநாகரிகம்.

எந்த ஒரு நாட்டில் ஒரு இனம், அரசாங்கத்தால் வஞ்சிக்கபடுகிறதோ, கொல்லப்படுகிறதோ அந்த இனம் எப்போதும் அந்த நாட்டை விரும்பாது. அது சொந்த நாடாக இருந்தாலும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க என்ன பண்ணியது இந்திய அரசு அவர்கள் என்ன நீரோட்டத்தில இணைய வேண்டும் என எதிர்பார்கிறிர்கள்.

தேசிய நீரோட்டம் என்பது, இந்திய பல மொழிகள் இருக்கின்றன அவை யாவும் சமமே என்று சொல்வதே.

Posted in |

2 comments:

  1. Mayooresan Says:

    நச்சென்று இருந்தது... ஹிந்திக்காரனுக்கு இதெல்லாம் எங்க உறைக்கப் போகுது.!!

  2. Anonymous Says:

    சரியா சொன்னீங்க !

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails