என்னே! "இந்து" நாளிதழின் எல்லையில்லா சிங்கள விசுவாசம்!!
Posted On Saturday, 9 June 2007 at at 11:01 by Mikeதமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான "இந்து"வின் சிங்கள விசுவாசம் எல்லையற்றதாக விரிந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியக் குடிமகனால்தான் "இந்து" நடத்தப்பட்டாலும் அறிவிக்கப்படாத "தமிழ்நாட்டின் சிறிலங்கா தூதரகமாகத்தான்" அது செயற்பட்டு வருகிறது.
தமிழருக்கு எதிராக சிங்களவர்களைப் பாதுகாக்க தனது "ஊடக தர்மத்தை" முழுவீச்சில் பயன்படுத்தும் "இந்து" ஏடுதான் யோக்கிய சிகாமணியான "நடுநிலை"யாளர் என்று மார்தட்டிக் கொள்கிறது.
கொழும்பில் அரை மணித்தியால அவகாசம் கூட அளிக்காமல் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றி பேரூந்துகளில் அனுப்பியது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை பின்பற்றி மகிந்த மேற்கொண்ட இந்த கொடுஞ்செயலை அனைத்துலகமும் கண்டனம் தெரிவித்தன.
சிறிலங்காவுக்கு ஆயுதங்களையும் தரும் அமெரிக்கா கூட-
சிறிலங்கா அரசாங்கம்தான் குற்றவாளியாக பல்வேறு நிகழ்வுகளில் இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்தே குற்றம்சாட்டி சிறிலங்காவை பாதுகாத்து வரும் அந்த அமெரிக்காவும் கூட கொழும்பு கொடுஞ்செயலுக்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
"நடுநிலை" அனுசரணையாளர் நோர்வேக்காரர்களும் இப்போதுதான் "கண்டனம்" என்ற சொல்லை உதிர்த்திருக்கிறார்கள். ஆனால் "இந்து" நாளேட்டின் "நடுநிலை" கண்களுக்கு "கண்டனம்" என்ற சொல் தெரியவில்லை போலும்.
கொழும்பு சம்பவம் என்பது மகிந்தவுக்குத் தெரியாமல் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தன்னிச்சையாக செய்துவிட்டார் என்பதுபோல் செய்தி வெளியிட்டுள்ள இந்து- (நாள்: 09.06.07)
அதன் உள்ளே
"Norway reaction" என்ற தலைப்பில் நோர்வேயின் அறிக்கை பற்றி எழுதுகிறது.
ஆனால் நோர்வே வெளியிட்ட அறிக்கையின் முதல் வரியாக உள்ள
"Norway condemns yesterday’s sudden and enforced removal of civilian Tamils from their dwellings in Colombo" என்பதை மட்டும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு சிங்களவர்களைப் பாதுகாக்கிறதாம் "இந்து".
அதேபோல்
அமெரிக்காவின் அறிக்கையிலும் சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஆதரவாகத்தான் இருப்பது போல தோற்றமளிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் முதல் வரியே
"The United States condemns the forced removal of Tamils from Colombo" என்பதுதான்.
ஆனால் "சிங்கள ரத்னா" விருது பெற்ற சிங்கள விசுவாச "இந்து"வுக்கு இதனை பிரசுரிக்க மனம் வருமா என்ன?
இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கொழும்பில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரித்தானியா போல் சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதி உதவியை நிறுத்தாது என்று பதிலளித்துள்ளார்.
ஆனால் சிங்கள அடிவருடி "இந்து"வோ பிரித்தானியா போன்ற நாடுகள் நிதி உதவியை நிறுத்துவதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது என்பது போல் தலைப்பிட்டு சிங்களவர்களுக்கு ஆதரவைத் தேடித் தருகிறதாம்!
"சிங்கள இரத்னா" இந்துவே- தொடரட்டும் உன் விசுவாசம்!
நன்றி ப.தயாளினி