மாணவர்களும் கலந்து கொண்டனர், ஈழதமிழர்களை காப்பதில்

தமிழர்களுக்கு நல்லது எது நடந்தாலும், குள்ள நரிகள், இது அரசியல் சுயநலத்துக்கு நடப்பதாக குறி தமிழர்களுக்கு ஆதரவில்லை என்று பொய்பிரச்சாரம் செய்ய நினைக்கும் குள்ள நரிகளே, இந்த மாணவர் போராட்டத்துக்கு உங்களின் பதில் என்ன, இவர்களுக்கு ஏதும் சுயலாபம் இருக்கிறதா என்ன. இந்த மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எந்த ஒரு புரட்சிக்கும் வித்திடுவது மாணவர்களே. நீங்கள் நினைத்தால் அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
(2 ஆம் இணைப்பு: மேலதிக படங்கள்)

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து இந்திய மாணவர் பெருமன்ற தலைவர் திருமலை தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சிறிலங்கா அரசை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்தும், சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.




இந்திய அரசே! இலங்கையில் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்து!

இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவியை உடனே நிறுத்து!

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்!

என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


சுமார் இரண்டு மணிநேரம் ஆவேசமாக போராட்டம் நடத்திய மாணவர்கள் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

அதேபோன்று சென்னை மாநில கல்லூரியில், கல்லூரி தலைவர் மாணவர் பிரசாத் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

சென்னை நந்தனம் கலை கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோன்று சென்னையில் பெரும்பாலான கல்லூரிகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரி-பள்ளிகளில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதேபோன்று தமிழ்நாடு தலைமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிறிலங்காவைக் கண்டித்து சாலை மறியல் மற்றும் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தினர்.

வடசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிடர் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் சார்பில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.


மேலும் தமிழ்த் திரையுலகத்தினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.10.08) இராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த உள்ளனர்.

இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் பகல் நேரக் காட்சிகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    தமிழகத்தின் கொந்தளிப்பை இந்தியாவும்,சிங்கள இலங்கையும்
    சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

    இது அவர்களின் அடித்தளத்தையே ஆட்டி ஆப்பு வைக்கப் போகிறது என்பதைப் புரிந்து நடந்து கொள்வதே அனைவர்க்கும் நல்லது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails