நாடாளுமன்ற உறுப்பினர்களைக் படுகொலை செய்வதால் விடுதலைக்கான குரலை தடுத்து நிறுத்திட முடியாது: த.தே.கூ.(இந்திய அரசே உன் கண்களுக்கு இதெல்லாம் தெரியலையா)

தமிழின விரோதிகள் ஜெ, சோ, சாமி, தினமலர், மகிந்த பேசறதுதான் கேட்கிறதா.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக - விடுதலைக்காக குரல் கொடுப்பதை - போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவநேசன் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன், மாங்குளத்திற்கு அண்மையில் ஏ-9 வீதியில் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி எமக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த மன வேதனையும் தந்திருக்கிறது.

இப்படுகொலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏ-9 பாதை மூடப்படிருப்பதால் யாழ்ப்பாணம் கரவெட்டியிலிருந்து தனது மனைவி, பிள்ளைகளுடன் மல்லாவியில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்த போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் இருந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு- எதிர்த்து- வாக்களித்து விட்டு மல்லாவிக்குச் சென்று கொண்டிருந்த போது இக்கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்ற ஆண்டு நடுப்பகுதியிலும் அதே இடத்தில் கிளைமோர்த் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியிருந்தார்.

இச்சம்பவம் திட்டமிட்டுக் குறிவைத்து தாக்கியழிக்கும் திறன் வாய்ந்த சிறிலங்கா இராணுவப் பிரிவான ஆழ ஊடுருவும் குழுவினாராலேயே செய்யப்பட்டிருக்கிறது என நம்பவேண்டியுள்ளது.

இதையொத்த பல சம்பவங்கள் வன்னிப் பிரதேசத்தில் முன்னரும் இடம்பெற்றிருந்தமையைச் சுட்டிக்காட்டவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் நடராஜா ரவிராஜ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு, சிவமகாராசா, வேட்பாளர்களாகவிருந்த விக்கினேஸ்வரன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் வடக்கு-கிழக்குப் பகுதியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுவருவதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளோம்.

தமிழ் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல காணாமல் போவோர், மனித உரிமை ஆணையகத்தில் சரணடைவோர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற தடைகள் ஏற்படுத்தப்படுவதையும் நாடாளுமன்றத்திலும், சபாநாயகரிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்றதாகிவிட்டது.

தொடர்ந்து எமது உறுப்பினர்கள் கொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக விடுதலைக்காக குரல் கொடுப்பதை, போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவநேசனின் இழப்பு எவ்வகையிலும் ஈடு செய்ய முடியாததாகும். அன்னாரினால் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பற்ற தியாகம் ஒருபோதும் வீண் போகாது தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கே வித்தாகும் என்பதில் ஐயமில்லை.

மனைவி, மக்கள், அன்புடையோர், ஆதரவாளர்களின் துன்பத்திலும் துயரத்திலும் கலந்து எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி நிற்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails