ஜெயலலிதாவுக்கும், காங்கிரசாருக்கும் ஒரு கேள்வி

புலிகளைதான் எதிர்க்கிறோம், ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறோம், சொல்கிறிர்கள், ஆனால் ஈழ மக்களுக்கு என்ன செய்தீர்கள், ஒரு அறிக்கை விட்டதுண்டா, கூட்டம், மாநாடு நடத்தியதுண்டா, எதுவுமே செய்யாமல், தமிழ் ஈழமக்களை ஆதரிப்பது என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா.

தமிழ் ஈழ மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை முதலில் பண்ணுங்கள் அப்புறம் பேசுங்கள்.

ராஜூவ் கொலையை வைத்து மட்டும் ஒரு இனத்தின் எதிர்காலத்தை பார்க்க முடியாது. 1945 அமெரிக்கா, ஜப்பான் மேல் குண்டு போட்டது அப்படின்னு யாரும் அந்த நாட்டையோ, மக்க்ளையே இப்ப ஒதுக்கி வைக்கிறது இல்ல.

கொஞ்சம் சிந்தியுங்கள், நம் சகோதரரர்கள் அவர்கள். நாம்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். நல்லது பண்ணாட்ட்டியும் பராவாயில்லை ஒதுங்கி செல்லுங்கள். பண்றவனையும் தேச துரோகி, நாட்டின் இறையாண்மையை அழிப்பவன் என்று ஏமாற்றாதீர்கள்.

பாழாப்போன இந்த அரசியல் சுயலாபத்துக்காக இப்படி பண்ணாதிர்கள். உங்கள் மனசாட்சியே ஒரு நாள் உங்களை கேள்வி கேட்கும். நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு தடையும் ஆயிரம் தமிழ் மக்களை கொல்வதற்கு சிங்களவனுக்கு கொட்டும் முரசாகும். நாமும் மறைமுக கொலையாளியாகவே மாறுகின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியை பாதுகாக்க நினைக்கும் நீங்கள், அதை பேசற தமிழனை காப்பாற்ற முன்வரவேண்டும். இல்லாவிடில் மொழி இருக்கும் அதை பேசுவதற்கு தமிழன் இருக்க மாட்டான்.

இதையே அரசியல் கட்சி பேசினால் அதற்கு அரசியல் சாயம் பூசுவீர்கள், நான் ஒரு தமிழ் உணர்வுள்ள ஒருவன் எந்த கட்சியும் சாராதவன், ஒவ்வொரு நாளும் தமிழீழத்துக்கு விடிவு வராதா என ஏங்கும் ஒரு உண்மை தமிழன். அப்பாவி ஆறு கோடி தமிழன்களில் நானும் ஒருவன். நீங்கள் பேசுவதை எல்லாம், வெட்ட கொண்டு செல்கின்ற ஆடினை போல கேட்டு கொண்டிருப்பவன். ஒரு கோழை. இதை நினைத்து வெட்கி தலைகுனிகிறேன். இயலாமையை நினைத்து வருந்துகிறேன். குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என் இனம் அழிவதை கண்டு. இதுதான் இன்று உண்மை தமிழனின் நிலை. வேலியே பயிரை மேய்வது போல அல்லவா நம்முடைய செய்கைகள் உள்ளன். பாதுகாவலராக இருக்க வேண்டிய நாம் துரோகிகளாக இருப்பது என்ன விதத்தில் நியாயம்


எங்களுக்கு உங்களின் பதில் என்ன?

Posted in |

15 comments:

 1. Anonymous Says:

  தமிழ் பால் குடித்தவர்களுக்கே அந்த வலி தெரியும்

 2. ஜோதிபாரதி Says:

  உங்கள் வேதனையில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.

  இது பற்றிய எனது பதிவுகள் உங்கள் பார்வைக்கு.
  http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_7174.html

  http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html

  http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html


  அன்புடன்,
  ஜோதிபாரதி.

 3. Thamizhan Says:

  மடிந்து கொண்டிருந்த காங்கிரசிற்கு மறு வாழ்வு கொடுத்தது தமிழகம்.
  நன்றி மறப்பது நன்றன்று.

  தமிழினப் படுகொலையையும்,சிங்கள இனவாத அரசையும் மக்களிடம் ஒன்று சொல்லி விட்டுத் திருட்டுத் தனமாகப்
  படைக்கலன் கொடுத்து ஆதரிப்பதும்,

  சேது சமுத்திரத் திட்டத்தைக் கிடப்பில் போட முயல்வதும்

  தமிழ்நாட்டில் காங்கிரசு தற்கொலை
  செய்து கொள்வதற்குச் சமம்.தமிழர்கள்
  பத்து லட்சத்தின் இந்தி திணிப்பிற்குக்
  கொடுத்த மரண அடி மறு படியும்
  கொடுப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

  பார்ப்பன நடிகையின் கால் செருப்புக்களாக இருக்கும் தமிழர்கள்
  பித்தம் தெளிவார்களாக!

 4. மைக் Says:

  ஜோதிபாரதி, தமிழன் வருகைக்கு நன்றி

  மனதை தொட்ட கவிதைகள் கருத்துக்கள்.

  மறுபதிவிட ஆர்வமாக உள்ளேன் உங்கள் சம்மதத்துடன்.

  நன்றியுடன்
  மைக்

 5. ஜோதிபாரதி Says:

  உங்கள் வலைப் பக்கத்திலா? பதிவிட்டுக் கொள்ளுங்கள்.

  அன்புடன்,
  ஜோதிபாரதி.

 6. ஞாயிறு Says:

  உண்மையான எழுத்துக்கள். உணர முடிகிறது.

  சராசரி தமிழன் உணர்வோடுதான் இருக்கிறான். எழுப்பி விடுவதற்குத்தான் பெரியாரைப்போல இன்று ஒரு அரசியல் அமைப்பு இல்லை; ஒரு தலைவனும் இல்லை.

  சோ, ஜெ வகையறாக்கள் ஒப்பாரி வைத்தே காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். இன்று இரங்கல் கவிதை செய்வதுதான் தமிழ்த் தலைவர்களின் அதிகபட்ச ஈழ ஆதரவு நிலையாக இருக்கிறது. இது ஒரு கேடு கெட்ட நிலை.

  பெரியார் தி.க. அமைப்பு மட்டும் தான் சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  அவர்கள் பெரிய அளவில் மக்களைச் சென்று சேர்ந்தால் தமிழனுக்கு விடிவு காலம் பிறக்கலாம்.

 7. ஞாயிறு Says:

  >> ஜெயலலிதாவுக்கும், காங்கிரசாருக்கும் ஒரு கேள்வி

  ஏன் அதுகளைப் போய் கேள்வி கேட்கிறீர்கள். இவர்களையெல்லாம் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்களைக் கேளுங்கள்.

  இப்படிப் பேசியும் இதுகள் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடிகிறது. மானக்கேடு.

 8. Anonymous Says:

  சரியான கேள்வி இந்த துரோகிகளுக்கு

 9. அருண்மொழி Says:

  ஈழத் தமிழர்களை பற்றி கவலைபட வேண்டாம். முதலில் அவார்களை இந்திய தமிழர்களை பற்றி சிந்திக்க சொல்லுங்கள். நாள் தோறும் சிங்கள அரச படையினரால் அப்பாவி மீனவர்கள் பாதிக்க படுகின்றனரே?? சிந்துவது தமிழர் குருதியானதே. இதே ஒரு வங்காளியின் ரத்தமோ, சீக்கியரின் ரத்தமோ சிந்தினால் என்ன நடந்து இருக்கும்.

  மீனவர்கள் கடல் எல்லையை தாண்டி செல்கின்றனர் என்று சில எட்டப்பர்கள் கூவினாலும் ஆச்சர்யபட வேண்டாம்.

 10. Anonymous Says:

  இதுவே ஒரு தமிழனல்லாத சாதிக்கு நிகழ்ந்திருந்தால் இந்தியா இவ்வாறுதான் மெளனம் சாதித்து நிற்குமா?

 11. Anonymous Says:

  காங்கிரஸ்காரர்கள் என்று பொதுவாகச் சொல்வது சரியாகாது. தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களைப் பற்றி உங்களுக்குப் புரியாமல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசர் இறந்தபோதே செத்து விட்டது. இப்பொழுது இருக்கும் முண்டங்களெல்லாம் (செத்துப் போன மூப்பனார் முதல் வெள்ளை வேட்டி மைனர் வேசம் போட்டுத் திரியும் சிதம்பரம் உட்பட) அனைத்தும் இரொட்டித் துண்டுக்கு அழையும் பிராணிகள். அவற்றுக்குத் தெரிந்ததே இரண்டுதான் - ஒன்று ரொட்டித் துண்டு, இரண்டு ஊளையிடுதல். ரொட்டித்துண்டு கிடைத்தால் மகிழ்ச்சியில் ஊளையிடத் தெரியும். கிடைக்காவிட்டால் பீதியில் ஊளையிடும்.

  ஒரு தொகுதியில் கூட ஐம்பாதிரம் ஓட்டுப் பெறத் துப்பில்லாத இந்தப் பிராணிகள் வேறு எப்படிதான் பிழைக்க முடியும். ஜெயலலிதான் இப்பிராணிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார். கலைஞர்தான் கூட்டணி விசயத்தில் நட்டுக் கழந்தவராயிச்சே. இரண்டு சீட்டுக்கு கஞ்சத்தனம் பண்ணி வைக்கோ, திருமா, இராம்தாஸ் போன்றோரை ஏமாற்றியோ, அவமானப் படுத்தியோ வெளியில் அனுப்பி வைப்பார். ஆனால் இந்த உதவாக்கரை காங்கிரஸ் பிராணிகளை மதித்து அதிகம் சீட்டுக் கொடுத்து ஊளையிட வைப்பார்.

  ஜெயித்து வந்த உடன் கிடைக்கும் ரொட்டித் துண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளே நடக்கும் சண்டையைப் பார்த்தால் நிஜ நாய்ச்சண்டை பிச்சை வாங்கனும். முதலி கிடைக்கிற ரொட்டித்துண்டுகளை வாங்கிக்கொள்ளும் சில பிராணிகள் அமைதியாக உட்கார்ந்து விடும் (உதாரணம் - குமரி அனந்தன்). கிடைக்காத பிராணிகள் அடுத்த கட்சியைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடும், தம் கூட்டணியைப் பார்த்து ஊளையிடும். இந்த ஊளையை திருமதி சோனியா அம்மையார் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்பதற்காக இராஜீவ் கொலையைப் பயன்படுத்த வேண்டும். இதில் இன்னொரு ஆதாயமும் உண்டு. சோ-ராம்-ரா-ராஜபக்சே-கும்பலிடமிருந்து கைச்செலவுக்குப் பணமும் கிடைக்கும். மற்றபடி இந்த நாய்கள் சொல்லும் இராஜீவ்-தேசபாதுகாப்பு-வன்முறை போன்றவை எல்லாம் வாய்ப்பேச்சுக்கே. இப்படியாவது தமக்கு வாழ்வதற்கு வழி கிடைத்ததே என்று விடுதலைப்புலிகளுக்கு மனதுக்குள் நன்றி சொல்லும் இந்தப் பிராணிகள்.

  இதுகளுக்கு விண்ணப்பம் அனுப்புவது, கோரிக்கை விடுவது எல்லாம் வீண். அல்லது சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று இலவசமாக ஆளுக்கு ஒரு கம்பைக் கொடுத்து விட்டு கதவை மூடிவிட்டு வந்து விட்டால் போதும். இந்த அஹிம்சாமூர்த்திகள் தாங்களே ஒருவருக்கொருவர் மண்டையை உடைத்துச் செத்துத் தொலையும். இறுதியில், இப்பிராணிகளின் படங்களைத் தமிழ்நாட்டின் சுவரில் ஒட்டிச் சாணியடித்து தூ நாய்களே என்று துப்பிப் போவதே இதுகளுக்குச் செய்யும் மரியாதை!

 12. Anonymous Says:

  காங்கிரசா அது யாரு, சும்மா ஒரு தலைவன், அவன் பேசறதையும் நீங்க ஒன்னு ...

 13. Anonymous Says:

  அரசியல் சுயலாபமே இவர்களின் முதல் கொள்கை

 14. Anonymous Says:

  தமிழீழம் உருவானால் தமிழ்நாடு பிரியுமென்கிற சோடித்த கதைகளெல்லாம் வெறும் சுயநலன் அடிப்படையில் எழும் பரப்புரைகள் என்று கருத வேண்டும். தமிழினம் அழிந்தாலும் தனது நலன் காக்கப்பட வேண்டுமெனக் கற்பிதம் கொள்ளும் இந்தியாவின் போக்கினை, எவராலும் மாற்ற முடியாது. ஆயினும் அதை மாற்றும் சக்தி, விடுதலையை வென்றெடுக்க, அணி திரளும் மக்களிடம் உள்ளதென்பதை சர்வதேசம் விரைவில் உணரும்.

 15. Anonymous Says:

  (இந்திரா) காந்தியைக்கொன்றவர்கள் காந்தி தேசத்தின் காவலர்களாக இருக்கலாம். இது தான் பார்ப்பனப் பனியாக்களின் அகன்ற பாரதத்தின் சட்டம். அதையே ஒரு தமிழன் செய்தால் அதே அடிமைத் தமிழனை ஏவி விட்டு இரத்தக் களரியை உருவாக்குவார்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails