மிருகங்களுக்கு இருக்கிற உரிமை ஈழத் தமிழர்களுக்கு இல்லையே!

ஈழத் தமிழர் பிரச்சினையில் இராணுவத் தீர்வு மூலம் தீர்த்து விட முடியாது என்று இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணிகூட தெரிவித்துள்ளார். இது வரவேற்கக் கூடிய கருத்தாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் ஏற்கெனவே 2002-ல் கூட விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இலங்கை அரசு போர் நிறுத்தத்தை செய்தது. இப்பொழுது இலங்கை அரசு போர் நிறுத்தத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்ததால் பொது நிலையில் மத்தியஸ்தம் செய்ய வந்த நார்வே நாடுகள்கூட வெளியேறி உள்ளது.

தமிழ் இனத்தையே சிங்கள அரசு அழித்து விட முடிவு செய்து விட்டது. இதில் இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. `உபதேசம் செய்து கொண்டிருக்கக் கூடாது. இது ஏதோ விடுதலைப்புலிகளினுடைய பிரச்சினை அல்ல. ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைப் பிரச்சினையாகும்.

ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவு கிடையாது. அங்குள்ள குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள். `சிவிலியன் என்று சொல்லக் கூடிய அப்பாவி மக்கள் குழந்தைகள், தேவாலயங்கள், பள்ளிகளில் உயிருக்குப் பயந்து அங்கு போய் தங்கினாலும் சர்ச்சுகள் மீதும் மத அமைப்புகள் மீதும் சிங்கள அரசு குண்டு வீசி அப்பாவி மக்களை அழித்துக் கொல் கிறார்கள்.மக்கள் அகதிகளாக காட்டிற்குள் ஓடி ஒளிகிறார்கள். சிங்கள அரசு அங்கேயும் குண்டு மழை பொழிந்து அவர்களை அழிக்கிறது. அல்லது காடுகளில் ஈழத் தமிழர்களை பட்டினி யாலே சாகடிக்கிறது.

காட்டில் மிருகங்களுக்கு இருக்கிற உரிமைகூட ஈழத் தமிழர்களுக்கு இல்லாத நிலை இருக்கிறது. ஈழத் தமிழர்களுடைய நிலை. நாம் இரத்தக் கண்ணீர் வடிக்கக் கூடிய நிலையில் இருக்கிறது.தமிழர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய தீர்வு காண வேண்டும். மாநில அரசு முதல்வர் கலைஞர் அரசு இந்தப் பிரச்சினையில் தேவையான நடவடிக்கை எடுத்து வந்தாலும் முழுமையான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

Posted in |

2 comments:

  1. சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam Says:

    அரசியல் கட்சிகளையோ, "கலைஞரையோ" நம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை.

    முதலில் ஈழத்தமிழ் மக்களுக்காக இரங்குபவர்கள், அரசியல் தலைவர்களின் காலைப்பிடிப்பதை விட்டுவிட்டு, பெரியார் தி.க. வின் வழியில் மக்களைத் திரட்டி உணர்வூட்ட வேண்டும். மக்கள் சக்தியாலேயே அனைத்தையும் சாதிக்க முடியும். இன்றைக்குள்ள எல்லா ஓட்டுச்சீட்டு அரசியல் வாதியும் தமிழினத்துரோகிகளே, அதற்கு அவர்கள் இப்போது இப்பிரச்சினையை எப்படி அணுகுகிறார்கள் என்பதே சான்று.

  2. சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam Says:

    தொடர்ந்து எழுதுங்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails