சிங்களப் பெரும்பான்மையினரின் அபிலாசைகளை தமிழ்ச் சிறுபான்மையினரின் மீது பலவந்தமாக திணிக்க வேண்டும் என்பதுவுமே சிறிலங்காவின் பிரதான குறிக்கோள்களாகும்.

எவ்வளவு இனிமையான வார்த்தைகளை மகிந்தவும் அவரது அதிகாரிகளும் பேசினாலும், உண்மையில் தமிழ்ச் சிறுபான்மையினர் மீது தமது சர்வாதிகாரத்தை அரங்கேற்றுவதே பிரதான இலக்காக காணப்படுகின்றது.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவோ மரியாதை அளிப்பதாக தெரியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வரலாற்று வெற்றியாகவே இவற்றை நோக்குகின்றனர்.

மனித உரிமை அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முழுமையாக இந்த இரண்டு பேரும் நிராகரிக்கின்றனர்.

ராஜபக்ச அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களில் மனித உரிமைகள் குறித்து கடும்போக்குடன் நடந்து கொள்வது குறித்து பல மேற்குலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

Posted in |

1 comments:

  1. King... Says:

    அவர்களுக்கு வெற்றி இவர்களுக்கு தோல்வி யாருக்கு என்ன லாபம் இலங்கைக்கு எப்ப விமோசனம் (நான் கேட்டது இலங்கைக்கு) வாழ்க்கை எங்கே இருக்கிறது...

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails