'தமிழகத்தில் கடையடைப்பு... கொழும்பில் கும்மாளம்...'--சிங்கள நடிகையுடன் பரத்

தமிழனால் வளர்க்கப்படும் மற்றுமொரு தமிழின துரோகி

இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கக் கோரி, கடந்த 4-ம் தேதி தமிழகம் முழுக்க ஹர்த்தால் நடைபெற்றது. இலங்கையிலோ அன்றைக்கு 'குடியரசு தினம்' கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அதே நாளில் கொழும்பு நகரிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா- இலங்கைக்கான கிரிக்கெட் போட்டியும் விறுவிறுப் பாக நடந்தது. இங்கே தமிழர்களின் ரத்தம் கொதித் துக்கொண்டிருக்க... அங்கே ஆனந்தமாக கிரிக்கெட் மேட்ச்சை ரசித்து மகிழ்ந்தார்கள் சிங்களர்கள்.

அவர்கள் ரசித்ததைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், ஒரு பிரபல தமிழ் நடிகர் அன்று இலங்கை சென்று கிரிக்கெட் போட்டியை ரசித்தார் என்றால்... அந்த அநியாயத்தை என்னெவென்று சொல்வது?


அவர் வேறு யாருமல்ல... நடிகர் பரத்! அவர் கிரிக்கெட்டை ரசித்துப் பார்த்த காட்சியை டி.வி-யில் பார்த்த தமிழர்கள் பலர் கொதித்துப் போனார்கள்!

இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் நம்மிடம்

கொந்தளிப்போடு, ''பொதுமக்க ளின் காசில் தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் சில தமிழக ஹீரோக்கள், தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. முன்பெல்லாம் வெளி நாட்டில் தமிழ் சினிமாவுக்கு அதிகமாக பிசினஸ் கிடையாது. ஈழத் தமிழர்கள் பெருமளவில் உலக நாடுகள் பலவற்றிலும் குடியேற ஆரம்பித்த பிறகுதான் எஃப்.எம்.எஸ். என்கிற ஃபாரின், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் தமிழ் சினிமாவின் பிசினஸ் கொடி உயரப் பறக்க ஆரம்பித்தது. லட்சங்களில் சம்பளம் வாங்கிவந்த தமிழ் ஹீரோக்கள் எல்லாம், கோடிகளில் சம்பளத்தைப் பார்த்ததே ஈழத் தமிழர்கள் போட்ட பிச்சைதான். அப்படிப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்த ஹீரோக்கள் என்ன செய்து கிழித்தார்கள்? சினிமாவில் சம்பாதிக்கிற பணம் போதாதென்று அவ்வப்போது அமெரிக்கா, கனடா, லண்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் நட்சத்திர இரவுகள் நடத்தி, அங்கிருக்கும் ஈழத்தமிழர்களின் காசையும்

சுரண்டி... கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை!

தமிழகமே ஈழத்தமிழருக்காக ரத்தக்கண்ணீர் சிந்தியபடி போன 4-ம் தேதி முழு கடையடைப்பு நடத்தியது. ஆனால், நடிகர் பரத் கொழும்பில் ஸ்டார் ஹோட்டலில் நடந்த விழாவில் சிங்களத்தானுடன் நடனம் ஆடியிருக்கிறார். இது தமிழனுக்குச் செய்யும் பச்சை துரோகமில்லையா? ஐயா, சினிமாக்காரங்களே... பரத், இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்கவே கூடாது என்று 'ரெட் கார்டு' போடுங்கள்.! ஈழத்தமிழர்கள் தங்கள் நாடு, நகரம், வீடு, உறவுளை இழந்து முல்லைத்தீவில் குண்டுகளுக்கு இரையாகி அழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கொழும்பில் சிங்கள வெறியர்கள் இந்தியர்களோடு விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசித்துப் பார்க்கும் நடிகர் பரத், எங்களைப் பொறுத்த வரையில் ஒரு தமிழின துரோகி!

கொழும்பில் சிங்களர்கள் குடியரசு தினத்தன்று நடத்தும் விழாவுக்கு சினிமா பிரபலம் தேவைப்பட்டிருக்கிறது. 'எந்த நடிகரை அழைப்பது?' என்று சிங்கள நடிகையான பூஜாவிடம் கேட்டிருக்கிறார்கள். 'நடிகர் பரத்தை அழைக்கலாம்' என்றதுடன் அவரிடம் தொலைபேசியில் பேசிய பூஜா, 'பரத், உங்களை எப்படியும் அழைச்சிட்டு வர்றதா பிராமிஸ் பண்ணிட்டேன். நீங்க அவசியம் கொழும்பு வரணும்...'னு சொன்னாராம். ஓகே சொல்லிவிட்டு ஓடியிருக்கிறார் பரத்.

சிங்கள நடிகையான பூஜா, வீட்டில் தனிமையில் தங்கி இருவரும் டிஸ்கஷன்(!) நடத்தியுள்ளனர். அதன் பின்னர் கொழும்பில் நடந்த ஃபங்ஷனிலும் கலந்து கொண்டிருக்கிறார் பரத். இனிமேல் உலக நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இன உணர்வு இருக்குமானால், பரத் நடித்த படங்களைப் பார்க்கக்கூடாது, வெளியிடவும் அனுமதிக்கக் கூடவே கூடாது... நடிகை நயன்தாராவுக்கு சம்பளப் பிரச்னையில் இங்கே ரெட் கார்டு போடுகிறார்கள்.

ஆனால், கேரளாவைச் சேர்ந்த அவரோ ஈழத்து தமிழ் மக்களுக்கு பாதிப்பு என்றவுடன், நிவாரணமாக ஐந்து லட்ச ரூபாயை அள்ளி கொடுத்திருக்கிறார். இங்கே தங்களை அடுத்த முதல்வர் என்று பீற்றிக் கொள்ளும் ஹீரோக்கள் யாரும் இத்தனை பெரிய பணத்தைத் தூக்கிக் கொடுக்கவில்லை.

இதுதான் இங்குள்ள சில நடிகர்களுக்கு இருக்கும் தமிழ்ப் பற்று. அதனால்தான் சொல்கிறோம், இப்படிப்பட்ட இன துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இனி நடிகர் பரத் போன்ற இன துரோகிகள் எங்கு சென்றாலும், அவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை வெளிப் படுத்துவோம்...'' என பொங்கி முடித்தார்.

கண்ணனின் புகார்குறித்து நடிகர் பரத்திடம் பேசினோம். அவர், ''கடந்த 4-ம் தேதி, 'இலங்கையில ஒரு ஃபங்ஷன் நடக்குது. அதுக்கு நீங்க அவசியம் வரணும்'னு கிங் ஃபிஷர்கம்பெனி சார்பா ரொம்ப நாள் முன்னாடியே 'புக்' பண்ணிட்டாங்க. அப்பவே நான் ஒப்புக்கிட்டதால, கொழும்புல நடந்த ஃபங்ஷன்ல கலந்துகிட்டு உடனடியா விமானத்தைப் பிடிக்க இருந்தேன்.

அதுக்குள்ள விழாவுக்கு வந்த வி.ஐ.பி-ங்க சிலபேர் கிரிக்கெட் போட்டி நடக்குற ஸ்டேடியத்துக்கு அவசியம் வரணும்னு வற்புறுத்தினாங்க. மறுக்க முடியலை. அதனால ஸ்டேடியம் போய்ப் பத்து நிமிஷம்தான் மேட்ச் பார்த்தேன்.

அதை யாரோ படம் பிடிச்சு டி.வி-யில காட்டிட்டாங்க. மத்தபடி, எனக்கு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாச் செயல் படணுங்கற உள்நோக்கம் எதுவுமில்லை. எனக்கும் ஈழத்தமிழர்கள் கஷ்டம் நீங்கி நல்லா வாழணும்ங்கிற எண்ணம்தான் இருக்கு. அதனால்தான், இலங்கைத் தமிழர்களைக் காப்பாத்தச் சொல்லி நடிகர் சங்கம் நடத்துன உண்ணாவிரதத்துலகூட கலந்துகிட்டு, என்னோட உணர்வுகளைக்கூட நான் பிரதிபலிச்சேன்... இனிமேல இந்த மாதிரி விஷயங்கள்ல கவனமா இருப்பேன்...'' என்றார்.


நன்றி http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2340:2009-02-14-04-44-39&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

Posted in |

4 comments:

 1. superlinks Says:

  ஈழ்த்தமிழ் மக்களை பற்றி பேச இந்து மக்கள் கட்சிக்காரனுக்கு என்ன யோக்கியதை இருகிறது? காங்கிரஸ் வெறி நாய்களுடன் எலும்புகளை பங்கிட்டுகொள்ளும் சொறி நாய் தான் இந்த இந்து மக்கள் கட்சியும்.
  அது மட்டுமில்லாமல் இந்த கும்பல் அடிப்படையிலேயே தமிழ் இனவிரோத பார்ப்பன அடிவருடி கும்பல்,எனவே இந்து என்று சொல்லிக்கொண்டு வருகிற எவனுக்கும் ஈழ்த்தமிழனைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
  வை.கோ, திருமா,ராமதாஸ் போன்ற‌வர்கள் ஈழம் தொடர்பான போராட்டங்களில் தமிழின விரோத‌ பார்ப்பன பயங்கரவாத கட்சியான பா.ஜ.க வையும் கூட்டமைப்பில்‌ வைத்துக்கொண்டு மக்களை ஏய்க்கிறார்கள். இதன் மூலம் பா.ஜ.க என்கிற பார்ப்பன கும்பலின் கட்சியும் ஈழப்பிரச்சனைக்காக போராடுவதை போன்ற ஒரு பொய் தோற்றத்தை இவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள்.எனவே எமது ஈழச்சொந்தங்களே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் வாயிலிருந்து ஈழம் என்கிற வார்த்தை வருமானால் அது ஈழத்தை விழுங்கி ஜீரனிப்பதற்கே அன்றி காப்பதற்காக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள், அந்த கொலைகார‌ கும்பலை நம்பாதீர்கள்.
  விரைவில் இது தொடர்பாக ஒரு பதிவிடவுள்ளேன்.

 2. Mike Says:

  வருகைக்கு நன்றி நண்பரே, கருணாநிதியை தூக்கி பிடித்தவர்கள் நாம், இன்று அவரை தாக்கவில்லையா. அப்படி நடக்கும் போது பண்ணிகிடலாம். இப்போதே அவர்கள் அப்படி செய்வார்கள் என்ற ஊகத்தில் நாம் செயல்படகுடாது.

  இப்ப உதவி பண்ரவங்களையும் தடுக்காதீர்கள்.

 3. Anonymous Says:

  மலையாளிகள் என்றுமே தமிழனுக்கு எதிரிதான்!காரணம் குமரி பீர் மேடு! என நீளுகிறது! புலிகளுக்கும் இந்திய கற்பழிப்பு படைக்கும் சண்டை மூட்டிவிட்ட நாராயணனை புகழ்ந்த்தும் தமிழினை இகழ்ந்த்தும் அன்றய தினத்தில் மலையாள மனோரமா பாத்திரிக்கையின் தலைப்பு இதுதான்
  "தமிழனுக்கு பாடம் சொல்லி கொடுப்பவன் என்றுமே மலையாளத்தான் தான்" இதில் பரத்து எனும் பரதேசி செய்வதில் வியப்பு ஒன்றும் இல்லை!அஜீத்து செய்வது தவறோன்றும் இல்லை இவர்களை ஆதரிக்கும் நாம் தான் நம்மை நாமே செருப்பால் அடித்து கொள்ளவேண்டும்!

 4. குப்பன்.யாஹூ Says:

  பரத்தின் படங்களை தமிழர்கள் புறக்கணிப்போம்.

  குப்பன்_யாஹூ

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails