ஒரு அனானியின் ஆதங்கம்: தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசர் இறந்தபோதே செத்து விட்டது.

காங்கிரஸ்காரர்கள் என்று பொதுவாகச் சொல்வது சரியாகாது. தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களைப் பற்றி உங்களுக்குப் புரியாமல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசர் இறந்தபோதே செத்து விட்டது. இப்பொழுது இருக்கும் முண்டங்களெல்லாம் (செத்துப் போன மூப்பனார் முதல் வெள்ளை வேட்டி மைனர் வேசம் போட்டுத் திரியும் சிதம்பரம் உட்பட) அனைத்தும் இரொட்டித் துண்டுக்கு அழையும் பிராணிகள். அவற்றுக்குத் தெரிந்ததே இரண்டுதான் - ஒன்று ரொட்டித் துண்டு, இரண்டு ஊளையிடுதல். ரொட்டித்துண்டு கிடைத்தால் மகிழ்ச்சியில் ஊளையிடத் தெரியும். கிடைக்காவிட்டால் பீதியில் ஊளையிடும்.

ஒரு தொகுதியில் கூட ஐம்பாதிரம் ஓட்டுப் பெறத் துப்பில்லாத இந்தப் பிராணிகள் வேறு எப்படிதான் பிழைக்க முடியும். ஜெயலலிதான் இப்பிராணிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார். கலைஞர்தான் கூட்டணி விசயத்தில் நட்டுக் கழந்தவராயிச்சே. இரண்டு சீட்டுக்கு கஞ்சத்தனம் பண்ணி வைக்கோ, திருமா, இராம்தாஸ் போன்றோரை ஏமாற்றியோ, அவமானப் படுத்தியோ வெளியில் அனுப்பி வைப்பார். ஆனால் இந்த உதவாக்கரை காங்கிரஸ் பிராணிகளை மதித்து அதிகம் சீட்டுக் கொடுத்து ஊளையிட வைப்பார்.

ஜெயித்து வந்த உடன் கிடைக்கும் ரொட்டித் துண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளே நடக்கும் சண்டையைப் பார்த்தால் நிஜ நாய்ச்சண்டை பிச்சை வாங்கனும். முதலி கிடைக்கிற ரொட்டித்துண்டுகளை வாங்கிக்கொள்ளும் சில பிராணிகள் அமைதியாக உட்கார்ந்து விடும் (உதாரணம் - குமரி அனந்தன்). கிடைக்காத பிராணிகள் அடுத்த கட்சியைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடும், தம் கூட்டணியைப் பார்த்து ஊளையிடும். இந்த ஊளையை திருமதி சோனியா அம்மையார் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்பதற்காக இராஜீவ் கொலையைப் பயன்படுத்த வேண்டும். இதில் இன்னொரு ஆதாயமும் உண்டு. சோ-ராம்-ரா-ராஜபக்சே-கும்பலிடமிருந்து கைச்செலவுக்குப் பணமும் கிடைக்கும். மற்றபடி இந்த நாய்கள் சொல்லும் இராஜீவ்-தேசபாதுகாப்பு-வன்முறை போன்றவை எல்லாம் வாய்ப்பேச்சுக்கே. இப்படியாவது தமக்கு வாழ்வதற்கு வழி கிடைத்ததே என்று விடுதலைப்புலிகளுக்கு மனதுக்குள் நன்றி சொல்லும் இந்தப் பிராணிகள்.

இதுகளுக்கு விண்ணப்பம் அனுப்புவது, கோரிக்கை விடுவது எல்லாம் வீண். அல்லது சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று இலவசமாக ஆளுக்கு ஒரு கம்பைக் கொடுத்து விட்டு கதவை மூடிவிட்டு வந்து விட்டால் போதும். இந்த அஹிம்சாமூர்த்திகள் தாங்களே ஒருவருக்கொருவர் மண்டையை உடைத்துச் செத்துத் தொலையும். இறுதியில், இப்பிராணிகளின் படங்களைத் தமிழ்நாட்டின் சுவரில் ஒட்டிச் சாணியடித்து தூ நாய்களே என்று துப்பிப் போவதே இதுகளுக்குச் செய்யும் மரியாதை!

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails