சமீபத்தில் படித்த சிந்திக்க வைக்கும் கட்டுரை

வாஞ்சிநாதன் புரட்சிவீரன் - பிரபாகரன் மட்டும் தீவிரவாதியா? என்ன ஒரு கொடுமை சாமி.


1973 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் மாநாடு நடைபெற்றது.

ஜனவரி 10 ம் தேதி அன்று மாநாட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி பரிசு வழங்குவதற்காக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். நேரமாக நேரமாக நிகழ்ச்சி நடைபெற்ற வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் அலைமோதியதால், பார்வையாளர்கள் அனைவருக்கும் இடவசதி கிடைக்கும் பொருட்டு வீரசிங்கம் அரங்கத்திற்கு வெளியே இருந்த அந்த வளாகத்திற்கு சொந்தமான திடலில் நிகழ்ச்சியைத் தொடர அமைப்பாளர்கள் முடிவு செய்தனர்.

பத்தாயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் விழா நடந்த திடலையும் தாண்டி சாலைகளில் வழிய தமிழகத்தை சேர்ந்த புலவர் நைனா முகமது உரையாற்றத் துவங்கியிருந்தார். மகுடிக்கு மயங்கிய அரவமாக மக்கள் வெள்ளமும் அமைதியாக அன்னாரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தது.

அந்நேரம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்திரசேகரா என்கிற சிங்கள அதிகாரி தலைமையில் 40க்கும் மேற்பட்ட கலவர தடுப்பு வீரர்கள் தனி வாகனத்தில் வீரசிங்கம் அரங்கத்தை அடைந்தனர். முன்னறிவிப்பில்லாத இந்த வருகையால் அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த குழப்பத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு ஆகிய களேபரங்களால் மைதானத்தின் மேல் தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர், ஐம்பதிற்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான காவல் அதிகாரிகளுக்கு தண்டனைக்கு பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்ட இந்த அடக்குமுறைக்கு பதிலடியாக யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா, 1975 ம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற தமிழரால் கொல்லப்பட்டார்.

(சிங்கள அடக்குமுறைக்கு எதிராக அதுவரை நடந்த காந்திய வழி போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறியது இங்குதான்)

இதைபோலவே இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நடந்த ஒரு சம்பவம்:


வ.ஊ.சி யின் சுதேசி கப்பல் கழகத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பதிலடியாக 1911 ம் ஆண்டு ஜூன் 17 ம் தேதி திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை வாஞ்சிநாத அய்யரால் கொல்லப்பட்டார். இது சிப்பாய் கலகத்திற்கு பிறகு தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த ஒரே வன்முறை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய வாஞ்சிநாத அய்யர் புரட்சி வீரன் , சிங்கள அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் தீவிரவாதியா?
வரலாறுத் தெரியாத அரைவேக்காடுகள் சிலர் , விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எழுத வந்துவிட்டார்கள்.

நன்றி: உறையூர்காரன்

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    even the indian who wrote about Vanji Natha Aiyar said Vanji natha ayiar was a coward.... :)
    what about Peeppa Praba?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails