இலங்கைப் பிரச்னை-தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும்!-ராமதாஸ் அறிவுரை

உண்மைதான், தமிழக அரசு படுமந்தமாக உள்ளது, ஆட்சியை காப்பாற்றுவதில் இருக்கும் பொறுப்பு தமிழர்களை காப்பதில் இல்லை. கவிதை மட்டும் போதாது. வீரமும் தேவை. பயந்து பயந்து சாவதை விட வீரமாக பேசுவது, செயல்படுவது நன்று. நாட்டின் இறையாண்மைக்குள் கட்டுபட்டு என்று சொல்வது என்னவென்றே அர்த்தம் தெரியா மடையர்கள் சொல்வது நகைப்புக்குரியது. எந்த இறையாண்மையும் ஒரு மக்களை கொல்ல ஆயுதம் கொடுக்க சொல்வதில்லை. இது தினமலர், சோ, சாமி, ஜெ, நாராயணன் ஆகியோர் எல்லோரையும் மிரட்ட பயன்படுத்தும் வார்த்தைகள். இந்த நாகரீக கோமாளிகளின் கீழ் மட்ட சிந்தனையில் வருபவை. ஆம் நாம் என்றும் இந்தியர்கள் ஆனால் ஒரு இனம் அழிக்கபடுவதை கண்டு சும்மா இருக்க சொல்லும் மடையர்கள் அல்ல. கார்கில் அதிகம் உதவியது நாமே. கருணாநிதி விழித்து கொள்ள வேண்டும்.

இந்த சூட்சுமம் புரிந்து கொள்ள வேண்டும். வார்த்தை விளையாட்டுகளை முறியடிக்கும் அறிவு வேண்டும். அதை எதிர்க்க துணிவு வேண்டும்.

இலங்கைப் பிரச்னையை தீர்ப்பதற்கான நேரம் வந்து விட்டது. முதல்வர் கருணாநிதி இதை நழுவவிடக்கூடாது. அதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயார்’ என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்கள் நலன் காக்கக் கோரியும், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ராமதாஸ் பேசுகையில்,

”ஒட்டுமொத்தமாக 6.2 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளைத் தான் கோபத்தோடும், கொந்தளிப்போடும் நாங்கள் இங்கே வெளிப்படுத்துகிறோம். இது துவக்கம்தான்.

இந்த பிரச்னைக்காக தமிழகத்தில் குரல் கொடுப்பதற்கு சிலருக்கு தயக்கம்.

ஆனால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளராக இருக்கின்ற டி.ராஜா, இலங்கைப் பிரச்னை பற்றிநாடாளுமன்ற மேலவையிலே முழங்கியிருக்கிறார். அவருடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன்.

அடுத்து ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24வது தேசிய மாநாட்டிலே ‘சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை முன்மொழிந்த அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு எனது பாராட்டுக்கள்.

1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி டெல்லியில் தமிழக எம்.பிகள் குழுவினர் என்னுடைய தலைமையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் மனு கொடுத்தோம். அந்த மனுவில், இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் அந்நாடு தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை இந்திய அரசு மாற்ற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும் என, வலியுறுத்தினோம்.

அந்த மனுவில் முதல் கையெழுத்து இட்டவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நான் கேட்கிறேன் இன்றைக்கு என்ன மாற்றம் வந்தது?

இந்த நேரத்தில் தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும். உறக்கத்தை கலைக்க வேண்டும். ஏனென்றால், ஒரு தேசிய கட்சியே இந்தளவுக்கு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இது சரியான தருணம். நழுவ விடக்கூடாது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தேவையில்லை. நாங்கள் விலை கொடுக்க தயார்.

உங்கள் காலத்திலேயே இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். இது நல்ல தருணம். கருணாநிதி நழுவ விடக் கூடாது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஹைதராபாத்தில் நிறைவேற்றியுள்ள அந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றுவதற்கு, விடுதலை சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் முனைப்போடு செயல்படும்.

‘அந்த வேலை உங்களுக்கு தேவையில்லை. ஒட்டு மொத்த தமிழர்களுக்கு தலைமை தாங்குகின்ற, பிரதிநிதித்துவம் வகிக்கின்ற தமிழக அரசே அந்த தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி தேவைப்பட்டால் இங்கிருந்து அனைத்து கட்சிகள் சார்பாக பிரதிநிதிகளை டெல்லிக்கு அனுப்பி பிரதமரை சந்தித்து இதற்கான ஒரு தீர்வை விரைவிலே காண்போம்’ என்று தமிழக முதல்வர் கலைஞர் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்” என்றார் ராமதாஸ்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையி்ல்,

”தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழர் வாழும் பகுதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களாக பிரிக்க கூடாது. அதை பிரித்து தமிழ் ஈழத்தையே நிரந்தரமாக பிரிக்க நினைக்கிறார்கள். அதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழர் வாழும் பகுதியை வடக்கு கிழக்கு மாகாணமாக பிரிக்க கூடாது என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails