சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அழைப்பதா?: இந்திய அரசுக்கு திராவிடர் கழகம் கண்டனம்(தி.க விற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்)

ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான "விடுதலை"யின் இன்றைய வெளியீட்டில் (05.03.08) எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

இலங்கை இராணுவத் தளபதியை இந்தியாவுக்கு அழைத்து, காஷ்மீர்ப் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான இராணுவ முகாமில் சில சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கை இராணுவத்துக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என்று பல நேரங்களில் இந்தியா அளித்து வந்த உறுதிமொழிக்கு எதிரான நடவடிக்கை இது என்பதில் ஜயமில்லை.

இலங்கை அரசுக்குச் செய்யப்படும் எந்தவித உதவியும் உறுதியாக அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிரானது என்பது பால பாடமாகும்.

எதிலும் விடுதலைப் புலிகளை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு ஒரு வழிப் பாதையாக இந்தியா செயல்படுவது கண்மூடித்தனமானதாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் அண்டை நாடுகளுடன் போர் நடத்தும் சூழல் இல்லை. இந்த நிலையில் இலங்கை ஒவ்வொரு ஆண்டும் தனது நிதி நிலை அறிக்கையில் போர்க் கருவிகளை வாங்குவதற்குத்தான் பெரும் பொருளைச் செலவழிக்கிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்துமே அங்கு வாழும் தமிழினத்தைப் பூண்டோடு ஒழிப்பதற்காகத்தான் என்பது இந்திய அரசுக்குத் தெரியாத ஒன்றா?

செஞ்சோலை என்ற இடத்தில் பச்சிளம் குழந்தைகளைக் கூட குண்டு போட்டு அழித்த இலங்கை இராணுவத்தின் - மனிதநேய மற்ற மூர்க்கத்தனத்திற்குப் பிறகும்கூட, அதற்கு ஊக்கம், ஊட்டம் அளிக்கும் வகையில் இந்திய அரசு நடந்துகொள்கிறதே - இதன் பொருள் என்ன?

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிந்து செல்வதாக அறிவித்ததை வரவேற்கும் இந்திய அரசு, ஈழத்தில் வாழும் உரிமைக்காகப் போராடும் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது - ஏன்?

தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளைப் பல நேரங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ள நிலையில், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற முறையில் இந்தியா நடந்துகொள்ளலாமா?

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதநேயர்களும், மனித உரிமைச் சிந்தனையாளர்களும் இந்தியாவின் இத்தகு போக்கு குறித்து எப்படி நினைப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நிலையை சிங்கள அரசு உருவாக்கி வைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளது என்கிற செய்தி வெளிவருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொல்வார்களே, அது இதுதான் போலும்!

இந்தியாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் போர் நடந்த காலகட்டங்களில் எல்லாம் இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மைகளை நன்கு அறிந்திருந்தும், கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்ததைப்போல இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் நேசக்கரம் நீட்டுகிறது - பயிற்சிகளை அளிக்கிறது - போர்க் கருவிகளை வாரி வழங்குகிறது.

தமிழர்களின் உணர்வை உரிய வகைகளில் எல்லாம் வெளிப்படுத்திய பிறகும், இந்தியாவின் நிலை இதுதானா? என்று அதில் எழுதப்பட்டுள்ளது

Posted in |

3 comments:

 1. Sen Says:

  Srilanka not only kill srilankan tamils using Indian weapons, they kill the indian fisherman also.
  Had this happened in US,if a US citizen is killed..they would have made a hue anc cry and would have used the "war-on-terror" rhetoric to wage a war on the other country..

  Seems the advisors to the PM of India are misleading the government in Eelam struggle,even if..shouldn't the MPs from TN oppose vehemently and stop the military aid to SL..?
  It is pathetic that our own people are killed
  by sinhalese government,using our own weapons..

 2. வெத்து வேட்டு Says:

  a tactical withdrawal????

 3. Thamizhan Says:

  இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இந்தியா வேறு நாடுகளின் படைகள்
  இலங்கையில் காலூன்ற அனுமதிக்கவில்லை.

  திரிகோனமலை துறைமுகத்தையோ,தங்கள் ஈழத்தையோ
  வெளி நாட்டிற்குத் தாரைவார்க்க நினைத்திருந்தால் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்

  ராஜிவ் காந்தியை ஏமாற்றி இந்திய
  ஈழச் சண்டையை உண்டாக்கி வேடிக்கை பார்த்து மகிழ்ந்தது சிங்களம்.
  இப்போது இந்திய கடற்படையை ஈழத்துடன் மோத விட்டு வேடிக்கைப் பார்க்க வழி வகுத்து விட்டது.இனி அடுத்த சூழ்ச்சியில் விழ இந்தியா
  சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது.

  சிங்கள இனவாதிகள் இந்தியாவின் எதிரிகள் என்பதை இந்தியா உணரவே உணராதா?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails