கலைந்து போன சிறிலங்காவின் வதந்திகள், ம்கிந்த, தினமலர், சோ, சாமி முகத்திலே கரி பூசப்பட்டது, தமிழனால் வயிறு கழுவும் இவர்கள் திருந்துவார்களா ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 3 மாதங்களாக சிறிலங்காவில் பெரும் புதிரை எற்படுத்தியிருந்தார். அதாவது அவர் இறந்துவிட்டதான அல்லது காயமடைந்து விட்டதான செய்திகளே சிறிலங்காவின் தென்பகுதியில் பிரதான செய்திகளாக வெளியிடப்பட்டு வந்தன. பொது மேடைகளிலும் அது பேசப்பட்டு வந்தன.


கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற வான் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக பல ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன. வன்னிக்குச் சென்ற மருத்துவ நிபுணர்கள் அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லுமாறு பணித்ததாகவும் அரச தொலைக்காட்சி நிறுவனம் தனது பிரதான செய்தியில் தெரிவித்திருந்தது.


மாவீரர் நாள் அன்று நடைபெற்ற வான்தாக்குதலில் அவர் காயமடைந்ததாக சிலர் தெரிவித்தனர். சிலர் அவருக்கு நீரிழிவு போன்ற சிக்கலான வருத்தங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தனர். அரசு இந்த தகவல்கள் தொடர்பாக ஆர்வமாக இயங்கியதுடன் படை உயர் அதிகாரிகளும் அதனை வலுவாக நம்பியிருந்தனர்.


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையாக காயமடைந்துள்ளதனை தான் வலுவாக நம்புவதாக வான்படைத் தளபதி றொசான் குணதிலக்க ஐரிஎன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். எனினும் எக்ஸ்ரே முகாம் மீதான வான் தாக்குதலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் அப்பகுதியில் இருந்து வெளியேறி விட்டதாக புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது.


ஆனால் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தனது இறுதி வணக்கத்தினை விடுதலைப் புலிகளின் தலைவர் தெரிவித்த படங்கள் கடந்த சனிக்கிழமை வெளிவந்துள்ளன. அவருடன் புலனாய்வுதுறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் வணக்கம் செலுத்தியிருந்தனர்.


இந்த படங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளிவந்த எல்லா வதந்திகளையும் பொய்யாக்கி விட்டன. அவர் தொடர்பாக வதந்திகள் வெளிவருவது இது முதற்தடவை அல்ல. ஆழிப்பேரலை சிறிலங்காவை தாக்கிய போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகள் பரவியிருந்தன.


அடம்பனை நோக்கி நகரும் சிறிலங்காவின் 58 ஆவது படையணி


சிறிலங்காப் படையினரின் 58 ஆவது படையணி அடம்பனை நோக்கி நகாந்து வருவதாகவும், 57 ஆவது டிவிசன் மடுவை நோக்கி மூன்று முனைகளால் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது மடுவில் இருந்து 1.8 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


மேலும் கடந்த வாரம் ஏ-9 வீதியில் உள்ள புளியங்குளம் பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காவின் தென்பகுதியில் தகவல்கள் பரவியிருந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது. மன்னார் பகுதியில் உள்ள புளியங்குளத்தையே படையினர் கைப்பற்றியிருந்தனர்.


ஆனால், வன்னியில் மிக நெருக்கமான சமர்கள் நடைபெறவில்லை எனவும், விடுதலைப் புலிகள் நேரடியற்ற சூடுகளையே பயன்படுத்தி வருகின்றனர். பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவையே படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன.


அடம்பன் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக லக்ஸ்மன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டுள்ளார். அடம்பனைத் தொடர்ந்து படையினரின் இலக்கு விடத்தல்தீவாகும். இது விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளை தடுக்கும் நடவடிக்கையாகும்.


இந்தப் பகுதியில் உள்ள ஆழமற்ற கடற்பிரதேசம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு சாதகமானது. அங்கு கடற்படையினரின் டோரா வகை தாக்குதல் படகுகள் நடவடிக்கையில் ஈடுபடுவது கடினமாகும். எனவே கடற்படையினர் நீருந்து விசைப் படகுகளையே அப்பகுதிகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அடம்பனை கைப்பற்றுவது படையினர் ஏ-9 வீதிக்கு பதிலாக ஏ-32 வீதியை கைப்பற்றும் உத்தியை கொண்டுள்ளதை காட்டுகின்றது.


இந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்களில் கடந்த வாரம் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் உண்மையான இழப்புக்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    சிங்கள ஹிட்லருடன் சேர்ந்துள்ள கோயபல்சுகள் எத்தனை முறை செருப்படி பட்டாலும் உண்மை பேச மாட்டார்கள்.
    பிரபாகரனை தங்கள் பிச்சைக் கருவிகளான பேப்பர்களாலேயேக் கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.
    இவர்களுக்குப் பிச்சை போடும் தமிழர்கள் தங்கள் செருப்புக்களைக் கழட்டிக் காண்பிக்க வேண்டும்.

    முரளிதரன் ரெட்டியின் பொய்கள்,சிங்களக் கைக்கூலிகளின் பொய்கள் அவர்களது மலச்சிக்கல் களுக்கு உதவுகின்றன.அவ்வளவுதான்.

    இந்தியா இன்னுமொரு பெருந்தவரை செய்யாமல் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails