கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி
Posted On Friday, 8 June 2007 at at 14:41 by Mikeசிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழம் உருவாவகுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியதாவது:
கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த வெளியேற்றல் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் அங்கே நீங்கள் போய் குடியேற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு விடுதிகளிலிருந்து இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
தமிழர்களை வெளியேற்றுவதற்கு மகிந்தவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழீழம் உருவாவதற்கான ஒரு பாதையை அவர் திறந்துள்ளார். வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம். அங்கு உங்கள் குடியிருப்பு உள்ளது என்ற தகவலையும் இந்த வெளியேற்று நடவடிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் இந்த நடவடிக்கை யினால் தமிழீழம் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் மீது இத்தகைய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1956 ஆம் ஆண்டிலும் 1970களிலும் 80 களிலும் தமிழர்கள் கொழும்பில் இருந்து கப்பல் மூலமும் ரயில் மூலமும் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவ்வாறானதொரு செயற் பாடு இன்று நடைபெற்றுள்ளது என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்
நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன்
தன் வாலைத் தானே தின்னும் பாம்பின் நிலை போல இருக்கிறது மகிந்தாவின் முடிவு. ஆனால் ஒன்று...இதனால் முதலில் துன்பமும் பிறகு நலனும் பெறப் போவது தமிழர்களே. ஈழத்திற்கான கதவை மகிந்தாவின் திறவுகோல் திறக்கிறது.
தமிழ் அமைப்புக்கள் கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதை அவசரப்பட்டு நிறுத்தியது மிகப் பெரிய முட்டாள்தனம். தொடர்ந்து வெளியேற்றி இருந்தால் இலங்கை அரசு உலக நாடுகளின் கடும்கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும்.
அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் கண்டித்திருக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. முக்கியமாக இந்தியா, ஐரோப்பிய ஒண்றியம் வாய் திறக்க முன்னர் தமிழர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். சிங்கள நீதீ மன்றம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை ஒரு நேர்மையானவர்களாக காட்டிக் கொண்டதுடன், இலங்கை அரசையும் சர்வதேச கண்டனத்தில் இருந்து காப்பாற்றிக்கொண்டது.
இலங்கை நீதிமன்றம் என்பது இனப்பாரபட்சமற்ற நீதி தேவதையின் ஆலயம்
என்ற ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க வழக்குத் தொடுத்த தமிழர்களே காரணமாகிவிட்டார்கள்.

test