இலங்கை யில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் புலம் பெயர்ந்துவிட்டனர்(என்ன கொடுமை, தமிழ் இனத்தையே அழிப்பது, இந்தியா அதற்கு ஒத்துழைப்பது)

இலங்கை யில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் புலம் பெயர்ந்துவிட்டதாக, அந்த நாட்டைச் சேர்ந்த தமிழ்க் கவி ஞரும் கனடா நாட்டு "வின்ஸர்' பல்கலைக்கழகப் பேராசிரிய ருமான சேரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக தமிழ்த் துறை சார்பில் "எட்டுத் திக்கும் எம் தமிழர்' என்ற தலைப்பில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் சேரன் பேசியதாவது: யாழ்ப் பாணத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு நான் புலம்பெயர்ந் தேன். அப்போது இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கார ணமாக, அங்கு நிறைய துயர சம்பவங்கள் நடந்தேறின. புலம் பெயர்வு என்பது தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தமிழகத்தில் இருந்து தமிழர்களை பிஜி தீவு, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைகளுக்கு அடி மைகளாக ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.
பின்னர், நாடு சுதந்திர மடைந்த பிறகு சாதிய ஒடுக்கு முறைகளாலும், பின்னர் மத ஒடுக்குமுறைகளாலும் மக்கள் புலம்பெயர்ந்தனர். 1948-க்குப் பிறகு இலங்கையில் தமிழர் களின் உரிமைகள் பறிக்கப் பட்டன; அடக்குமுறை கையா ளப்பட்டது. மெல்ல மெல்ல தமிழர்களை இலங்கை அரசு கொடுமைப்படுத்தத் தொடங் கியது.
1983 இல் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப் படுகொலைக்கு பின்னர் தமி ழர்கள் லட்சக்கணக்கில் அங் கிருந்து புலம்பெயரத் தொடங் கினர். இவ்வாறு 9 லட்சம் தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இது இலங்கை யில் வசிக்கும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுக்கான புகலிடத்தைச் சேருவதற்கு 3 ஆண்டுகள்கூட ஆனது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்தனர். ஆனால், இங்குள்ள சில ஊட கங்கள், புலம்பெயர்ந்த தமிழர் கள் அனைவரும் மிகவும் நன் றாக இருப்பது போன்ற தோற் றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அகதிகளாகச் சென்ற தமிழர்கள் மிகுந்த நெருக்கடி யான நிலையிலேயே உள்ளனர் என்றார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails